மொழிபெயர்ப்பு கலை – விளக்கம் ,தேவை
மனித இனம் பல்வேறு நாடுகளில் கிளைத்து வாழ்கிறது. உலகில் சுமார் 6500 மொழிகள் பேசப்படுகின்றன. பல நாடுகளில், பல மொழி பேசும் மனிதர்கள், தமது முயற்சியால் பெற்ற அறிவை, ஞானத்தை இந்த உலகம் முழுவதும் கொண்டு செல்ல மொழிபெயர்ப்பு துணை செய்கிறது.
பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள், பரஸ்பரம் ஒருவரின் உணர்வுகளை, பண்பாட்டுக்கூறுகளை, வரலாற்றை, கலை வடிவங்களை, இலக்கியங்களை அறிந்து கொள்ள மொழிபெயர்ப்பு உதவுகிறது.
மொழிபெயர்ப்பு என்பது மூலநூலின் முழு உணர்வினையும், கருத்துகளையும், நிகழ்வுகளையும், உரையாடல்களையும், சிறிதும் விடுபடாமல், அதிகப்படுத்தாமல் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாற்றுதலே ஆகும்.
ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றுவது மொழிபெயர்ப்பு (Translation) என்பதற்கும், மொழியாக்கம் (Transcreation) என்பதற்கும் திட்டவட்டமான வேறுபாடுகள் உண்டு. இதில் முதலாவது கலையல்ல. இரண்டாவது கலையாகும். மூலத்தைத் தழுவியது. மறுஆக்கம் – இதில் மூலத்தின் சாரத்தை உணர்ந்து தன்வயப்படுத்திக் கொள்ளும் போக்கிற்கு இடம் உண்டு. (சுருக்கம், விரிவாக்கம்)
மொழிபெயர்ப்பில் மொழிகளின் பங்கு
மொழிபெயர்ப்பில் பங்குபெறும் மொழிகளைத் தருமொழி, பெறுமொழி, வழிமொழி என அழைக்கிறோம்.
தருமொழி
ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குக் கருத்துகளை மொழிபெயர்க்கிறோம். முதல்மொழியை மூலமொழி அல்லது தருமொழி என்கிறோம். தமிழிலிருந்து இந்திக்கு மொழிபெயர்ப்பு செய்தால், தமிழ்மொழி தருமொழி ஆகிறது. ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டால் அப்போது ஆங்கிலம் தருமொழி ஆகிறது.
பெறுமொழி
மொழிபெயர்ப்புப் பணியில் தருமொழியிலிருந்து மற்றொரு மொழிக்குப் பெயர்க்கும் போது பெறுமொழி ஆகிறது. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு ஒரு நூலை மொழிபெயர்க்கிறோம் என்றால் அப்போது தமிழ் தருமொழி, ஆங்கிலம் பெறுமொழி. அதுபோல ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மொழிபெயர்க்கப்படும் போது ஆங்கிலம் தருமொழியாக, இந்தி பெறுமொழியாக உள்ளன.
வழிமொழி
ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கப்படும் போது அதில் முதல்மொழியான தருமொழியும் இரண்டாம் மொழியான பெறுமொழியும் இருப்பது இயல்பு. அதே மூலமொழி சீனமாகவும் இரண்டாம் மொழி ஆங்கிலமாகவும் மூன்றாம் மொழி தமிழாகவும் இருந்தால் அப்போது இரண்டாம்மொழியாகிய ஆங்கிலத்தை வழிமொழி என்கிறோம்.
மொழிபெயர்ப்பு அணுகுமுறை– அறிஞர்கள் கருத்து
“எட்டுத் திக்கும் செல்வோம்; கலைச் செல்வங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்.”
“தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.”
“பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்.”
