தமிழகத்தில் இருந்து கொண்டு இலக்கியப் பணி அதுவும் குழந்தைகள் இலக்கியப் பணியில் இயங்குவது எளிதான விஷயம் அல்ல. பொருளாதாரரீதியாகவும் சிரமமானது. பெங்களூருவில் இருந்து கொண்டு குழந்தைகள் இலக்கிய அறிவுப் பணியைத் தமிழில் தடம் பதித்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டிருக்கும் பஞ்சு மிட்டாய் பிரபு. குழந்தைகள் வட்டத்தில் பிரபலமாக இருப்பவர்.
பிரபுவுக்கு தஞ்சாவூர் சொந்த ஊர். வாழ்வது பெங்களூரில். மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். பெங்களூருவில் தனது அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் துறிழ் குட்டீசுகளுக்கு கதைகள், பாடல்கள், விளையாட்டுகள் போன்ற நிகழ்வுகளை, ஒத்த அலைவரிசையில் இருக்கும் நண்பர்களுடன் இணைந்து 2015- இல் தொடங்கிய முயற்சி இன்று ஓர்இயக்கமாக மாறியுள்ளது.
இதுவரை 106 குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை, பெங்களூரு, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஊர்களில் நடத்தியிருக்கறார்.
சென்ற இரண்டு அண்டுகளாக பஞ்சு மிட்டாய் சிறார் காலாண்டு இதழை வழுவழுதாளில், வித்தியாசமான படங்களை ஓவியர்களைக் கொண்டு வரையச் செய்து நேர்த்தியாக வண்ணத்தில் அச்சிட்டு வெளியிட்டுவருகிறார். சிறார்களின் கற்பனைகளுக்கு முக்கியத்துவம் தரும் இதழாக இது இருக்கிறது. பயனுள்ள விதத்தில் பொழுதினை செலவழிக்கும் சமயங்களில், தமிழ் மொழியையும் தமிழ் வாசிப்பு பழக்கத்தையும் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கிறது. பஞ்சு மிட்டாய்.
சிறார் உலகம் எதிர் கொள்ளும் பிரச்னைகள், புதிய கல்வி முறைகள் குழந்தை வளர்ப்பு பற்றி தமிழில் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள பஞ்சுமிட்டாய்.காம் என்னும் இணைய தளத்தையும் தனதுகுழுவுடன் சேர்ந்து இயக்கி வருகிறார். பெற்றோர்கள், ஆசிரியர்கள், செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் என்று சிறார் உலகம் சார்ந்து இயங்கும் ஆர்வலர்களை இணைக்கும் புள்ளி யாக ‘பஞ்சு மிட்டாய்’ இணையதளம் அமைந்திருக்கிறது. குழந்தைகளையும் பெரியவர்களையும் குழந்தைகள் வட்டத்தில் கொண்டுவந்திருப்பதில் பிரபு வெற்றி பெற்றிருக்கிறார்.
மென்பொருள் பொறியாளர்கள் பெரும்பாலும் இலக்கியத்திலிருந்து விலகியே நிற்பார்கள். அதுவும் குழந்தை இலக்கியம் என்றால் இடைவெளி காத தூரம் நீண்டுவிடும். குழந்தை இலக்கிய வட்டாரத்தில் பிரபு ‘பஞ்சுமிட்டாய்’ பிரபுவாக எப்படி அவதாரம் எடுத்தார்?
பிரபுவே சொல்கிறார்:
“எந்தக் கவலையும் இல்லாமல் பட்டாம் பூச்சியாக சுற்றிவந்த குழந்தைப் பருவத்தின் அந்த பொன்னான தருணங்கள் இன்றைக்கும் எனக்குள் சுற்றிச் சுற்றி வருகின்றன. வளர்த்தவர்கள் தங்கள் பால்ய கால நினைவுகளை அசை போடாமல் இருக்க மாட்டார்கள். சுருக்கமாகச் சொன்
னால், மீண்டும் குழந்தையாக வேண்டும் என்கிற முயற்சி தான் சிறார்களுக்கான பஞ்சு மிட்டாய் வெளியீடு… இந்த முயற்சியில் நானும் என் குழுவினரும் குழந்தைகளாகி விடுகிறோம் என்பதுதான் உண்மை.
