குழந்தைகள் வாரம் – டிசம்பர் 7,8,9 நிகழ்வுகள்

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழகத்தில் தொடர்ந்து பல சிறார்களின் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்துக்கொண்டு வருவதை கவனிக்க முடிகிறது. கடந்த மாதத்தில் ஒரு வார இறுதியில் வெவ்வேறு ஊர்களில் ஐந்து நிகழ்வுகள் நடந்திருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அது தொடர வேண்டும் என்ற ஆசையை நிறைய நண்பர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.

அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆம் இந்த வாரம் தமிழகத்தைச் சுற்றி குழந்தைக்களுக்கான நிகழ்ச்சி, குழந்தைகள் பற்றிய நிகழ்ச்சி , கல்வி சார்ந்த நிகழ்ச்சி என ஏழு நிகழ்ச்சிகள் நடக்கிறது. சென்னை, கோவை, தஞ்சை, ஈரோடு, வேலூரி என பல்வேறு ஊர்களில் நிகழ்ச்சிகள் நடக்கிறது. அந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிமுகமே இந்தப் பதிவு. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் கலந்துக்கொள்ளவும்.

தஞ்சாவூர் : உதிரி நாடக நிலம்

உதிரி நாடக நிலம், தஞ்சாவூரில் பிள்ளையார்பட்டி என்ற சிற்றூரஒ மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. நவீன நாடகச் செயல்பாட்டில் முனைப்போடு பங்காற்றி இந்திய அளவிலான குழந்தைகள் நாடக விழாக்களில் தேர்வு செய்யப்படுள்ளது என்பது குறிப்படத்தக்கதாகும். தமிழ் நனீன நாடகப்பேராசான் பேரா.சே.இராமானுஜன் 3ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு நாடக நிகழ்வினை ஒருங்கினைக்கின்றனர்.

நாள் : 08/12/2018 மாலை 6 மணிக்கு சனிக்கிழமை
இடம் : பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர்

நாடக நிகழ்வு:

மாலை : 6.30 – உதிரி நாடக நிலம் வழங்கும் , “உதிரி” தனி உடல் நாடகம்

மாலை : 7.30 ரெங்கபிரமாத் குழந்தைகள் நாடக அரங்கு (கேரளா) வழங்கும் “பார்வையற்ற நாய்” (மலையாள நாடகம்)

தொடர்புக்கு : விஜயகுமார் – 97513 77248

ஜவ்வாது மலை : குழந்தைகளுக்கான கலை இலக்கிய கொண்டாட்டம்

பல்லாங்குழி அமைப்பு கடந்த 1.5 வருடங்களாக தமிழகத்தில் “குழந்தைகளுக்கான கலை இலக்கிய கொண்டாட்டம்” என்ற நிகழ்வினை ஒருங்கிணைத்து வருகிறார்கள்.

நாள் : 09/12/2018 காலை 10 – 1 மணி ஞாயிறு
இடம் : தொன்பாஸ்கோ அரங்கம், ஜமுனாமரத்தூர், ஜவ்வாதுமலை

“சமீபகாலமாகப் பல உரையாடல்களில் நண்பர்களிடம் ஒரு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

சராசரியாக குழந்தைகளுக்கு கிடைக்கப்பெறும் அடிப்படை உரிமைகளில் இருந்து அதிகளவு புறக்கணிக்கப்படும் குழந்தைகள் யார்?

நூற்றுக்கு 95% சதவிகித நபர்கள் உடனடியாக கிராமத்து குழந்தைகள் எனப் பதில் சொல்கின்றனர்.

அப்பதிலைச் சொல்லும் அவர்களிடம் இவ்வாறு கூறி வருகிறேன்.

“உங்கள் பதில் மிகவும் தவறு. பன்முகத்தன்மைக் கொண்ட நமது நிலவமைப்பு மற்றும் வாழ்க்கை முறைகளில் அதிகளவு அடிப்படை உரிமைகளுக்காக புறக்கணிக்கப்படுவதில் முதலில் இருப்பவர்கள் அனைத்து தரப்பான மாற்றுத்திறன் குழந்தைகள்.

