ஓசுரில் பஞ்சு மிட்டாய் சிறார் நிகழ்வு

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

புத்தகத் திருவிழாக்கள் எப்பொழுதும் மகிழ்வை தருபவை. வாசிப்பு எனும் வேறு ஒரு உலகை தெரிந்தோ தெரியாமலோ சிறார்களுக்கு அறிமுகம் செய்யக் கூடியவை இந்தப் புத்தகத் திருவிழாக்கள். அவை தொடர்ந்து பல இடங்களில் சின்னதாகவும் பெரிதாகவும் நடந்துக் கொண்டே இருக்க வேண்டும். இதுப் போன்ற திருவிழாக்களில் கொண்டாட்டங்களுக்கும் பெரிதும் இடம் தர வேண்டும். எழுத்தாளர்களின் சந்திப்புகள், புத்தக வெளியீடுகள், கலை நிகழ்வுகள் என பல வடிவங்களை முன் நிறுத்த வேண்டும். பல இடங்களில் அதுப் போன்றும் நடக்கின்றன,ஆனால் பெரும்பான்மையான நிகழ்வுகள் சிறிய வட்டங்களிலே அடங்கி விடுகிறது. பரத நாட்டியம், சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடுதல், திருக்குறள் ஒப்பித்தல, பேச்சுப் போட்டியென மிக சுருங்கிய வட்டத்திலே நாம் உலா வந்துக் கொண்டிருக்கிறோம்.

இதுப் போன்ற சிறார்கள் கூடும் இடங்களில், உண்மையான திருவிழா உணர்வை சிறார்களுக்கு கொண்டு வர வேண்டும். அப்பொழுது தான் வாசிப்பு, கலை, இலக்கியம் என அனைத்து வடிவங்களையும் சிறார்கள் கண்டு கேட்டு ரசித்து உணர முடியும். அதுவே அடுத்த தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டிய கடமையும் கூட.

இந்த உணர்வோடு தான் பஞ்சு மிட்டாய் சிறார் குழு வரப்போகின்ற 7 வது ஓசுர் புத்தகத் திருவிழாவில் நான்கு நாட்கள் சிறார்களுக்கு நிகழ்வுகள் நடத்த உள்ளது. சென்னை, தஞ்சை, பெங்களூரை தொடர்ந்து தற்பொழுது ஓசுரிலும் நல்ல ஆதரவுகள் கிடைக்குமென நம்புகிறோம். இந்த நிகழ்வு முழுக்க முழுக்க சிறார்களின் மகிழ்ச்சியை மையமாக கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. கதைகள், பாடல்கள், பாடல்களுடன் சின்ன சின்ன ஆட்டங்கள், மரபு விளையாட்டுகள் என சிறியோரும் பெரியோரும் சேர்ந்து கொண்டாடி மகிழும் வகையில் அமைந்திருக்கும். வாருங்கள் நண்பர்களை, உங்கள் பகுதி சிறார்களுடன் வாருங்கள், அவர்களுடன் நாமும் மகிழ்வான தருணங்களை உருவாக்கலாம்.

பஞ்சு மிட்டாய் நிகழ்வு நடைபெறும் நாட்கள்:

14.07.2018 , சனி
15.07.2018 , ஞாயிறு

21.07.2018 , சனி
22.07.2018 , ஞாயிறு

நேரம் : மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இடம் : KAP கல்யாண மண்டபம் , ஓசுர்

தொடர்புக்கு:

ஜெயக்குமார் : 90081 11762
பிரபு : 9731736363
சிவகுமார் : 8754862012

புத்தகத் திருவிழா ஏற்பாடு :

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF ) மற்றும் ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கம் (HOFARWA )

புத்தகத் திருவிழா நடைபெறும் நாட்கள் : ஜூலை 13 – 24

வாருங்கள்! உங்கள் பகுதி குழந்தைகளுடன் அவசியம் வாருங்கள். ஆடி,பாடி,கொண்டாடி மகிழலாம்.

Leave a comment