சென்னையில் குழந்தைகள் குறித்த உரையாடல்

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்

கடந்த ஒரு வருடமாக வெற்றிக்கரமாக கோவையில் நடந்த குழந்தைகள் குறித்த உரையாடல் நிகழ்வு நண்பர்களின் உதவியுடன் திருப்பூர், பெங்களூர் என மெல்ல மெல்ல தனது சிறகுகளை விரிக்க துவங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னையில் நடக்கவுள்ளது. அதன் அறிமுகம்.

குழந்தைகளைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உண்மையிலேயே பலருக்கு, இல்லை சிலருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் எதிலிருந்து எப்படி அறிந்துகொள்வது? ஏதாவது புத்தகத்திலிருந்தா? அனுபவம் நிறைந்த தனிமனிதர்களிடமிருந்தா? அறிவியல் ரீதியான ஆய்வுகளிலிருந்தா? குழந்தையிடமிருந்து அறிந்துகொள்ளலாம், அதுவும் ஒவ்வொரு குழந்தையிடம் இருந்தும் என்கிறார் ஜான் ஹோல்ட். குழந்தைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வதை எப்படி நாம் சரி செய்யலாம் என்று நீண்ட நேரம் நண்பர்கள் பேசிக்கொண்டார்கள். ஒருவர் வந்து குழந்தைகளே சண்டையிட்டு சரிசெய்துகொள்வார்கள் என்றார். இதை எப்படிப் புரிந்துகொள்வது? குழந்தைகளின் சுதந்திரம், அகமகிழ்ச்சி பற்றி அக்கறை உள்ளவர்களிடம்கூட குழந்தைகளின் செயல்களில் குறுக்கிடாமல் இருப்பது பற்றிய கேள்விகள் வந்துவிடுகிறது. தன்முனைப்பு (ego) பற்றிய சிரத்தையற்ற குழந்தைகளை தன்முனைப்புக்குப் பழக்கமாகிவிட்ட பெரியவர்கள் புரிந்து வளப்படுத்துவதில் நிறைய கேள்விகளும் உரையாடல்களும் நிறைந்திருக்கிறது.

என்னோடு தொலைபேசியில் பேச போட்டிபோட்டு தங்கை அக்காவை அடித்துவிட்டு வெற்றியோடு பேச வந்தாள்.
நான் : அக்காவ அடிச்சியாமா?
தங்கை : சொல்லமாட்டேன்…..

தர்க்கங்களிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளும்போதும் கடக்கும்போதும் குழந்தைகளை சுலபமாக நெருங்க முடிகிறது.
குழந்தைகளைப் புரிந்துகொள்வதும் ஜான் ஹோல்டைப் புரிந்துகொள்வதும் ஒன்றுதான் என்று நினைக்கத் தோன்றுகிறது.
ஜான் ஹோல்டின் *எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்* புத்தகம் நடைமுறைக்கு சாத்தியமற்றதாக, அனுபவக் குறிப்புகளாக, புரிந்துகொள்ள சிரமமானதாக ….. எனப் பலவாறு வாசிக்கப்படுகிறது.

ஜான் ஹோல்ட் சொல்லும் குழந்தைகளின் அகச்சுதந்திரத்தோடு பேசிப் பார்க்கலாம் வாருங்கள். கதை, விளையாட்டு, கேள்விகள் என குழந்தைகளுக்கு இணக்கமான ஒரு மொழியோடு உரையாடலாம்.

ஆர்வமுள்ளவர்கள் தங்கள் வருகையை செப்டம்பர் 29க்குள் பதிவு செய்து கொள்ளவும். (25 நபர்கள் மட்டும் – பங்கேற்புக் கட்டணமில்லை )

நாள் : 30 செப்டம்பர், 2018 ஞாயிறு இடம் : பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி, குன்றத்தூர், சென்னை. நேரம் : காலை 9:30 – மாலை 5:00 பதிவிற்கு : குட்டி ஆகாயம் 98434 72092 / சிலேட்டு 98422 02730

Leave a comment