பஞ்சு மிட்டாய் சிறார் காலாண்டிதழ் – சந்தா விபரங்கள் மற்றும் கிடைக்குமிடம்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஆனந்தம்! மகிழ்ச்சி!

ஒரு குழந்தைகள் பத்திரிகையின் லட்சியமாதிரியாக பஞ்சுமிட்டாய் 12 வெளிவந்திருக்கிறது. பாடல், கதை, விளையாட்டு, கேள்விபதில், சொல்விளையாட்டு, கீரிகாமி, விளையாட்டு மேப், என்று அத்தனை அம்சங்களும் மகிழ்வூட்டுகின்றன.

எல்லாம் வண்ணமயம். ஓவியங்கள் அழகு. வடிவமைப்பு அற்புதம். குழந்தைகளும் வரைந்திருக்கிறார்கள். குழந்தைகள் பத்திரிகை இப்படித்தான் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு வாங்கித்தர வேண்டிய இதழாக பஞ்சு மிட்டாய் வந்திருக்கிறது.

வாழ்த்துகள்!

– எழுத்தாளர் உதயசங்கர்
(தலைவர் – தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம்)

சிறார் உலகை பிரதிபலிக்கும் நோக்கத்துடனே பஞ்சு மிட்டாய் காலாண்டிதழ் இயங்குகிறது. சிறார்களின் படைப்பும் முழு சுதந்திரத்துடன் இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றோம். சிறார்கள் சொல்லும் கதைகள் அவர்களது மொழியிலே பதிவு செய்யப்படுகிறது, ஓவியங்களிலும் கூட பெரியோர்களின் தலையீடு இல்லாமல் தான் இருக்கிறது. இதழுக்கான படைப்புகளும் நிகழ்வுகள் மூலம் எதார்த்தமான சூழலில் எடுக்கப்படுகிறது. வாசிக்கும் பழக்கத்தை சிறார்களுக்கு விதைக்கும் வகையில் இதழ் வடிவமைக்கப்படுகிறது.

பஞ்சு மிட்டாய் இதழ் சிறுவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்,குழந்தை செயற்பாட்டாள்ர்கள், எழுத்தாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்களது பகுதி பிள்ளைகள் பஞ்சு மிட்டாய் இதழை ரசித்ததைப் பற்றியும், இதழைப் பார்த்த பிறகு சிறுவர்களுக்கு கதைகள் மீது ஏற்பட்ட ஆர்வத்தைப் பற்றியும், முதன் முதலாக குழந்தைகள் சுயமாக உருவாக்கிய கதைகள் பற்றிய மகிழ்ச்சியையும் பகிர்ந்து வருகின்றனர். (பஞ்சு மிட்டாய் பற்றின கருத்துகளை இங்கே வாசிக்கலாம்)

கதைகள், பாடல்கள், வாசிப்பு அனுபவம், பாரம்பரிய‌ விளையாட்டு, புதிர், காமிக்ஸ், அறிவியல் கேள்வி-பதில்கள், சூழலியல், புதிய விளையாட்டுகள், வண்ணமையான் ஓவியங்கள் என பஞ்சு மிட்டாய் சிறார்களின் மகிழ்ச்சையை மட்டுமே ஆதரமாக கொண்டு செயல்படுகிறது.

பஞ்சு மிட்டாய் சந்தா விபரங்கள் :

இரண்டு வருட சந்தா (10 இதழ்கள்) – ரூ.750/- (தபால் செலவு தனி: 100/-)

ஒரு வருட சந்தா (5 இதழ்கள்) – ரூ.375/- (தபால் செலவு தனி: 50/-)

தனி இதழ் : ரூ.75/-

வங்கி விபரங்களுக்கு : ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு – +91-9731736363 / editor.panchumittai@gmail.com

குறிப்பு: வெளிநாட்டு தமிழ் சொந்தங்களுக்கும் அனுப்பி வைக்கிறோம்.

இதழ்களுடன் சேர்த்து இரண்டு பாடல் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளோம். அழ. வள்ளியப்பாவின் பாடல்களில் மிக எளிமையும் துள்ளலும் நிறைந்த 15 பாடல்களை தொகுத்து “ஏழும் ஏழும் பதினாலாம்” (விலை: 40ரூ) என்று வெளியிட்டுள்ளோம். பஞ்சு மிட்டாய் குழுவில் உருவாகிய 33 பாடல்களை தொகுத்து “குட்டித் தோசை”(விலை: 80ரூ) என்ற சிறார் பாடல் புத்தகத்தையும் கொண்டு வந்துள்ளோம்.

இணையம் மூலம் வாங்க :

CommonFolks

 

 

Crownest.in | Tamil Environment Books, Bird Books in Tamil, Animal Books, Children books in Tamil

 

நன்றி.

Leave a comment