இவை கதைகள் அல்ல! – இனியன்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

சுதந்திரமான சிந்தனைகளில் துவங்கி, அதனை வெளிப்படுத்துவதில் இருந்து தான் விரும்பிய வாய்ப்புகளை பெறுவது வரை பெரிதும் புறக்கணிப்பிற்கு ஆளாகும் ஒரு சமூகம் இருக்கிறது என்றால் அது குழந்தைகள் சமூகம்தான்.

அதிலும் பன்முகத் தன்மையோடு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஏற்றதாழ்வுகளுக்கு என்றே உருவாக்கப்பட்ட வாழ்வியல்முறைகள் இருக்கிற நிலப்பரப்பில் மிகப்பெரிய அளவிலான புறக்கணிப்புகள் சமமில்லா அறிமுகங்களை அனுபவிப்பதும் குழந்தைகளே.

இதனை இங்கு சொல்வதற்கு காரணம் “எங்களுக்கெல்லாம் யாரு வாய்ப்பு கொடுக்கிறா?”எனக் கேட்ட அந்த வளரிளம் குழந்தையின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. கதைகள், புத்தகங்கள் சார்ந்த உரையாடலில் எழுப்பட்ட அக்கேள்வி கலையின் அடிப்படைக்கே என்றால் கலைகளின் அறிமுகங்கள் கிடைக்கப் பெறுகிற போது எப்படியெல்லாம் பரிமணிக்கும் என யோசிக்கும் போது பதற்றம் கொள்கிறது சிந்தனை.

அதேநேரம் அனைவருக்குமான வாய்ப்பை நம்மால் ஏற்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களும் புரியாமல் இல்லை. இருந்தாலும் தான் வாய்ப்புகளுக்காக புறக்கணிப்பு செய்யப்படுகிறோமோ என ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிலத்தில் அவர்களுக்கான வாய்ப்புகளுடன் அவர்களுக்கான கலை அறிமுகங்களுடன் களம் காண்கிறது இவ்வருடத்தின் முதல் “குழந்தைகளுக்கான கலை இலக்கிய கொண்டாட்டம் ” நிகழ்வு.

“கனவுகளில் கூட பாடப் புத்தகம் தவிர வேறு எந்தப் புத்தகமும் பார்த்ததுமில்லை, யோசித்ததும் இல்லை. இருந்தாலும் பாடம் படிப்பது கூட சிரமமாய் இருக்கிறது.” எனச் சொன்னவள் கையில் கதைகளை கொடுத்து “இவை கதைகள் அல்ல உனக்கான பாடங்களை நீ படிக்கப் போகும் கலைக்கான முதல் படி, வாசிப்பு என்பதும் ஒரு கலை. அதை நீ நேசித்தால் சிரமமாய் இருக்கும் பாடங்கள் கூட உனக்கு சுலபமாகும்.” எனச் சொல்லி வந்தேன். அவளும் காத்திருக்கிறாள் தனக்கு அறிமுகமான கலையை நம்மோடு பகிர்ந்து கொள்ள.

நானும் அதே காத்திருப்புடன் களமாடிக் கொண்டிருக்கிறேன் எப்போதும் நண்பர்களின் ஒத்துழைப்புடன்.

நிகழ்விற்காக இம்முறை எடுத்துக்கொண்ட புத்தகங்கள்:

1. அண்டா மழை – உதயசங்கர்
2. விலங்குகள் I – ஜி. சரண்
3. விலங்குகள் II – ஜி. சரண்
4. புதையல் டைரி – யெஸ். பாலபாரதி
5. பயன்களின் திருவிழா – உதயசங்கர்
6. அம்மாவுக்கு மகன் சொன்ன உலகின் முதல் கதை – மு. முருகேஷ்
7. மரப்பாச்சி சொன்ன ரகசியம் – யெஸ். பாலபாரதி
8. மிளகாய் பட்டணம் – க. சரவணன்
9. ஏணியும் எறும்பும் – உதயசங்கர்
10. எலியின் பாஸ்வேர்டு – எஸ். ராமகிருஷ்ணன்
11. ஊஞ்சல் தாத்தா – அர. ஹபீப் இப்ராஹீம்
12. மூக்கு நீண்ட குருவி – கன்னிக்கோவில் இராஜா
13. புலி கிலி – நீதிமணி
14. பறக்கும் ஹேர் கிளிப் – விஜயபாஸ்கர் விஜய்
15. ரகசிய கோழி – உதயசங்கர்

நன்றி,
இனியன்,
பல்லாங்குழி அமைப்பு.

குறிப்பு : இந்தக் கலை இலக்கிய கொண்டாட்டம் நிகழ்வு பற்றி தொடர்ந்து இனியன் அவர்கள் தனது முகப்புத்தகத்தில் தகவல்களை பகிர்ந்துக்கொண்டிருக்கிறார்.

Leave a comment