மாநாட்டு மேடையில் மாண்புமிகு காமராசரின் அருகில் அமர்ந்திருந்தேன். வரவேற்பு உரை: ஆற்றுகையில், முதலமைச்சர் என்னோடு பேச்சுக் கொடுத்தார். பேசாமலிருக்க முடியமா?
“நீங்கள், சென்னை மாநகராட்சியில் கல்வி அலுவலராக இருந்தீர்கள் அல்லவா?”
“ஆமாம்” என்று கூறினேன்.
“எத்தனை ஆண்டுகள் இருந்தீர்கள்?”
“மூன்று ஆண்டுகள் அய்யா!”
“மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு போடுகிறார்களே, அதனால் ஏதாவது பலன் உண்டா?”
“உண்டுங்க.”
“என்ன பலன்?”
“வருகை அதிகமாகும் பலன் அய்யா!”
“எப்படிச் சொல்லுகிறீர்கள்?”
“பள்ளிகளில் திங்கள் முதல் வெள்ளி வரை, பகல் உணவு போடுகிறார்கள். அந் நாள்களில் வருகை நன்றாக இருக்கும். சனிக்கிழமை அரை வேளைப் பள்ளி என்ற சாக்கைச் சொல்லி, அன்று சாப்பாடு போடுவதில்லை. சனிக்கிழமைகளில் வருகை பாதியாக வீழ்ந்துவிடும். மதிய உணவு கொடுத்தால் ஏழை எளியவர்களை அதிகமாகப் பள்ளிக்கு இழுக்கலாம் அய்யா!” இந்த நீண்ட பதிலுக்குப் பிறகு,
“மதிய உணவு போட, என்ன செலவாகிறது?” என்று முதலமைச்சர் என்னைக் கேட்டார்.
“சாப்பாடு ஒன்றுக்கு ஒன்றரை அணா செலவாகிறது அய்யா” என்றேன். அப்போது, அணா நாணயமே பழக்கத்தில் இருந்தது. காசு கணக்கு இல்லை.
“ஒன்றரை அணா என்பதற்கு ஏதாவது அடிப்படை உண்டா? அவ்வளவுதான் அவர்களால் ஓதுக்க முடியுமென்பது நியாயந்தானா?” என்று முதல்வர் காமராசர் கேட்டார்.
இதே கேள்வியை, நான் மாநகராட்சிப் பணியில் இருந்தபோது கேட்டுத் தெளிவு பெற்று இருந்தேன். ஆகவே, குயங்காமல் பதில் கூற முடிந்தது. “சென்ற சில அண்டுகளாகவே, படி அரிசி பத்தணாவுக்கு விற்கிறது. ஒருபடி, அரிசி சமைத்தால், அந்த வயதுப் பிள்ளைகள் பத்துப் பேர் வயிறார உண்ணலாம்… அப்படியென்றால் ஒரு பிள்ளைக்கு அரிசிச் செலவு ஒரு அணா.
“சாப்பாட்டிற்குச் சாம்பாரும் மோரும் உண்டு. காய்கறி! உட்பட சமையல் பொருள்களுக்கும் அதை மொத்தமாகச் சமைத்து, பன்ளிகளுக்குக் கொண்டு போய்க் கொடுக்கவும் செலவு சராசரி அரிசிச் செலவில் பாதி. இந்த நீண்ட விளக்கத்திற்குப்பின் முதல்வர்,
“மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கிறவர்களில். எவ்வளவு பேர்களுக்கு சாப்பாடு கேவைப்படுகிறது?” என்று குறிப்பாகக் கேட்டார்.
“நான் அங்கிருந்தபோது, நூற்றுக்குப் பதினைந்துபேருக்குச் சாப்பாடு போடப் பணம் ஒதுக்கி வந்தார்கள். “அது, இருபது விழுக்காடானால், – எல்லா ஏழை. மாணாக்கருக்கும் வயிறாரச் சோறுபோட இயலும் என்று அதில் அனுபவம் உள்ளவர்கள் கூறக்கேட்டு இருக்கிறேன்” என்றேன்.