– மகாகவி பாரதி
“மொழிபெயர்ப்பு என்பது மிகவும் நுணுக்கமான வேலை. அதிலும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பது இலகுவான செயல் அல்ல. தமிழின் வாக்கிய அமைப்பு ஆங்கில வாக்கிய அமைப்புக்கு நேர் எதிராக இருப்பதால், மொழிபெயர்ப்பு கடினமாகிறது. ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்கள் இருந்தால் மட்டும் போதாது. மூலக்கதைக்கு விசுவாசமாக இருப்பதோடு அதற்குச் சொந்தமான உணர்வுகளையும் மொழிபெயர்ப்பு பிரதிபலிக்கவேண்டும்.”
– புறநானூறு மொழிபெயர்த்த ஜோர்ஜ் ஹார்ட்
“ஒவ்வொரு மொழியும் ஒரு உலகம். மொழிபெயர்ப்பு என்ற விஷயம் இல்லையென்றால் மவுனத்தை எல்லைகளாகக் கொண்ட வட்டாரங்களில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருப்போம்”
– ஜார்ஜ் ஸ்டெய்னர்.
“மூலத்துக்கு இணையானப் பெறும்மொழி நிகரனைக் (equivalent) கண்டறியும் செயல்முறையே மொழிபெயர்ப்பு”
– ஐசடோர் பிஞ்சக்
“மூலத்தின் தாய்மொழி வாசகன் அடையும் அனுபவங்களைப் பெற வேண்டும். அதுவே மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாகும்”
– அயன்பின்லே
“மூலமொழியில் உள்ளவற்றைப் பெறுமொழியில் மாற்றித் தருவது மொழிபெயர்ப்பு. இது சொல்லுக்குச் சொல் தருவதன்று; பொருளினை முழுமையாகத் தருவதாகும்.”
– மாலின் ஒஸ்கி
“அயல் மொழியிலிருக்கும் ஒரு நூலினைத் தனது நாட்டுப் பாரம்பரியத்துக்கு ஒப்பப் பெயர்த்து எழுதுதலும் ஒரு படைப்புச் செயலே .”
– வை. சச்சிதானந்தன்‘
மொழிபெயர்ப்புத் தோற்றம்
சுமேரியர்களின் ‘கில்கமெஷ் காப்பியம்’ (கி.மு. 2000) தென்மேற்கு ஆசிய மொழிகளில் பகுதியாக மொழிபெயர்க்கப்பட்டது.
கிரேக்க காப்பியங்களான, கிரேக்க மொழியில் ‘ஹோமர்’ எழுதிய ‘இலியட்’, ‘ஓடிசி’ கிமு 240 இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்ததே காலத்தினால் தொன்மையானது.
தமிழில் மொழிபெயர்ப்புகள்
தமிழ்நாட்டில் தொல்காப்பியர் காலத்திலிருந்தே மொழி பெயர்ப்புச் சிந்தனை நிலவி வந்துள்ளது. பண்டைய இலக்கண நூலான தொல்காப்பியத்தில் மொழிபெயர்ப்புப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
பதினாராம் நூற்றாண்டில் தமிழ் இலக்கணம், இலத்தீன் போர்த்துகீஸ் மொழிகளில் எழுதப்பட்டது.
கி.பி. 1710 ஆம் ஆண்டு தமிழ் நாட்டுக்கு வந்த வீரமாமுனிவர், திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்தார். கி.பி. 1840 ஆம் ஆண்டில் ஜி.யூ. போப் திருவாசகம், நாலடியார், திருக்குறளை ஆங்கில மொழியில் பெயர்த்தார். .
பொற்காலத் தொடக்கம்
மொழிபெயர்ப்புகளின் பொற்காலம் வங்க மொழி , ரஷ்ய மொழி இலக்கியங்களை மொழிபெயர்தத காலம் முதலே தொடங்குகிறது.
ராதுகா பதிப்பகம், முன்னேற்றப் பதிப்பகம் போன்றவை மலிவு விலையில் ரஷ்ய இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டு, அறிவுப் புரட்சிக்கு வித்திட்டன. ரா.கிருஷ்ணய்யா, ரகுநாதன், பூ.சோமசுந்தரம் போன்றோர் ஆற்றிய பணிகள் அளப்பரியது.
