வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்ஓரிகாமி கலைக்கு தேவையான மூலப்பொருள் காகிதம், எனவே பல்வேறு வகையான காகிதங்களைப்பற்றி இன்றைய பகுதியில் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் நண்பர்களே. இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தவாறு காகிதங்களின் தரமும் உயர்ந்துள்ளது. ஓரிகாமி கலைக்கு பல்வேறு விதமான காகிதங்களை பயன்படுத்துகிறார்கள்,
சியோகாமி (Chiyogami): சியோகாமி எனப்படுவது ஜப்பானில் மிக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் காகிதம் , இந்தவகை காகிதங்களின் ஒருபக்கம் பல வகையான வண்ண சாயங்களை பயன்படுத்தி நேர்த்தியான டிசைன்களை அச்சிடுகின்றனர். இது பார்க்க மிகவும் அழகாக இருக்கும். ஓரிகாமி கொக்கு, முப்பரிமாண ஓரிகாமி உருவங்கள் செய்ய இந்த காகிதங்களை பயன்படுத்தலாம்.
வசி காகிதம் (Washi Paper): வசி காகிதம் ஜப்பானியர்களின் பழைமையான காகித தயாரிப்பு முறை. இது கைகளால் தயாரிக்கப்படும் சிறந்த அழகான காகிதங்கள். ஓரிகாமி காகித பொம்மைகள் செய்ய இதன் மூலம் செய்யும் போது அழகாக இருக்கும்.
காமி காகிதம் (Kami- Origami Square paper): ஓரிகாமி கலைக்கு தகுந்த முதல் தரமான காகிதம், ஜப்பானில் தயாரிக்கப்படுகிறது. இது இரண்டு பக்கங்களும் வண்ணங்களுடன், பலவகையான வண்ணங்களில் கிடைக்கக்கூடியது.
Art paper: இது அனைத்து Stationary கடைகளிலும் கிடைக்கக்கூடிய காகிதம்Foil and laminated paper: இந்த வகை காகிதங்கள் ஓரிகாமி கலைக்கு பயன்படுதலாம், விலை கொஞ்சம் அதிகம்.
இதில்லாமல் நம்ம ஊர் கடைகளில் A4 sheets, florescent color papers, A4 size craft color paper, laminated color paper, Brown sheets கிடைக்கிறது. இந்த வகையான காகிதங்களையும் நாம் ஓரிகாமி செய்ய பயன்படுத்தலாம். மேற்கூறிய அனைத்து காகிதங்களையும் நாம் இணைய அங்காடிகளான Amazon, flip kart யிலும் வாங்க முடியும்.
Dollar bill origami என்ற முறையில் கரன்சி நோட்டுக்களை பயன்படுத்தி ஓரிகாமி பொம்மைகள் செய்கின்றனர்.
காகித மறுசுழற்சி : நமது வீட்டில் பயன் படுத்திய பழைய தேவையற்ற காகிதங்களை எரிக்காமல், குப்பையில் போடாமல் ஓரிகாமி பொம்மைகள் செய்ய பயன்படுத்தலாம். பழைய மாதாந்திர காலண்டர், பழைய செய்தித்தாள்கள், தேவையற்ற பயன்படுத்திய A4 பேப்பர், விளம்பர துண்டு சீட்டுக்கள் இவைகளை ஓரிகாமிக்கு பயன்படுத்தலாம். உங்கள் வீட்டில் உள்ள பழைய காகிதங்களையோ அல்லது கடைகளில் காகிதங்களை வாங்கியோ நீங்கள் விரும்பும் ஓரிகாமி பொம்மைகளை செய்து மகிழுங்கள் நண்பர்களே.