சுட்டிகளின் குட்டிக் கேள்விகள்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

கேள்விகள்…சிறுவர்களிடையே எதார்த்தமாக உருவாகும் குணம் கேள்வி கேட்கும் குணம். ஆனால் கேள்விகள் கேட்பதை வீட்டுச் சூழல் முழுவதுமாக‌ அனுமதிப்பதில்லை.

“சாமியைப் பார்த்து அப்படியெல்லாம் கேள்வி கேட்க கூடாது”, “சும்மா..தொண தொணன்னு ஏதாச்சும் கேட்காத” போன்ற எதிர்வினைகள் அவர்களது கேள்விகளை ஆரம்பத்திலே கிள்ளிவிடுகின்றன. இதன் தொடர்ச்சியாக மேலும் பள்ளி சூழல் ஆசிரியர்களுக்கே பேசும் உரிமையை கொடுத்து வைத்திருக்கிறது. இப்படி துவக்கத்திலே கேள்வி கேட்கும் குணத்தை குத்தம் சொல்லி கிள்ளி விட்டு சற்றே வளர்ந்ததும் வகுப்பறையில் “ஏதாச்சும் புரியாட்டி கேள்வி கேளுங்க” என்று ஆசிரியர்கள் சொல்லும் போது வெறும் மௌனம் மட்டுமே மிஞ்சுகிறது. வகுப்பறையில் மட்டுமல்ல அலுவலகத்தில் கூட இதே சூழல் தான் நிலவுகிறது. யாராச்சும் கேள்வி கேளுங்க என்று கெஞ்சினாலும் கூச்சமும் தயக்கமும் கேள்விகளே மனதை விட்டு வெளியே விடுவதில்லை.

“பஞ்சு மிட்டாய்” இணையம் சுட்டிகளுக்காக‌ கேள்விகளுக்கான தளத்தினை உருவாக்க ஆசைப்படுகிறது. ஆதலால் சுட்டிகளின் கேள்விகளை சுட்டிகளின்_குட்டிக்_கேள்விகள் என்ற “டேக்” ல் அதனை தொகுக்கிறோம். இணையத்தளத்தில் வலதுப் புறம் சிறார்களின் கேள்விகள் பார்வைக்கு வைத்திருக்கிறோம். அதேப் போல் பத்து பத்து கேள்விகளை தொகுத்து ஒரு பதிவாக கொண்டுவர உள்ளோம்.

இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுவதை விட‌ கேள்விகளுக்கான தளத்தினை உருவாக்குவதே எங்களது நோக்கம். அப்படி நாங்கள் சேகரித்த முதல் 10 கேள்விகள் இதோ பதிவாக…

English ல‌ capital & small letter எழுதுற மாதிரி தமிழ்ல ஏன் எழுத‌க் கூடாது?

– மார்கஸ் வயது 4

ராவணன் ஏன் நூறு தலை கேட்கல ?

– நிகிலேஷ் வயது 4

அப்பா சாமிக்கு இங்கிலிஷ் தெரியுமா?. sorry சொன்னா சாமிக்கு புரியுமா?

– மகேஷ் வயது 9

“ஆட்டுக்கு கல்யாணம் நடக்குமா பா? 

நடக்காதுடா!

அப்புறம் எப்படி குட்டி போடுது?

– மகிழ்நன் வயது 9

ஏரோபிளேன் எப்படி றெக்கையை ஆட்டாமல் பறக்குது?

– தியா வயது 6

அப்பா உங்க ஆபீஸ் ல home work தருவாங்களா ?

– இசை வயது 6

கத்திரிக்கோலுக்கு ஏன் கத்திரிக்கோலுன்னு ஏன் பெயர் வந்திச்சு?

– ஸ்ரீலஷ்மன் வயது 8

அப்பா,கொசு செத்ததும் சாமி ஆகிடுமா?

தாத்தா, பாப்பாநாடு ஊர்ல பாப்பா மட்டும் தான் இருப்பாங்களா?

– தன்யஸ்ரீ வயது 6

நம்ள மாதிரியே பூவும் இலையும் பேசிக்குமா?

– லலிதாஸ்ரீ வயது 6

இப்படி குழந்தைகளின் அழகான கேள்விகள் எங்களுக்கு கிடைத்தது. தொடர்ந்து இதுப் போன்ற கேள்விகளை தொகுக்க ஆசைப்படுகிறோம். இதுப்போன்று உங்கள் பகுதி குழந்தைகள்/சிறார்கள் கேட்கும் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள். தொடர்ந்து நமது இணையத்தில் வெளியிடலாம்.

கேள்விகளை வாட்ஸ் ஆப் 9731736363 அல்லது editor.panchumittai@gmail.com என்ற மின்னஞல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Leave a comment