தமிழ்ப் பதிப்புலக முன்னோடி ‘சக்தி.வை.கோவிந்தன்’ தரமான இந்திய இலக்கியங்களையும், உலக இலக்கியங்களையும் தமிழில் வெளியிட்டார்.
எழுத்தாளரும் விமர்சகருமான க.நா.சுப்ரமண்யம். மொழிபெயர்த்த புத்தகங்களால் இரண்டு மூன்று தலைமுறைகள் உலக இலக்கிய அறிவைப் பெற்றன.
நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்ய அகாடெமி ஆகியவற்றின் மூலமாக இந்திய இலக்கியங்கள் தமிழ் வாசகர்களின் கைகளுக்கு வந்துசேர்ந்தன.
சிறுவர்களுக்கான மொழிபெயர்ப்பு
அடுத்த தலைமுறைக்கு, மொழியின் சிறப்பையும் மொழியின் மீதான ரசனையையும் கொண்டு சேர்க்கும் அடிப்படை ஊடகமாக ‘சிறுவர் இலக்கியம்’ திகழ்கிறது.
“குழந்தைகளை வளரவிடுங்கள்” என்பது சோவியத்ரஷ்யாவின் தந்தை லெனினின் கருத்தாக இருந்தது. எல்லாவற்றையும் படித்துத் தாமே சிந்தித்து முடிவுக்கு வரக் குழந்தைகளுக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதை அவர் ஏற்றுக்கொண்டார்
ஆப்பிரிக்கா கண்டத்தின் பெரும்பான்மையான நாடுகள் இருமொழி, மும்மொழிப் புத்தகங்களை கறுப்பினச் சிறுவர்களுக்காக அறிமுகம் செய்கின்றன. இது ஒரு முன்னேற்றப் பாதைக்கான அணுகுமுறைக்கு உதவுகின்றன. ஷோனா,டெபெல்,ஸோஸா மொழிபேசும் மக்கள், தங்களது தாய்மொழியை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக, இருமொழிப் புத்தகங்களை குழந்தைகள் மத்தியில் அறிமுகம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
குழந்தைகளுக்கான மொழிபெயர்ப்பில் பெரும்பாலும் கதைகளே மொழிபெயர்க்கப்படுகின்றன. கதைகளை மொழிபெயர்ப்பது பிற மொழி பெயர்ப்புகளோடு ஒப்பிட்டு நோக்கும் போது எளிமையானது.
குழந்தைகளுக்கான மொழிபெயர்ப்பில் மூலமொழியின் நீண்ட தொடர்களைச் சுருக்க வேண்டும். எளிய வாக்கியங்கள் அமைக்க வேண்டும். வார்த்தைகள் குழந்தைகள் பேச்சு வழக்கிலேயே இருத்தல் வேண்டும். எந்த வயதுடைய சிறுவருக்காக மொழிபெயர்க்கப்படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப எளிய நடையினைத் தேர்ந்தெடுத்து எழுத வேண்டும்.
குழந்தைகளிடம் அதீத அன்பு கொண்டவர்களால் மட்டுமே அவர்களுக்கான ஆனந்தத்தையும் தர முடியும். குழந்தைகளின் கற்பனை உலகை அவர்களின் கண்முன் கொண்டுவந்த பெருமை முதலில் சோவியத் குழந்தை இலக்கியம் தந்தது.
ரஷ்ய மொழி
ஆன்ட்டன் செகாவ், மக்ஸிம் கார்க்கி, லேவ் தல்ஸ்தோய், தாஸ்தயேவ்ஸ்கி, அலெக்சாண்டர் புஷ்கின், சிங்கிஸ் ஐத்மாத்தவ், நிக்கோலய் நோசவ் …..
- அப்பா சிறுவனாக இருந்தபோது, அலெக்சாந்தர் ரஸ்கின், தமிழில் நா. முகமது ஷெரீபு,
- நீச்சல் பயிற்சி, ரஷ்யச் சிறார் எழுத்தாளர்கள், தமிழில்: சு.ந. சொக்கலிங்கம், என்.சி.பி.எச்.
- விளையாட்டுப் பிள்ளைகள், நிகோலாய் நோசவ், என்.சி.பி.எச்.
