வாருங்கள்! சிறார்களுடன் இனிதே கொண்டாடி மகிழ்வோம்

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு பஞ்சு மிட்டாய் சிறார் குழு பெங்களுரில் தமிழ் சிறார்களுக்கு நடத்தும் நிகழ்வு. இம்முறை கோரமங்களாவில் நிகழ்வினை சில நண்பர்களின் துணைகொண்டு நடத்துகிறோம். ஒரு பொது நிகழ்வு என்றதும் சிறார் உலகில், எழுத்தாளர்கள், பதிப்பகத்தினர், ஓவியர்கள், புத்தக வடிவமைப்பாளர்கள், நாடக கலைஞர்கள், கோமாளிகள், கதை சொல்லிகள், விளையாட்டுகள் சார்ந்து இயங்கும் நண்பர்கள், நுண் கலைகள் சார்ந்து இயங்கும் நண்பர்கள் என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் நண்பர்களை இங்குள்ள பெற்றோர்களுக்கும் சிறுவர்களுக்கும் அறிமுகம் செய்ய விரும்புகிறோம். அதன் அடிப்படையில் ஒவ்வொரு நிகழ்விலும் பல்வேறு துறையில் இயங்கும் நண்பர்களை அழைத்து வருகிறோம். அதன் வரிசையில் இந்த 100வது நிகழ்விற்கு…

சிறப்பு விருந்தினர்களாக:

1. எழுத்தாளர் பாவண்ணன்
2. தஞ்சை ‘உதிரி நாடக நிலம்’ விஜயகுமார்
3. கோமாளியாக வேல்முருகன்
4. கதை சொல்லிகள் அனிதா & ராம்பிரியா
5. அக்னி கலைக்குழுவின் பறை இசை
6. வானம் பதிப்பக நண்பர்கள்

கதை, பாடல், விளையாட்டு, இசை, ஆட்டம், நாடகம், கோமாளியுடன் சந்திப்பு, புத்தக அறிமுகம், புத்தக வெளியீடு என முழுக்க முழுக்க நான்கு மணி நேரமும் சிறார்கள் கொண்டாடி மகிழும் வகையில் நிகழ்வினை திட்டமிட்டிருக்கிறோம். நிகழ்வில் தற்கால சிறார் இதழ்களும், சிறார் புத்தகங்களும், சிறுவர்கள் பற்றிய பெரியோக்ராளுக்கான புத்தகங்களும் விற்பனைக்கு கிடைக்கும்.

அத்துடன் சிறுவர்களுக்காக கதை பெட்டியும் காத்திருக்கிறது. சிறுவர்கள் வீட்டிலிருந்து கதைகள், ஓவியங்கள், பிடித்த விசயங்கள் பற்றியோ எழுதியோ வரைந்தோ எடுத்து வந்து பெட்டியில் சேர்க்கலாம்.

நிகழ்வு விபரங்கள்:

நாள் : 04-ஆகஸ்ட்-2019 (ஞாயிறு)
நேரம்: மதியம் 2.30மணி முதல் மாலை 6.30மணி வரை
இடம்: Indian Heritage Academy, 6th Block, Koramangala, Bengaluru, Karnataka 560095 (Near Koramangala Police Station)

முன்பதிவிற்கு : 9902769373(அருண்)/ 9008111762(ஜெயகுமார்) / 9731736363(பிரபு)

பஞ்சு மிட்டாய் பற்றி தெரிந்துக்கொள்ள‌ : www.panchumittai.com

நன்றி,
பஞ்சு மிட்டாய் சிறார் குழு

Leave a comment