“சென்னை நகரில் இருபது விழுக்காட்டினருக்கு இலவச உணவு தேவைப்பட்டால், நாட்டுப்புறங்களில் மேலும் அதிகம் பேருக்கு, ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கலாம் இல்லையா?”என்றார் முதல்வர் காமராசர்.
“அம் அய்யா! நம். சென்னை மாகாணத்தில் வறியோர் விழுக்காடு இருபத்தைந்து என்பது புள்ளி விவரத் துறையின் மதிப்பீடு!” என்றேன்.
“மாகாணத்தில் வறியோர். நூற்றுக்கு இருபத்தைந்து பேர்களார்னால், நாம் மூன்றில் ஒரு பிள்ளைக்காவது ஏற்பாடு செய்தால்தான், நிறைவாகும்” என்றார்.
“உண்மைங்க” என்றேன்
“சாப்பாடு போடுவதானால் எத்தனை நாளைக்குப்போட வேண்டும்?” என்று காமராசர் கேட்டார்.
“ஆண்டுக்கு இருநூற்றுப் பத்து நாள்களுக்குப் போடவேண்டும்” என்றேன்:
“அப்ப, ஒருத்தனுக்கு ஆண்டுக்கு இருபது ரூபாய் பிடிக்கும்” என்று முதல்வர் மதிப்பிட்டார்.
“உண்மைங்க” என்றேன்.
“இப்போதுள்ள நிலையில் எல்லா ஏழைப் பிள்ளைகளுக்கும் இலவச உணவு கொடுக்கத் தொடங்கினால், எவ்வளவு செலவாகும்?” என்று கேட்டார்.
“தொடக்கப் பள்ளிகளில் பதினாறு இலட்சம் பேர்கள் படிக்கிறார்கள். அவர்களில் அய்ந்து இலட்சம். பேர்களுக்கு உணவு கொடுக்கக் குறைந்தபட்சம் ஒரு கோடி. ரூபாய் செலவாகும். அனால், முதல் ஆண்டில், எவ்வளவு சுறுசுறுப்பாகச் செயல்பட்டாலும், முன்னேற்பாடுகளில் சில திங்கள் கழிந்துவிடும்; எனவே அரைக்கோடி, இருந்தாலும் தாராளம். அனால் சில ஆண்டுகளில், அந்தச் செலவு மூன்று நான்கு கோடிகளாக உயர்ந்து விடும்” என்று செலவின் வீச்சைக் காட்டினேன்.
“சரிதான்”. என்றார் முதல்வர்.
அவ்வேளை வரவேற்புரை முடியவும் மாநாட்டுத் தலைவர் மாநாட்டைத் தொடங்கி வைக்கும்படி. மாண்புமிகு காமராசரை அழைத்தார்.
காமராசரின் உரை:
முதலமைச்சர் காமராசர், மரபுப்படி, மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி கூறினார்.
“தன்னாட்சி பெற்ற நம் நாட்டின் மக்கள் அனைவரும் முன்னுக்கு வந்து, கவலையற்ற நல்வாழ்வு வாழ வேண்டும். அதற்காகவே, நாட்டு விடுதலைக்குப் போராடி அதைப் பெற்றோம். மனித மேம்பாட்டிற்கு வேராக இருப்பது கல்வி. அறிவு அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அந்த அளவிற்குக் கல்வியை நாட்டில் பரப்ப வேண்டும். கல்வி வளர்ச்சிக்குப் பலசாராருடைய ஒத்துழைப்பும் உதவியும் தேவை.
கடந்த காலத்தில் தனியார் துறையில் பலரும் நல்லபடி பாடுபட்டதால்தான், இப்போதுள்ள அளவு எழுத்து அறிவாவது பெற்றுள்ளோம். தனியார் நிர்வாகிகள் தொடர்ந்து தொண்டு மனப்பான்மையோடு, கல்வியை வளர்த்து வாருங்கள். எல்லா ஊருக்கும் தொடக்கப் பள்ளி நமது உடனடிதேவை, நம் நாட்டில் ஒவ்வோர் ஊரிலும் தொடக்கப்பள்ளியை நிறுவ வேண்டும். பள்ளி இருக்கிற ஊர்களில்கூட எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்குப் போவது இல்லை ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசப் பகல் உணவு. ஏழைப் பையன்களுக்கும் பெண்களுக்கும் வயிற்றுப்பாடு பெரும்பாடாக இருக்கிறது. ஒருவேளை கஞ்சி கிடைத்தாலும் போதுமென்று ஆடு மாடு மேய்க்கப் போய், தங்கள் எதிர்காலத்தைப் பாலாக்கிக் கொள்ளுகிறார்கள்.