- இயற்கை விஞ்ஞானியின் கதைகள், மன்தேய்பெல், அகல்
- மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான், புக்ஸ் ஃபார் சில்ரன்
- புறாவும் எறும்பும், டால்ஸ்டாய், நீலவால்குருவி
- அழகான அம்மா, ரஷ்ய சிறார் கதைகள், யூமா வாசுகி
- கோல்யா சினிட்சினின் நாட்குறிப்புகள், நிகோலாய் நோசவ், தமிழில்: ரகுரு, வாசல்
- மூன்று குண்டு மனிதர்கள், தமிழில்: அன்பு வாகினி, புக்ஸ் ஃபார் சில்ரன்
- நவரத்தின மலை – சோவியத் நாட்டார் கதைகள் – ரா. கிருஷ்ணய்யா.
- பூ. சோமசுந்தரம் – கரடிக்குடித்தனம்’
- டால்ஸ்டாய் கதைகள்- கு.ப.ரா, ப.ராமஸ்வாமி மொழிபெயர்த்துள்ளார்
- குழந்தைகளும் குட்டிகளும், ஒல்கா பெரோவஸ்கயா,
- மூன்று சகோதரர்களும் தந்தையின் புதையலும்- ரா. கிருஷ்ணய்யா– நீலவால் குருவி
- தங்கமான எங்கள் ஊர்- முஸ்தாய் கரீம்– பூ. சோமசுந்தரம்– ஆதி பதிப்பகம்
- பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்- ரோஹிணி சவுத்ரி– சசிகலா பாபு– எதிர் வெளியீடு
- சத்யஜித் ராயின் ஃபெலூடா கதை வரிசை, வீ.பா.கணேசன், பாரதி புத்தகாலயம்
- பெருநாள் பரிசு, ஒரு படி அரிசி – பிரேம்சந்த், என்.பி.டி. (இந்தி)
- திபெத்து, நார்வே, கிரிஷ், கிரேக்கம் இந்தியா நாட்டுக் கதைகளை ‘உலக நீதிக் கதைகள்’ என்ற பெயரில் ‘தபஸ்வி 1974- இல் வெளியிட்டார்.
- சீன நீதிக் கதைகள்’ என்னும் பெயரில் தமிழில் ‘ந. கடிகாசலம்’ 2000 – வெளியிட்டார்.
- பிரஞ்சு நீதிக் கதைகளை’ பிரஞ்சு பேராசிரியர் க. சச்சிதானந்தம்
- அரபு மொழி- 1001 இரவுகள் அரபுக் கதைகள்- தமிழில் ‘அற்புதானந்தா’
- ஈசாப் கதைகளை – தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
- ‘பஞ்ச தந்திரக் கதைகள்’ – பி.எஸ். ஆச்சார்யா மொழி பெயர்த்தார்.
ஆங்கிலம் வழி
லூயி கரோல், ரோல் தால் ( எழுத்து மந்திரவாதி)தி ரோல் தால் சில்ட்ரன்ஸ் கேலரி, டாக்டர். சூஷ், ராபர்ட் மெக்லோஸ்கே, மன்ரோ லீப், ஜோனதன் ஸ்விப்ட், ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன், ருட்ராய்டு கிப்பிலிங், இ.பி.வொயிட், H. G. Wells, ஜே.கே.ரௌலிங், Hergé(Adventures of Tintin 70மொழி), lawrence Alholt, H.J. LEWIS, ஷெல் சில்வர்ஸ்டின்.
- குட்டி இளவரசன், அந்த்வான் து செந்த் எக்சுபெரி, வெ.ஸ்ரீராம், ச. மதனகல்யாணி, க்ரியா
- அற்புத உலகில் ஆலிஸ், லூயி கரோல், தமிழில்- எஸ். ராமகிருஷ்ணன், வம்சி வெளியீடு
- ரோல் தாலின் மட்டில்டா, தமிழில் – பாஸ்கர் சக்தி, விகடன் வெளியீடு
- சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி, தமிழில் – பாஸ்கர் சக்தி, விகடன் வெளியீடு.
