வார்லி ஓவியம் வரலாறு: வார்லி ஓவியம் என்பது ஒரு பழங்குடி மக்களின் ஓவியக் கலையாகும். இக்கலை இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மகாராஷ்டரா மற்றும் குஜராத் மாநில எல்லைப்பகுதியில் வாழும் ஆதிவாசிகளான வார்லி மக்களால் வளர்க்கப்பட்ட கலையாகும். வார்லி ஓவியக் கலை கி.மு. இரண்டாயிரத்து ஐநூறு முதல் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவிய பாரம்பரியத்தின் தொடர்ச்சியைக் கொண்டது. மிகவும் தொன்மையான கலை. மனிதன குகைகளை வசிப்பிடமாகக் கொண்டிருந்த காலகட்டத்தில் தங்கள் அன்றாட நிகழ்வுகளை, அதாவது வேட்டையாடுதல் கேளிக்கைககள் போன்றவற்றை வரையப்பட்ட குகை ஓவியங்களே வார்லி ஓவியங்கள்.
வார்லி ஓவியம் அடிப்படை:
இந்த வார்லி ஓவியங்கள் எளிய அடிப்படை வடிவங்களை கொண்டே வரையப்படுகின்றன. அதாவது வட்டம், முக்கோணம், சதுரம் போன்ற வடிவங்களைக் கொண்டே தாங்கள் காணும் இயற்கை காட்சிகளை வரைகின்றனர்.
வட்ட வடிவத்தை சூரியன், சந்திரன் ஆகியவற்றை வரையவும், முக்கோணத்தை மலைகள், கூரான மரங்கள் போன்ற வடிவங்களை வரையவும்,
சதுர வடிவத்தை துண்டு நிலம் போன்றவற்றை குறிக்கும்வகையில் வரைகின்றன.
மனித உடல்கள், மற்றும் விலங்கு உடல் வடிவங்கள் ஆகியவற்றை முனையில் இணைந்த இரண்டு முக்கோணங்களைக் கொண்டு வரைகின்றனர். மேல் முக்கோணத்தை இடுப்புக்கு மேலுள்ள உடல் பகுதியை வரையவும் ,கீழ் முக்கோணத்தை இடுப்பை வரைந்தும், தலைப்பகுதிக்கு ஒரு வட்டத்தையும், கொண்டைக்கு இன்னொரு சிறிய வட்டத்தையும் வரைந்து சித்தரிக்கின்றனர்.ki
வார்லி படங்கள் சித்தரிக்கும் அம்சங்கள்:
அவர்களின் அன்றாடப் பாடுகளின் பல நிலைகளை ஓவியமாக அம்மக்கள் தீட்டியிருக்கிறார்கள். அவர்களது திருமணம் குறிக்கும் ஓவியங்கள், மணமக்கள் குதிரையில் பயணிக்கும் நிகழ்வு., வேட்டையாடுதல், மீன்பிடித்தல், விவசாயம்,அறுவடை திருவிழாக்கள், நடனங்கள், மரங்கள், விலங்குகள், பெண்களின் அன்றாட வேலைகள் போன்றவற்றை காட்சிகளாக சித்தரித்து வரையப்பட்டுள்ளன. பல வார்லி ஓவியல்களில் வட்டமாக நடனம் ஆடுவது போன்ற ஓவியங்கள் காணப்படுகின்றன. வட்டமாக ஆண்கள் மற்றும் பெண் நடனக்கலைஞர்கள் தங்கள் கைகளை பின்னிக் கொண்டு ஆடுகின்றன.பறை கொட்டு பயன்படுத்தி மகிழ்கின்றன.
வார்லி எதில் வரையலாம்:
இப்போதும்வார்லி மக்கள் வீட்டின் உட்சுவர்களில் காவி வண்ணம் பூசுகிறார்கள். இந்தக் காவி பின்புலத்தில்தான் ஓவியங்கள் வரையப்படுகின்றன. காவிப் பின்புலத்தில் தெளிவாகத் தெரிவதற்காக வெள்ளை நிறத்தைப் பயன்படுத்துகிறார்கள். வெள்ளை நிறத்துக்கு அரிசி மாவைத் தண்ணீரில் குழைத்துப் பயன்படுத்துகிறார்கள். ஓவியங்களை வரைய மூங்கில் குச்சிகளின் முனையை நசுக்கி தூரிகைபோல பயன் படுத்துகின்றனர்.
வார்லி ஓவியங்கள் யார் பழகலாம்:
வார்லி ஓவியங்கள் அடிப்படை/ எளிமையான வடிவங்களான வட்டம்,முக்கோணம், கோடு, சதுரம் கொண்டு வரையபடுவத்தால் 8 வயதினர் முதல் யாரும் வரையலாம். மிகவும் எளிமையான ஓவியம்.பெரிய ஓவிய நுணுக்கங்கள் இதில் கிடையாது.அடிப்படையாக பேப்பர் பென்சில் மட்டுமே இருந்தால் போதுமானது. காவிப் பின்புலத்தில் தெளிவாகத் தெரிவதற்காக வெள்ளை நிறத்தில் ஓவியம் தீட்டுகிறார்கள் வார்லி மக்கள். ஆனால் நாம் வண்ணம் தீட்டியும் வரையலாம். வார்லி ஓவியங்கள் புதுமைகளை அனுமதிப்பத்தால் இவ்வளவு ஆண்டுகளாகியும் ஓங்கி வளர்ந்து உள்ளது.