பஞ்சு மிட்டாய் 8ஆம் இதழ் குறித்து தொடர்ந்து நண்பர்கள் விசாரித்துக் கொண்டே இருந்தனர். சனவரி இறுதியில் வெளியாகும் என்பதை நண்பர்களிடன் சொல்லியிருந்தோம், இதோ திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இம்முறை நாங்கள் சென்னை, பெங்களூர், ஆத்தூர், கோபாலசமுத்திரம்-மன்னார்குடி, பாப்பாநாடு, தஞ்சாவூர்,தொக்காலிக்காடு-பட்டுக்கோட்டை எனப் பல்வேறு ஊர்களில் சிறார் நிகழ்வுகளை நடத்தியிருந்தோம். இப்படி பல ஊருக்களுக்குச் சென்று நமது சுட்டிகளை சந்திப்பத்தில் பெரும் மகிழ்ச்சி. நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக சிறார்களின் படைப்புக்களை சேகரிக்க ‘கதைப் பெட்டி’ வைத்தோம். அது நிரம்பி தான் இந்த இதழை வடிவமைத்திருக்கிறது.
நிகழ்வுகள் மூலம் கிடைத்த படைப்புகளைத் தொடர்ந்து, ஓவியங்களுக்காக நண்பர்களின் உதவியுடன் சாலையப்பாளையம், வேலாயுதம்பாளையம், அய்யனார்புரம் ஆகிய இடங்களிலுள்ள சிறார்களின் ஓவியங்களை பெற முடிந்தது. சிறார்களுக்கு எதேச்சையான சூழலில் கதைகள் சொல்லி அதற்கான ஓவியங்களை பெறுவதில் நண்பர்கள் எங்களுடன் பயணித்தனர். ஆசிரியர்கள் சமபத் மற்றும் பெருஞ்சித்திரன் இருவரும் நாங்கள் சொன்ன விசயங்களை நடைமுறைப்படுத்தி இதை செய்துள்ளனர். அவர்களுக்கு எங்களது நன்றிகள்.இம்முறை புதிய ஓவியர்கள் கார்த்திகா, லலிதா மற்றும் ஃபர்ஹானா அறிமுகம் செய்துள்ளோம். விளையாட்டு பகுதியில் ஒத்தையா இரட்டையா விளையாட்டை அறிமுகம் இடம்பெற்றுள்ளது. நமது தலைமுறை வரை உயிரோடு இருந்த இந்த விளையாட்டு ஏனோ இந்த தலைமுறை சிறார்களிடன் இல்லை. அதனை பரவலாக்கும் நோக்கத்தில் விளையாட்டினை சிறார்கள் மூலமே எளிமையா அறிமுகம் செய்துள்ளோம். விளையாட்டு பற்றி நண்பர்கள் இனியன், விஜயகுமார் மற்றும் செயற்பாட்டாளர்களிடம் தொடர்ந்து உரையாடி தகவல்களை உறிது செய்து பகிர்ந்துள்ளோம். உதவிய அனைத்து நண்பர்களுக்கும் எங்களது அன்புகள்.
நண்பர்கள் கன்னிகோயில் ராஜா அவர்களின் கதை, ராஜேஸ் அவர்களின் பாடல், உதயசங்கர் அவர்களின் வாழ்த்து, வானம் பதிப்பகம் மணிகண்டன் அவர்களின் வடிவமைப்பு என நண்பர்கள் இதழுக்கு பல வண்ணங்கள் சேர்த்திருக்கின்றனர். இன்னும் சின்ன சின்ன விசயங்களும் இதழில் செய்திருக்கிறோம். அதை இதழ் சிறார்களை சென்றடைந்ததும் அவர்களின் கருத்துக்களுடன் பகிர்கிறோம்.
குறிப்பு : சந்தாதாரர்களுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் இதழ்களை அனுப்பிவிடுவோம். ஏற்கனவே அறிவித்தப்படி சாதாரண தபாலில் ஏகப்பட்ட நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. ஆதலால் நண்பர்கள் பதிவு தபால் மூலம் பெறும்படியும் அதற்கான செலவினை எங்களுடன் பகிரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வெளியீட்டு விழா :
திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வரும் வெள்ளி( 01/02/2019) மாலை 6 மணிக்கு தளிர் அரங்கத்தில் சிறுவர்கள் வெளியிடுகிறார்கள். ஆகையால் திருப்பூரிலுள்ள நண்பர்கள் அவசியம் பங்கேற்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். (நிகழ்வினை திருப்பூர் நண்பர்களின் உதவியுடன் நடத்துகிறோம்.)
விபரங்கள் :
01. 02. 2019 வெள்ளி மாலை 6 மணி
தளிர் பதிப்பக அரங்கம்.
திருப்பூர் புத்தகக் கண்காட்சி