வண்ணமயமான சிறார் உலகின் மாயங்களைப் பேசுவோம்!

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்

சிறார் இலக்கியம் குறித்த உரையாடல் இந்திய சூழலில் தொடங்கப்படவே இல்லை. அதன் பாதிப்பே சிறார் இலக்கியம் செழிப்பற்று இருக்கிறது. தமிழில் சிறார் இலக்கியத்திற்கான செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருந்த காலம் ஒன்று இருக்கிறது. புதிய சிறார் எழுத்தாளர்களை அடையாளம் காட்டியது. புதிய சிறார் வாசகர்களுக்கு நூல்களைக் கொண்டு சேர்த்தது. இப்போதும் அந்தப் பணிக்கான தேவை இருக்கிறது.

தமிழில் தற்போது சிறார் இலக்கியத்தில் சில நன்அறிகுறிகள் தென்படுகின்றன. நேர்த்தியான படைப்புகள் வெளியாகின்றன. சமூகம் சார்ந்த அக்கறையும் மாற்றுப்பார்வையுடன் கதைகள் வெளியாகின்றன. டெம்ப்ளேட் கதை பாணியிலிருந்து விலகி சிறார் இலக்கியம் தனித்த பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தக் காலக்கட்டம் மிகவும் முக்கியமானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் முளைவிட்டிருக்கும் சிறார் இலக்கியம் குறித்து உரையாடுவது, அதன் பயணத்தை நெறிப்படுத்தும்; படைப்பாளர்களை சீர்ப்படுத்தும். புதிய வாசகப் பரப்பை உருவாக்கும். எனவே, இந்த முன்னெடுப்பு.

சிறார் இலக்கியத்தின் பன்முகக் கூறுகளை தனித்தனியே பேசவும், உரையாடவும் முனைந்திருக்கிறோம். அதன் வழியே இலக்கியப் பரப்பில் சிறார் இலக்கியம் தொடர்பாக நல்லதோர் உரையாடல் நிகழும் என்றும் நம்புகிறோம்.

உங்களின் கவனிப்பும் வருகையும் கருத்துப் பகிர்வும் மிகவும் முக்கியமானது என்று நம்புகிறோம். அவசியம் கலந்துகொள்க.

– விஷ்ணுபுரம் சரவணன்

Leave a comment