குழந்தைகள் குறித்த உரையாடல் (நிகழ்வு 8)

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தாய்மொழிக்கல்வியாலும் நெருக்கடியற்ற கல்விமுறையாலும் வளர்ந்த இன்றைய பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்மொழி, விளையாட்டு, உரையாடல் என அனைத்தையும் மறுப்பவர்களாக மாறியிருக்கிறார்கள். இதனால் குழந்தைகளிடம் உருவாக இருக்கும் அகச்சிக்கல்கள் என்ன?

மரபுக் கல்வியானாலும் மெக்காலே கல்வி ஆனாலும் இன்று அரசு / தனியார் பள்ளிகள் குழந்தைகளிடம் குவித்து வரும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த கல்வியானாலும் அது அடிப்படையில் குழந்தைகளை மையப்படுத்தியதாக இல்லை. குழந்தைகளின் அகவுலகத்தை கவனத்தில் எடுக்காத கல்வியை எப்படி முழுமையான கல்வியாக ஏற்க முடியும்? பின் எது இன்றைய குழந்தைகளுக்கான கல்வி?

ஒரு சிறுநடையில் நமக்கு அடைய வேண்டிய இலக்கு மட்டும் கவனத்தில் இருக்கையில் குழந்தைகளுக்கு காற்று வீசுவதும் மைனா குறுக்காக பறப்பதும் யாசகர்கள் சாலையில் கிடப்பதும் துல்லியமாகத் தெரிகிறது. நிம்மதியற்ற மனிதர்கள் முழுமையாக இயங்கும் குழந்தைகளுக்கு கற்றுத்தர நினைப்பது எவ்வளவு ஆபத்தானது?

வேறுவேறு நூற்றாண்டுகளில் வேறுவேறு நாடுகளில் வாழ்ந்த குழந்தைகள் – கல்வி ஆர்வலர்களின் புத்தகங்களின் அடிப்படை குழந்தைகளின் அகச்சுதந்திரம். குழந்தைகளின் நிறைவான வரும்காலத்திற்கு இதை உணர்வது அவசியம் என்பதை எத்தனை பெற்றோர்கள் புரிந்திருக்கிறார்கள்? எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தை சேர்க்கப்படும் பள்ளியின் ஆசிரியர்கள் இதை அறிந்திருக்கிறார்கள் என்பதை உறுதிசெய்து குழந்தைகளை ஒப்படைக்கிறார்கள்?

இன்று பரவலாக குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகளான கராத்தே, சிலம்பம், இசை மற்றும் விளையாட்டு பயிற்சிகள் குழந்தைகளின் இயல்பையும் தனித்த தன்மையையும் வளப்படுத்துபவையாக இருக்கின்றனவா? கல்வியின் நோக்கமான மனிதனை முழுமையாக மாற்றுவதிலும் சமூகத்தோடு பிணைப்பதிலும் பங்காற்றுகின்றனவா?

தொடர்ந்து புத்தகங்களை மையமாக வைத்து நடந்து வந்த உரையாடல் நிகழ்வு இம்முறை குழந்தைகள் பற்றிய நமது நேரடியான புரிதலின்மேல் நிகழ்கிறது. குழந்தைகள் யார்? குழந்தைகளிடம் கற்றல் எவ்வாறு நிகழ்கிறது? இன்றைய குழந்தைகளுக்கான முழுமையான கல்விமுறை எது? போன்ற அடிப்படையான சில கேள்விகள் குழந்தைகளுகளின் வாழ்வுக்கு அருகில் நம்மை அழைத்துச் செல்லும்.

எழுத்து – கதைகள் – விளையாட்டு – குழந்தைகளின் கேள்விகளுக்கான பதில் அறிதல் – கலந்துரையாடல் வடிவில் நிகழ்வு நடைபெறும்.

(வாய்ப்பு உள்ளவர்கள் ஜான் ஹோல்ட், மாண்டிசோரி, பெட்ரண்ட் ரஸல் மற்றும் பாவ்லோ பிரையிரே நூல்களை வாசித்து வரலாம்.)

நாள் : ஆகஸ்ட் 5, 2018 ஞாயிறு
இடம் : தாமஸ் அரங்கம், கோவை
நேரம் : காலை 9:30 – மாலை 5:30

ஆர்வமுள்ளவர்கள் தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளவும்.

பங்கேற்பு கட்டணம் ரூ.200/-
(சிற்றுண்டி, மதிய உணவுடன்)

விபரங்கள மற்றும் பதிவிற்கு
98434 72092
95001 25125

ஒருங்கிணைப்பு:

குட்டி ஆகாயம்
பஞ்சுமிட்டாய்
இயல்வாகை

Leave a comment