- தம் தம் தம்பி புத்தக வரிசை, தூலிகா-புக்ஸ் ஃபார் சில்ரன்
- கடைசிப் பூ, ஜேம்ஸ் தர்பர், தமுஎகச, வாசல் வெளியீடு
- எண்ணும் மனிதன் – மஸ்தா தபான – கயல்விழி- அகல்
- சாரி! பெஸ்ட் பிரண்ட் – கீதா ஹரிஹரன் – அ. குமரேசன்
- சிவப்பு மழைக்கோட்- கிரண் கஸ்தூரியா- சாலை செல்வம்- குட்டி ஆகாயம்
- இரவு- ஜுனுகா தேஷ்பாண்டே- சாலை செல்வம்- குட்டி ஆகாயம்
- பெருநாள் பரிசு, ஒரு படி அரிசி – பிரேம்சந்த், என்.பி.டி. (இந்தி)
- மின்மினி – இந்தி சிறுவர் கதைகள்- என். மாதவன்
- கரடிபொம்மையை எடுத்தது யார்- பா. முரளிதரன்- ஜெயந்தி சங்கர்
- பேசும் பறவை- சுவாதி சென்குப்தா– கார்குழலி– தூலிகா பப்ளிஷர்ஸ்
- குழந்தைகளுக்கு ஆப்பிரிக்கப் பழங்கதைகள், எஸ்.பி.ஸாக்ஸ், எம்.பாண்டியராஜன்,
- யானையோடு பேசுதல் – மனிஷ் சாண்டி-மாதுரி ரமேஷ், வ. கீதா, தாரா வெளியீடு
ரஸ்கின் பாண்டின் நூல்கள்
- விலங்குக் காட்சி சாலையில், தமிழில்: ல.சு.ரங்கராஜன், என்.பி.டி.
- ரஸ்டியின் வீர தீரங்கள், தமிழில் – சொ. பிரபாகரன், என்.பி.டி.
- மரங்களோடு வளர்ந்தவள், தமிழில் – ஆனந்தம் சீனிவாசன், என்.பி.டி.
- மறக்க முடியாத விலங்குகள், தமிழில் – கொ.மா.கோ. இளங்கோ, என்.பி.டி.
- பாம்பின் பயணம், தமிழில்- அகிலா சிவராமன், என்.பி.டி.
- கப்பலில் போகும் கனவுப் பயணம்-சொ. பிரபாகரன் – பாரதி புத்தகாலயம்
சரவணன் பார்த்தசாரதி மொழிபெயர்ப்பு
- செவ்விந்திய, ஐரோப்பிய, ரஷ்ய சிறார் சிறார் கதைகள்
- ஜெமீமா வாத்து, பியாட்ரிக்ஸ் பாட்டர், வானம் பதிப்பகம்
- வியாபார நரி – புக்ஸ் ஃபார் சில்ரன்
சுகுமாரன் மொழிபெயர்ப்பு
- ஆலீஷின் அற்புத உலகம்
- கருணைத் தீவு – ஜோகன் தேவில் வேன்
- ரகசியத் தோட்டம்- பிரான்சிஸ் கட்சல் பர்னாட்
- குட்டி இளவரசி – ஆண்டர்ஸன்
- டாம் சாயரின் சாகசங்கள் – கிரீஸ் கோல்ப் ஆனி
மலையாளம் வழி
யூமா வாசுகி மொழிபெயர்ப்பு
- மாத்தன் மண்புழுவின் வழக்கு, பேராசிரியர் சிவதாஸ், புக்ஸ் ஃபார் சில்ரன்
- தியா, பி.வி. சுகுமாரன், புக்ஸ் ஃபார் சில்ரன்
- புத்தக தேவதையின் கதை, பேரா.சிவதாஸ்
- சிம்புவின் உலகம், சி.ஆர். தாஸ், புக்ஸ் ஃபார் சில்ரன்
- பினாட்சியோ – யூமா – கார்லோ கொலோடி
- கால்நடை மருத்துவர் – ncbh – பிரபாகர் பழச்சி
- அஞ்சி நடுங்குவது எப்படி – ncbh