சிறு வயகில் வண்ணங்கள் பற்றிய கதைகளை வாசிக்க வேண்டும் என்கிற அசை என்னைப் பாடாய் படுத்தியது. நரலகங்களுக்கு செல்லும் போதெல்லாம் வண்ணங்கள் குறித்த கதைப் புத்தகத்தைத் தேடுவேன். ஆனால் என்னை நிறைவுபடுத்தும் சரியான கதை கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. அதனால் தான் பெரியவன் ஆன பிறகும் எனது தேடல் தொடர்ந்தது. கடைசியில் அந்தத் தேடலே வண்ணங்கள் குறித்த கதைகளை என்னைக் கொண்டு எழுதவைத்தது. இந்த உலகில் மொழி, இனம், ருசி, சாதி, மதம், குணம், பண்டிகை கொண்டாட்டங்களில் வண்ணங்கள் பிரதான இடத்தை பிடிக்கின்றன. பல விஷயங்களுக்கு குறியீடாகவும் அடையாளமாகவும் அமைந்திருக்கின்றன. அமைதிக்கு வெண்ணிறம், எதிர்ப்பிற்கு கருநிறம்… அபாயத்திற்குச் சிவப்பு… பசுமைக்கு பச்சை… வீட்டில் மங்களகரமான சுப காரியங்களுக்கு மஞ்சள் நிறம் என்று பட்டியல் இருக்கிறது.
“உங்களுக்கு பிடித்த கலரு என்ன?” என்று சிறார்களிடம் கேட்டுப்பாருங்கள். பலரும் பல வண்ணங்களை சொல்வார்கள். வண்ணங்கள் குறித்த எனது கதை நூலான “எனக்குப் பிடிச்ச கலரு”வில் கதைப் போக்கில், முதன்மை திறங்கள், அவற்றிலிருந்து பிறந்த இதர நிறங்கள், வானம் நீல நிறமாக இருப்பதன் ரகசியம், சிவப்பு நிற உடையைப் பார்த்தால் மாடு முட்டுமா, நிறக் குருடு, ஒளிச் சேர்க்கை பற்றியும் தகவல்களை ஊடுபாவாக நெய்துள்ளேன். (எனக்குப் பிடிச்ச கலரு- வானம் பதிப்பகம்)
‘பஞ்சு மிட்டாய்’ காலாண்டு இதழில் சிறார்களின் படைப்புகளுக்கு முக்கியத்துவம் தருகிறோம். கதை, கவிதை, புதிர், பாடல், ஓவியங்கள், விளையாட்டு என்று படைப்புகளை பஞ்சு மிட்டாய்’ கதைப்பெட்டி மூலமாகத் திரட்டுகிறோம். தழிழகத்தில் உள்ள நண்பர்கள், குழந்தை இலக்கிய ஆர்வலர்கள், குழந்தை எழுத்தாளர்கள் தங்களுக்கு அருகில் இருக்கும் பள்ளிகள் , நூலகங்கள் போன்ற இடங்களில் கதை பெட்டியை வைப்பார்கள். குழந்தைகள் தங்கள் படைப்புகளை அந்தப் பெட்டியில் போடலாம். அவற்றைசேகரித்து பஞ்சுமிட்டாய் இதழில் இடம் பெறச் செய்கிறோம். சரியான தளம் அமைந்தால் சிறார்களின் கற்பனைகள் சிறகடித்துப் பறப்பதை அனுபவத்தில் உணர்கிறோம். பஞ்சு மிட்டாய் இதழில் குழந்தை இலக்கிய எழுத்தாளர்களான பாவண்ணன், உதயசங்கர், விஷ்ணுபுரம் சரவணன், கன்னிகோயில் ராஜா, ராஜ் சிவா & யாழ் சிவா படைப்புகளும் வெளியாகும். பஞ்சுமிட்டாய் இதழில் ஏனைய சிறார் இதழ்களிலிருந்து வித்தியாசமாக படங்கள் வரையும் தொழில்ரீதியான ஓவியர்கள் ராகவி, கார்த்திகா, செளமியா, ராஜன், பிள்ளை என்று ஒரு பட்டாளமே இருக்கிறார்கள். பஞ்சுமிட்டாய் இதழுக்கு 250 சந்தாதாரர்கள் இருக்கிறார்கள் என்கிறார் “பஞ்சு மிட்டாய்” பிரபு.
நன்றி : https://epaper.dinamani.com/m5/2563242/Kadir/23022020#dual/5/1