இரண்டாவதாக நம்மூர் அகதிகள் முகாம்களில் இருக்கக் கூடிய குழந்தைகள்

மூன்றாவதாக நெய்தல் நிலக் குழந்தைகள். அதாவது கடற்புரத்தில் கடல் சார்ந்து அன்றாட வாழ்வைப் போக்கிக் கொண்டிருக்கும் மக்களின் குழந்தைகள்.

நான்காவதாக குறிஞ்சி நிலக் குழந்தைகள். அதாவது மலைகளையும் மலைக்காடுகளையும் மட்டுமே மையமாக கொண்டு வாழும் பழங்குடியின மக்களின் குழந்தைகள் மற்றும் மலைகளில் உருவாக்கப்பட்டப் பணபயிர் தொழில்களில் ஈடுபட இடப்பெயர்வுகளுக்கு ஆளான மக்களின் குழந்தைகள்.

ஐந்தாவதாக பெருநகரங்களின் பொதுப் புத்தியிலிருந்து சேரி என அழைக்கப் படுகின்ற நிலத்தில் வாழ்கின்ற மக்களின் குழந்தைகள்.

இந்த குழந்தைகளுக்கு பிறகுதான் கிராமத்துக் குழந்தைகள் மற்றும் நகரத்து குழந்தைகள்.”

இந்தப் பதில் எனது பயணங்களில் நான் கண்டுணர்ந்தவை.” எனச் சொல்லிவருக்கிறேன்.

இந்த ஒவ்வொரு பகுதியில் இருக்கின்ற குழந்தைகளும் பல வகைகளிலும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை இழந்தோ அல்லது அவை என்னவென்றுத் தெரியாத வாழ்வியல் சூழலில் தான் இருக்கின்றனர் அல்லது பழக்கப் படுத்துகிறோம்.

என்னளவில் குழந்தைகளுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமைகளில் இறுதியில் இருப்பது கலைக்கான அறிமுகங்கள். கலைகளிலும் கூட பன்முகத்தன்மைதான் என்றாலும், மக்கள் மனங்களில் சுருங்கடிக்கப்பட்டுவிட்டச் சிலக் கலைகளையும் மீறியப் பலக் கலைகளில் சிலவற்றையாவது தொடர்ந்து அவர்களுக்கு அறிமுகப் படுத்தவேண்டியக் காலக்கட்டத்தில் இருக்கிறோம்.

அப்படி நாம் அறிமுகப்படுத்த வேண்டிய கலைகளில் முதன்மையானது வாசிப்பு கலை. அதனை வெவ்வேறான வடிவங்களில் பலத்தரப்பட்டச் சூழலிகளில் அவர்களுக்கு நாம் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

மேலே சொல்லியிருப்பது போல் புறக்கணிக்கப் படும் அனைத்து குழந்தைகளுக்கும் அனைத்தும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆவல்தான் என்றாலும் படிப்படியாகத் தான் செல்லவேண்டும். செல்லவும் முடியும்.

அதன் துவக்கமாக மலைவாழ் குழந்தைகளிடம் வாசிப்பையும், அப்பகுதிகளுக்கு உரித்தானச் சில இசை சார்ந்த கலைகளையும் அவர்களிடம் அறிமுகப் படுத்தலாம் என்ற திட்டத்துடன் களமிறங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இது இரண்டாம் மலை நிகழ்வு. மொத்தத்தில் 4ம் நிகழ்வு.

ஒவ்வொரு நிகழ்வும் பேரனுபவங்கள் பலவற்றைக் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இம்முறை திட்டமிட்டத்தில் பாதிநாட்கள் நான் அங்கில்லாததால் எனக்கு மிகப் பேரனுபவமாக இருக்கும் என நினைக்கிறேன். வாருங்கள் கொண்டாடுவோம்.