- ஒரு நாயின் கதை – பிரேமசந்த
- ஓநாயின் புத்தாண்டுக் கொண்டாட்டம்
- மரகத நாட்டு மந்திரவாதி, ஃபிராங்க் பாம், புக்ஸ் ஃபார் சில்ரன்
உதயசங்கர் மொழிபெயர்ப்பு
- புத்தகப் பூங்கா,25 மலையாள ஓவியக் கதைப் புத்தகங்கள், புக்ஸ் ஃபார் சில்ரன்
- புத்தகப் பரிசுப் பெட்டி, 15 மலையாள ஓவியக் கதைப் புத்தகங்கள், புக்ஸ் ஃபார் சில்ரன்
- இயற்கையின் அற்புத உலகில், வானம் வெளியீடு
- பறந்து, பறந்து சி.ஆர். தாஸ், வானம் வெளியீடு
- மரணத்தை வென்ற மல்லன், உரூபு, வானம் வெளியீடு
- அய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்- மாலி- வானம் வெளியிடு
- ஸ்கூலுக்கு போகிறாள் சுஸ்கித்,சுஜாதா பத்மநாபன்,பாரதி புத்தகாலயம்
அம்பிகா நடராஜன் மொழிபெயர்ப்பு
- சிறுத்தைக்குட்டியின் கேள்விகள், புக்ஸ் ஃபார் சில்ரன்
- டாம் மாமாவின் குடிசை, புக்ஸ் ஃபார் சில்ரன்
- உயிரினங்களின் அற்புத உலகில், புக்ஸ் ஃபார் சில்ரன்
கொ.மா.கோ.இளங்கோ மொழியாக்கம்
- உயிர் தரும் மரம், ஷெல் சில்வர்ச்டீன், – BFC
- பெர்டினன்- மன்ரோ லீப்- BFC
- மாயி-சான் (ஹீரோஷிமாவின் வானம்பாடி- தோஷி மாருகி -BFC
- ரெடி பலூன்- ஆல்பர்ட் லெமூரிஸ் – BFC
- ஆரோலட்டும் ஊதாக்கலார் கிரேயயானும் – கிரோகட் ஜான்சன்-BFC
- ஆர்த்தரின் சூரியன்- ஹட்ஜாக் குல்னஷரியன் – BFC
- ஷாலுவின் புளுபெர்ரி – ராபர்ட் மெக்லோஸ்கே – BFC
- குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் – லியோ டால்ஸ்டாய் – BFC
- அன்புக்குரிய யானைகள் – யுகியோ சுசியா – BFC
- மக்கு மாமரம் – ஏ. என். பெட்னேகர்– NBT
- காக்கைச்சிறுவன் – டரோ யஷிமா – BFC
- சிங்கத்தின் குகையில் சின்னக்குருவி- எலிசா கிலேவேன் – BFC
சமூகம், வரலாறு
- சுல்தானாவின் கனவு, பேகம் ரொக்கையா, தமிழில் சாலை செல்வம், வ. கீதா, தாரா
- யாரேனும் இந்த மௌனத்தைத் தகர்த்திருந்தால், கமலா பாசின், சாலை செல்வம், குட்டி ஆகாயம்
- கனவினைப் பின்தொடர்ந்து, த.வெ.பத்மா, தமிழில் ஜெ. ஷாஜகான், எதிர் வெளியீடு
- பானை செய்வோம் பயிர் செய்வோம், காஞ்சா அய்லய்யா,அருணா ரத்னம், தூலிகா
- ஆண் பிள்ளை யார், பெண் பிள்ளை யார்? கமலா பாசின்,யூமா வாசுகி, bfc
- ஜலியான் வாலா பாக், பீஷம் சாஹ்னி, என்.பி.டி.
வாழ்க்கை வரலாறு
- சாதனையாளர்கள் சிறு வயதில், தங்கமணி, என்.பி.டி.