அப்படிப் பட்டவர்களையும் பள்ளிக்கூடங்களுக்கு வரும்படி செய்வது முக்கியம். அதற்கு ஏற்றவழி, மாநகராட்சிப் பள்ளிகளில் (இலவச உணவு) போடுவது போல, மதியம் பள்ளிகளிலேயே உணவு போடுவதே. அதற்கு எவ்வளவு செலவாகும் என்று இப்போது, இயக்குநரோடு கணக்குப் போட்டுப் பார்த்தேன். தொடக்கத்தில் ஒரு கோடி, சில அண்டுகளில் மூன்று நான்கு கோடிகூட ஆகும். நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு இது பெரிய பணம் அல்ல.
தேவைப்பட்டால், அதற்காக, தனிவரிகூடப் போடலாம். இருக்கிற வரியிலோ, புது வரியிலோ, படிப்பவர்களுக்கு இலவச உணவு கொடுக்க ஏற்பாடு செய்வோம். அதற்கு எல்லோரும் ஓத்துழைக்கும்படி வேண்டுகிறேன். ” என்று பேசினார்.
மாநாட்டின் முற்பகல் நிகழ்ச்சிக்குப்பின். முதலமைச்சர் காமராசர் விடைபெற்றுக் கொண்டார்.
அப்போது. என்னைப் பார்த்து, “மாகாணம் முழுவதும் பள்ளிகளில் மதிய உணவு போட, ஒரு திட்டம் தட்டுங்கள். தீட்டி முடிந்ததும் வத்து சொல்லுங்கள்” என்று முதல்வர் காமராசர் எனக்குக் கட்டளையிட்டார்.
கற்றோரின் கலக்கம் : “சுதந்திரம் நம் பிறப்புரிமை” என்ற அரசியல் மனித உரிமை
மூரசு, நம்மை ஆண்ட ஆங்கிலேயருக்கு மட்டும் ஆத்திரமூட்டியது. தம்மவர்களைத் தட்டி எழுப்ப வேண்டிய அளவுக்கு அது இன்னும் எழும்பவில்லை.
“அதேபோல், கல்வி மக்கள் பிறப்பு உரிமை. அதற்கு ஆவன எல்லாம் செய்வோம்” என்ற அத்த அறிவிப்பு, கற்றோர் நடுவில் கலக்க மூட்டியது. “முன்னர் படித்தோர், முன்னர் செல்வாக்குப் பெற்றோர்” என்ற ஆதாயத்தை உடையவர்கள் ஆத்திரங்கொண்டனர்.
சென்னையிலிருந்து வெளிவந்த ஓர் ஆங்கில நாளிதழ் இதைக் குறிப்பிட்டுக் கண்டனத் தலையங்கம் எழுதிற்று. “ஏற்கெனவே, மக்கள் வரிச் அமையால் அவதிப்படுகிறார்கள். அப்படி இருக்க, மதிய உணவு. போடுவதற்கு என்று, மேலும் ஒரு வரி எவ்வளவு சிறிய அளவிலாயினும் விதிப்பது சமுதாயத்தின் முதுகெலும்பை முறித்துவிடும். சமுதாயத்தின் பொருளியல்
நிலையை வளர்த்தால், மற்றதெல்லாம் சரியாகிவிடும்” என்று எதிர்ப்பு தெரிவித்தது.
மக்களிடமிருந்து விலகியே வாழ்ந்து, மக்கள் தேவைகள் என்ன என்பதைப் புரியாமல், பெரியவர்கள் “சீட்டாட்டக் கிளப்” மனப்பான்மையில் எழுப்பிய, பொறுப்பில்லாத எதிர்ப்பை ஆதரிக்க வந்தோர் வெகு சிலரே.
குறிப்பு : 1950-1960களில் நடந்தது
(தொடரும்)