கோவை: குழந்தைகள் குறித்த உரையாடல்

நாள் : 09 டிசம்பர், 2018 ஞாயிறு
இடம் : தாமஸ் அரங்கம், கோவை.
நேரம் : காலை 9:30 – மாலை 5:00
பங்கேற்பு கட்டணம்: ரூ. 200/-

(இந்தியக்கல்வி – அறிமுகமும் கலந்துரையாடலும்)

இன்று நம் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான கல்வியை வழங்க வேண்டும் என்பது பற்றி நம்மால் சுதந்திரமாக சிந்திக்கக்கூடிய சூழல் இருக்கிறது. கல்வியில் புதிய மாற்றங்களை எதிர்பார்க்கும் நாம் இந்தியாவில் காலம்தோறும் கல்வி அடைந்து வந்த மாற்றங்களைப் பற்றி புரிந்துகொள்வதும் தேவையாக இருக்கிறது. நம் குழந்தைகளுக்கு புத்துணர்வு நிறைந்த கல்வியை கண்டுபிடிப்பதற்கான மனவலிமையை அது சேர்க்கும். சிறுமிகளுக்கும் கணவரை இழந்த பெண்களுக்குமான கல்வி, சாதி மத பாகுபாடற்ற பொதுக்கல்வி, இந்தியர்களுக்கான ஆசிரியர் பயிற்சி, பெண்களும் ஆசிரியராதல், மாலை நேரப் பள்ளிகள், மதங்களை எதிர்த்த அறிவியல் கல்வி, கட்டாய இலவசக்கல்வி என பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுவதும் இந்தியாவில் கல்வியை வடிவமைக்க ஆண்களும் பெண்களுமாக பலர் தனித்து போராடியுள்ளனர். இன்று சுயசிந்தனையும், அகமகிழ்ச்சியும், புதிய வடிவிலுமான கல்வியை நம் குழந்தைகளுக்குக் கொடுக்க விரும்புவதற்கு இதுவரை கல்வியில் மாற்றத்தைக் கொடுத்தவர்கள் அடித்தளமாக இருக்கிறார்கள்.

இன்றும் அடிமைத்தனத்தையும் சுயநலத்தையும் குழந்தைகளுக்குப் பழக்கிவிடும் கல்வியை மறுத்து கல்வியின் புதிய வடிவத்தைத் தேடும் மனிதர்கள் இருக்கிறார்கள். இந்த உரையாடல் புதிய கல்வியாக நாம் எதைத் தேடுகிறோம் என்பதைப் பற்றியது. ஆதாரக்கல்வி, மரபுக்கல்வி, பள்ளி இல்லாக்கல்வி, கலை விளையாட்டு வழிக்கல்வி என இன்னும் பலவாக நம்முன் விரிந்து நிற்கும் கல்விக்குள் இருக்கும் அர்த்தங்களையும் சாத்தியங்களையும் கவனித்து உணர்வதற்கான நிகழ்வு.

ஒரு குழந்தையின் படைப்பாற்றல், தனித்தன்மை, சுயவிருப்பம் என அனைத்திலும் தாக்கம் செலுத்தக்கூடியது இன்றைய கல்வி. அந்தக்கல்வி மீதான உங்கள் கேள்விகளோடு கலந்துரையாடலாம் வாருங்கள்……

(நிகழ்வின் ஒரு பகுதியாக சிறார் உணவுமுறை மற்றும் உடல்நலம் சார்ந்த உரையாடலும், தொலைக்காட்சிப்பெட்டி குழந்தைகள்மேல் நிகழ்த்தும் பாதிப்புகள் பற்றிய புத்தக அறிமுகமும் கதை சொல்லலும் கதை விளையாட்டுகளும் இருக்கும்)

ஆர்வமுள்ளவர்கள் தங்கள் வருகையை டிசம்பர் 8க்குள் பதிவு செய்து கொள்ளவும். 30 நபர்கள் மட்டும். முன்பதிவு அவசியம்.

பதிவிற்கு
குட்டி ஆகாயம்
98434 72092
சிலேட்டு
98422 02730

கோவை: கி.ரா குழம்பு சிறார்களுக்கான நாடகம்

நாள் : 08 டிசம்பர், 2018 சனி
இடம் : Clusters Media Institute,Kovai
நேரம் : மாலை 6.30
கட்டணம் : 150/-
தொடர்புக்கு : 86086 44443
முன்பதிவு அவசியம்

ஈரோடு : 

நாள் : 07 டிசம்பர், 2018 வெள்ளி
இடம் : Smile Kids Library59, state bank nagar , Moolapalayam , Erode
நேரம் : மாலை 5:45 – 7.15
தொடர்புக்கு : 98655 11414

சென்னை : கற்க கசடற (ஆசிரியர்களுக்கான நிகழ்வு)

நாள் : 08 டிசம்பர், 2018 சனி
இடம் : ஐ.ஐ.டி சென்னை ( IC & SR building)
நேரம் : காலை 9 மணி – மாலை 5 மணி
தொடர்புக்கு : ராம் 99522 91278

வித்யா விதை தொடர்ந்து பள்ளிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். அவர்களின் செய்பாடுகளை வெளிப்படுத்தும் விதமாக ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த நிகழ்வு பற்றின அறிமுகம் இதோ கீழே..

