பெங்களூரில் பஞ்சுமிட்டாய் சிறார் நிகழ்வு

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்

பஞ்சு மிட்டாய் தொடர்ந்து பெங்களூரில் சிறார்களுக்கான நிகழ்வுகளை நடத்திக்கொண்டு வருகிறது. எங்கள் பகுதி சிறார்களுக்கு சிறிய அளவிலும் , அனைத்து சிறுவர்களுக்கான நிகழ்வினை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சற்றே பெரிய அளவிலும் நடத்தி வருகிறது. இந்தப் பொதுவான நிகழ்வில் விருந்தினராக இதுவரை பாவண்ணன், சொக்கன், வா.மணிகண்டன், இனியன், கிருத்திகாதரன் என எழுத்தாளர்களும் செயல்பாட்டாளர்களும் கலந்துக்கொண்டிருக்கின்றனர். சென்ற முறை புது முயற்சியாக கி.ரா குழம்பு நாடகத்தை ஏற்பாடு செய்திருந்தோம். பெங்களூர் பெற்றோர்கள் தங்களது ஆதரவுகளை எதிர்ப்பார்த்ததை விட அதிகமாகவே கொடுத்து உற்சாகப்படுத்தினர்.

அந்த உற்சாகத்துடன் தற்போது அடுத்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறோம். குழந்தைக்களுக்காக தொடர்ந்து இயங்கி வரும் “கதை சொல்லி சதீஸ்” மற்றும் “ஓரிகாமி தியாக சேகர்” அவர்கள் விருந்தினர்களாக வருகிறார்கள். குழந்தைகளுக்கு புதிய கலை வடிவங்களை அறிமுகம் செய்யும் நோக்கத்துடனே தொடர்ந்து வெவ்வேறு துறை சார்ந்த நண்பர்களை அழைத்து வருகிறோம். வாருங்கள் குழந்தைகளுடன் ஒரு மதியப் பொழுதை குதூகலமாக கொண்டாடலாம்.

நாள் : ஆகஸ்ட் 19 ஞாயிறு
நேரம் : மதியம் 2.30 மணி முதல் 6 மணி வரை

விருந்தினர்கள் : ‘கதை சொல்லி சதீஸ்’ மற்றும் ஓரிகாமி தியாக சேகர்.

 

முன்பதிவுக்கு:

ஜெயக்குமார் – 9008111762

அருண் கார்த்திக் – 99027 69373

பிரபு – 9731736363

Leave a comment