- பாப்பாவுக்கு காந்தி கதை, தி.ஜ.ர. பழனியப்பா பிரதர்ஸ்
- பீமாயணம், ஸ்ரீவித்யா நடராஜன்-எஸ். ஆனந்த், தமிழில்: அரவிந்தன், காலச்சுவடு
- சிறுவன் தாகூர், தமிழில்: ரா.கி. ரங்கராஜன், என்.பி.டி.
- நெல்சன் மண்டேலா, மேக்னஸ் பெர்க்மர், மர்லீன் வின்பெர்க், புக்ஸ் ஃபார் சில்ரன்
சுற்றுச்சூழல், உயிரினங்கள்
- வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம், எஸ்.சிவதாஸ், ப. ஜெயகிருஷ்ணன், அறிவியல்
- கானகத்துக் கீதங்கள், ஜித் ராய், தமிழில் கு.ராஜாராம், நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு
- நமது பூமி, லாயிக் ஃபதே அலி, தமிழில் ஆர்.எஸ். நாராயணன், என்.பி.டி.
- மாசு சூழ்ந்த உலகம், என். சேஷகிரி, என்.பி.டி.
- மரங்கள்-தொகுப்பு, நிர்மலா பாலா, என்.பி.டி.
- தண்ணீர்-தொகுப்பு, டி. சித்தார்த்தன், என்.பி.டி.
- பூச்சிகளின் விந்தை உலகம், ஹரிந்தர் தனோவா, டாக்டர் ஜனார்த்தனன், என்.பி.டி.
- நம்மைச் சுற்றி வாழும் பாம்புகள், ஸாய்-ரோமுலஸ் விட்டேகர், என்.பி.டி.
- வேரூன்றிவிட்டது சிப்கோ, ஜெயந்தி மனோகரன், எஸ். ஜெயராமன், பிரதம் புக்ஸ்
- ஜாதவ்வின் காடு, விநாயக் வர்மா, தமிழில் என். சொக்கன் பிரதம் புக்ஸ்
- விதை சேமிப்பவர்கள், பிஜல் வச்ராஜானி, தமிழில் ராஜம் ஆனந்த், பிரதம் புக்ஸ்
- விதை சேர்க்கும் விளையாட்டு, நேகா சுமித்ரன், பி.எஸ்.வி. குமாரசாமி, பிரதம் புக்ஸ்
- குப்பைமேடுகளில், கீதா உல்ஃப், தமிழில் சுபத்ரா, தாரா பதிப்பகம்
- பறவைகளின வீடுகள், ஜூ ஸி, தமிழில்: சாலை செல்வம், குட்டி ஆகாயம்
- கடலும் கிழவனும்- ஹெம்மிங்கவே – ச.மாடசாமி
- பெருவனம். காம்- ஹரிகிருஷ்ணா தேவசராய்- அகிலா சிவராமன்- nbt
- தேனீக்களின் விந்தை உலகம்-எஸ்.ஐ.பருக்கி – கொ.மா.கோ.இளங்கோ-
- அன்பின் பிணைப்பு- புஷ்பா சக்சேனா – கொ.மா.கோ.இளங்கோ- மரம் வளர்ப்பு
- இது என் கதை-விக்கி ஆர்யா -மதன் ராஜ் – தவளை வாழ்க்கை கதை
- இளவரசனும் பவளக் கடலும் – டைசாகு இகேடா – அகிலா சிவராமன்- சூழலியல்
- மக்கு மாமரம் – ஏ .என் .பெடனேகர் – கொ.மா.கோ.இளங்கோ- சூழலியல் கதை
- என் வாழ்க்கை – அஞ்சன் சர்க்கார் – வண்ணத்துப்பூச்சிகள்வாழ்க்கை- கே.ஜே.விவேகன்
- ஒரு காலத்திலே ஒரு கிராமத்திலே- h c.மதன்-கே.ஜே.விவேகன் –வனம் காக்க கதை
- காற்றின் அற்புத உலகம்- R. K. மூர்த்தி- அப்பண்ணாசாமி – காற்று பற்றிய கட்டுரைகள்
- கானகத்துக் கீதங்கள்- ஜித். ராய் – கு. ராஜராம்
- நீ கரடி என்று யார் சொன்னது-பிராங்க் தாஷ்லின்- ஆதி. வள்ளியப்பன்- புக்ஸ் ஃபார் சில்ரன்
கல்வி
- பகல் கனவு, ஜூஜுபாய் பாத்கேகா, என்.பி.டி.