ஒரு விடயம், அது எதுவாயினும் குழந்தைகள் ஏன் கற்க வேண்டும்? முதலில் கற்றல் என்றால் என்ன? ஆசிரியையின் பணி வகுப்பறைகளில் என்னவாக இருக்கலாம்? சொல்லித்தருவதினால்தான் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்களா? சரி, சொல்லித்தரக்கூடாது என்றால் வேறு என்ன செய்ய வேண்டும்?

ஆசிரியர்கள் கூட்டாக ஒரு பாடத்தை ஆலோசித்து எடுக்கலாமா? அப்படி எடுத்தால் ஆசிரியர்களுக்குள் நேர்மறைக் கலாச்சாரத்தை எவ்வாறு கடைப்பிடிக்கலாம்.
பாடப்புத்தகத்தைத் தவிர வேறு எவ்வாறு வகுப்பறைகளுக்குத் தயாராகலாம். குழந்தைகளை அடிக்கலாமா? தண்டனைத் தரலாமா? அடித்தால்தான் பயம் இருக்குமா? வகுப்பறைகளுக்குள் பயம் அவசியமா? பயந்தால் படிக்க முடியுமா? இன்னும் ஆயிரமாயிரம் கேள்விகள்.  கேள்விகளுக்கென ஒரு விழா தான் #கற்ககசடற.

கேள்விகள் ஏன் கேட்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். தான் என்ன செய்கிறோம் என்பதை விட எதற்காக செய்கிறோம் என்று உணர்ந்து விட்டால் அற்புதங்கள் நிகழும்.
வித்யா விதையின் அனைத்துக் கூட்டுப்பள்ளி ஆசிரியர்களும் பங்குகொள்ளப் போகும் மாபெரும் போட்டி. மேலும், இந்த அனைத்து கேள்விகளுக்கும் நாங்கள் பதிலளிக்கப் போவதில்லை. எங்கள் ஆசிரியர்களே விடைக் கூறப்போகிறார்கள். “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற வாக்கியத்தில் நம்பிக்கை உடையவர்கள் நாங்கள். அவர்கள் கூறப்போகும் எந்த பதிலிலும், சரி தவறென்று எதையும் கூறப்போவதில்லை. கேள்விகள் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கப் போகிறோம். நான்கு வாரப் போட்டி. ஒவ்வொரு வாரமும் ஆசிரியர்கள் குழுவாகவும் சில நாட்களில் தனியாகவும் பங்குகொள்வார்கள். #டிசம்பர்8, அனைத்து பள்ளி ஆசிரியர்களும் ஒன்றாக வந்து அவர்கள் பயின்றதை பகிர்ந்து கொள்வார்கள்.

ஏனெனில், “அறிவைப் பகிர வேண்டும்” என்ற வாக்கியத்திலும் நம்பிக்கை உடையவர்கள் நாங்கள். வித்யா விதையின் பக்கத்தைப் பின்தொடருங்கள், இந்த மாதம் முழுவதும் கற்றல் திருவிழாவாகக் கொண்டாடுவோம்.

கடந்த ஆண்டு கற்க கசடற விழாவைப் பற்றிப் படிக்க இங்கே சொடுக்கவும் http://bit.ly/kartkakasadara

வேலூர் : தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2017

நாள் : 09 டிசம்பர், 2018 ஞாயிறு
இடம் : காபு அரங்கம், ஊரிசு கல்லூரி வளாகம், அண்னாசாலை வேலூர்

இதில் சிறந்த குழந்தை இலக்கிய நூலாக விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் வித்தைக்கார சிறுமி (வெளியீடு : வானம் பதிப்பகம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்நூல் பற்றிய கலந்தாய்வு நடக்கிறது. ஆய்வுரை செய்பவர் வெண்புறா அவர்கள்.

Leave a comment