மாற்றுகளைத் தேடி! – கலகலவகுப்பறை சிவா

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

12 வயதே ஆன மாற்றுத்திறன் சிறுமி. மயக்க மருந்துகளைக் கொடுத்தும் பயமுறுத்தியும் ஏழு மாதங்களாகப் பாலியல் கொடுமை செய்தவர்கள் ஏறத்தாழ இருபது பேர்.

8 வயதுச் சிறுமி. எட்டுநாட்கள் கோவிலில் அடைத்து வைத்துப் பாலியல் கொடுமைகள் செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டாள். குற்றவாளிகள் பல்வேறு வயதுடையவர்கள்.

9 வயதுச் சிறுமியின் இறந்த உடலில் 86 காயங்கள்.

வேலைக்குச் சென்று திரும்பிய வளரிளம் பெண் பாலியல் கொடுமைகளுக்குப் பின் கொல்லப்பட்டாள்.

பொறியியல் பட்டதாரி, பக்கத்து வீட்டுச் சிறுமியைப் பாலியல் கொடுமைகளுக்குப்பின் கொன்றுவிட்டு இயல்பாக இருந்திருக்கிறான்.

குழந்தை முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். பெண் குழந்தைகள் காணாமல் போகிறார்கள். சிறுவர்களும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்.

ஆசிரியர் தாக்கப்படுகிறார். மாணவர் தாக்கப்படுகிறார். பெற்றோர் கொல்லப்படுகின்றனர். பெரியவர்களை மதிப்பதில்லை. இளம் பருவத்திலேயே போதைப்பழக்கம் அதிகரித்துள்ளது. வன்முறை அதிகரித்துள்ளது.

திரைப்படங்களைக் குறை சொன்னாலும் குழந்தைகளைத் திரையரங்குகளுக்கு அழைத்துச் செல்வது பெரியவர்கள் தான். வீட்டில், தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நம்மால்தான் குழந்தைகள் பார்க்கின்றனர். தொழில் நுட்பத்தின் நன்மை, தீமைகள் குறித்த தெளிவு இல்லாமல் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்துவைக்கிறோம்.

பள்ளிகளில் என்ன நடக்கிறது?

குழந்தைகள் மதிப்பெண்களை நோக்கியே ஓட வேண்டிய கட்டாயம். வளரிளம் பருவத்தில் பல்வேறு அழுத்தங்களால் தான் அவர்கள் பல்வேறு தீய பழக்கங்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை நாம் அறிவதில்லை.

பாடப்புத்தகங்களில் இருக்கும் பாடங்களை நடத்துவதிலேயே பள்ளி நாட்கள்  கழிந்துவிடுகின்றன. விளையாட்டு, ஓவியம், இசை, தையல் போன்ற பல்வேறு கல்விசார் செயல்பாடுகளுக்குத் தனியான சிறப்பு  ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளிகளில் கிடையாது.

நீதி என்ற பெயரில் அறிவுரைகளைச் சொல்லுவதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவதில்லை. அவற்றை ரசித்துவிட்டு எளிதில் மறந்துவிடுவோம். நேரடியாக அறிவுரை சொல்லாமல் வகுப்பறையில் குழந்தைகளிடையே பல்வேறு பண்புகள் குறித்த கலந்துரையாடல்களை உருவாக்க வேண்டும். அதற்குக் குறும்படங்கள் பெரிதும் பயன்படுகின்றன.

இது குறும்படங்களின் காலம். குறைந்த செலவில் எளிய கருவிகள் மூலம் யாரும் எளிதில் ஒரு குறும்படத்தை உருவாக்கிவிட முடியும். இப்போது பல்வேறு தலைப்புகளில் சிறந்த குறும்படங்கள் உருவாக்கப்படுகிறன. பெரும்பாலான படங்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. மிகக் குறைவான நேரத்தில் அழுத்தமாகச் செய்திகளைச் சொல்லும் படங்கள் ஏராளம்.

குறும்படத்தைத் திரையிட்டபின் அது குறித்த உரையாடலை உருவாக்குவதே முக்கியம். குழந்தைகள் பல்வேறு செய்திகளை, தங்களது பார்வைகளை வெளிப்படுத்துவர். உரையாடல் திசை மாறும்போது நெறிப்படுத்துவதை மட்டும் ஆசிரியர் செய்தால் போதும்.

அவ்வப்போது சூழலுக்கு ஏற்ற படங்களைத் திரையிட்டுக் கலந்துரையாடச் செய்யலாம். பேசுதல், வாசித்தல், கருத்தை வெளிப்படுத்துதல், மறுத்தல் போன்ற பல்வேறு திறன்களை வளர்ப்பதில் குறும்படங்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.

குறும்படங்களைத் திரையிடல், தொடர்ந்த செயல்பாடுகள் மூலம் குழந்தைகளிடையே இயல்பாக நடத்தை மாற்றங்களை உருவாக்க இயலும்.

பாடம் நடத்தினோம். தேர்வு வைத்தோம். நிறைய மதிப்பெண்கள் பெற்றார்கள். என்பது உடனடி விளைவைத்தருகிறது. எனவேதான் பெரும்பாலானோர் மதிப்பெண்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம்.