- டோட்டோ சான், டெட்சுகோ குரோயநாகி, சு.வள்ளிநாயகம்-சொ.பிரபாகரன், என்.பி.டி.
- டேஞ்சர் ஸ்கூல், தமிழில்: மூ. அப்பணசாமி, புக்ஸ் ஃபார் சில்ரன்
- ஆசிரியரின் டைரி, ஜான் ஹோல்ட், தமிழில்: எம்.பி. அகிலா, யுரேகா புக்ஸ்
- உனக்குப் படிக்கத் தெரியாது, கமலாலயன், வாசல் வெளியீடு
- நம்பர் பூதம் – என்சைன்ஸ் பெர்கர் -ஆயிஷா நடராசன் – புக்ஸ் ஃபார் சில்ரன்
அறிவியல், பரிசோதனைகள்
- அக்னிச் சுடர்கள், அரவிந்த் குப்தா, தமிழில்: விழியன்,
- வானியலின் கதை, உதய் பாட்டீல், தமிழில் மோகனப்பிரியா,
பதின் வயதோருக்கு
- பெனி எனும் சிறுவன், கிகோ புளூஷி, யூமா வாசுகி, புக்ஸ் ஃபார் சில்ரன்
- கலிவரின் பயணங்கள், ஜோனதன் ஸ்விப்ட், யூமா வாசுகி, என்.சி.பி.எச்
- ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் கதைகள், யூமா வாசுகி, புக்ஸ் ஃபார் சில்ரன்
- கறுப்பழகன், அன்னா சிவெல், யூமா வாசுகி,புக்ஸ் ஃபார் சில்ரன்
- வானவில் மனது – கே.சதீஷ் – யூமா வாசுகி, புக்ஸ் ஃபார் சில்ரன்
- ஹென்றி போர் முனையில் ஒரு சிறுவன் – ஸ்டீபன் கிரேன் – ஆயிஷா நடராசன்
- அவர்கள் மூன்று பேர் – சீனா சிறார் கதைகள்-கெளரி நீலமேகம் -NCBH
- சோபியின் உலகம் – யொல் டைன் கார்டர் – ஆர்,சிவகுமார் , எதிர் வெளியிடு
- காட்டுக்குள்ளே மான்குட்டி- ஃபெலிக்ஸ் சலட்டன்- ராஜேஸ்வரி கோதண்டம்-NCBH
- உலகில் மகிழ்ச்சியான சிறுவன் – உலக சிறார் கதைகள்- ஆயிஷா இரா. நடராசன்
- கண்தெரியாத இசைஞன் –வி.கொரெலென்கோ – யூமா வாசுகி- புக்ஸ் ஃபார் சில்ரன்
- பேரன்பின் பூக்கள், சுமங்களா, யூமா வாசுகி ,சித்திரச் செவ்வானம்
- இளையோர்க்கான இந்தியத் தொன்மக் கதைகள், ரொமிலா தாப்பர், ஜீவா, என்.சி.பி.எச்.
(தமிழில் இருந்து பிறமொழிக்குச் சென்ற புத்தகங்கள் பற்றி இணைக்கப்பட்டவில்லை)
காணொலி பதிவு :
குறிப்பு:
சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் சார்பாக சிறார் கலை இலக்கியச் சந்திப்பு இணைய வழியே நடைப்பெற்றது. மொத்தம் 10 அமர்வுகள், 20க்கும் மேலான சிறப்புரைகள் என மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. நிகழ்வின் உரைகளை இங்கு பஞ்சுமிட்டாய் இனையத்தில் ஆவணப்படுத்துகிறோம்.
வீடியோ பதிவுகளாக காண: Click here.
கட்டுரைகளுக்கு : Click here.