மனிதப் பண்புகளை வளர்க்கும் செயல்பாடுகளில் உடனடி விளைவு கிடைக்காமல் போகலாம். ஆனால் செயல்பாடுகள் தொடரும்போது காலப்போக்கில் மாற்றங்கள் நிகழும். வருங்காலத் தலைமுறையை சுய சிந்தனையுடைய தலைமுறையாக மாற்றும் செயல்பாடுகளை முன்னெடுத்தலே ஆசிரியரின் கடமையாகும்.

2 Comments

 • Kalaiyarasi says:

  Super sir… correct …we teach value Education , how to respect our Relationship also sir…

 • IAS Karnika says:

  ஐயா பள்ளிகளிலும்
  இதையும் விழிப்புணர்வுக்கு கொண்டு செல்லுங்கள் தாழ்மையுடன் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

  👍விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் ஏ.கே.டி மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் யுகேஜி படிக்கும் 4 வயது சிறுமியிடம் பிரின்சிபால் லசி போஸ்கோ மற்றும் ஆசிரியர் போஸ்யா பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கு மற்ற இரு வகுப்பு ஆசிரியர்கள் உதவி செய்துள்ளனர். வெளியில் சொன்னால் பாம்பு உள்ள இருட்டறையில் (Dark Snake Room) அடைத்து விடுவோம் என மிரட்டி வைத்துள்ளனர். அதனால் குழந்தை சொல்ல அஞ்சி ஒரு நாள் பயந்து பயந்து தாயிடம் சொல்லியது. அதிர்ச்சியுற்ற பெற்றோர் குழந்தையிடம் ஆசிரியைகள் என்னென்ன பாலியல் வன்கொடுமை செய்தனர் என்பதை வாக்கு மூலமாக சிடியில் பதிவு செய்து காவல் நிலையத்தில் கொடுத்தனர்.

  👍 பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு அரசு நடுநிலைப் பள்ளியில் ஆரம்ப சுகாதார மைய குழுவினர் மருத்துவ முகாம் நடத்தினர்.

  அப்போது பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 6 முதல் 9 வயதுடைய மாணவிகள் 5 பேர் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது.இதில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவர்கள் 3 பேர் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
  இதைத்தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 சிறுவர்களை பிடித்தனர். அதில் ஒரு சிறுவன் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். மற்ற 2 பேரும் தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இதை தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 சிறுவர்களையும் கைது செய்து, கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

  👍மதுரை கோட்ட அலுவலக வளாகத்தில், ரயில்வே துறையின் கீழ் செயல்படும் ரயில்வே மிக்சிட் மேல்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த ஆண்டு இந்த பள்ளியிலிருந்து கோவா, மூணாறு போன்ற இடங்களுக்கு மாணவ மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்றுள்ளனர். அப்போது, பள்ளியின் தலைமையாசிரியர் ராஜேஷ் பொன்குமார் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாமல் இருந்த பதிக்கப்பட்ட மாணவி, சமீபத்தில்தான் 1098 ஹெல்ப் லைன் எண்ணில் புகாரைப் பதிவு செய்துள்ளார்.

  👍நாகைப்பட்டினம்: நாகை மாவட்டம் திருவேங்கடம் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.

  👍தக்கலை, ஜூலை 4: திருவிதாங்கோடு அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். குமரி மாவட்டம் தக்கலை அடுத்த திருவிதாங்கோட்டில் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.

  👍மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்த ஆசிரியர்…. செல்போன் கடையில் சிக்கியது 100க்கும் மேற்பட்ட வீடியோ!
  நெல்லை மாவட்டம் பணகுடி அரசு உயர்நிலைப்பள்ளியின் கணினி ஆசிரியராக இருப்பவர் அந்தோணிசாமி. இவர் 3 ஆண்டுகளுக்கு முன் அதே ஊரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். அப்போது அங்கு படிக்கும் மாணவிகளிடம், தேர்வில் பெயில் ஆக்கி விடுவதாக மிரட்டி முத்தமிடுவது, பாலியல் ரீதியில் துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
  அதுமட்டுமல்லாமல், அப்பாவி மாணவிகளை நிர்வாணமாக செல்போனில் வீடியோ பதிவு செய்தும் ஆசிரியர் வைத்துள்ளார். அத்துடன் வகுப்பறையில் யாரும் இல்லாத போது மாணவிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி, செல்போனில் பதிவு செய்துள்ளார்.
  இந்நிலையில், 3 மாதங்களுக்கு முன் தனது செல்போனை பழுதுநீக்குவதற்காக பணகுடியில் உள்ள கடையில் ஆசிரியல் அந்தோணிசாமி கொடுத்துள்ளார். மெமரி கார்டை ஆய்வு செய்தபோது, பள்ளி மாணவிகளை ஆசிரியர் அந்தோனிசாமி நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்திருப்பது தெரிய வந்தது.அத்துடன், அந்த காட்சிகளை அந்த கடைக்காரர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் .இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பத்தினரிடம் புகாரைப் பெற்ற பணகுடி போலீசார், அந்தோணிசாமியை கைது செய்துள்ளனர்.

  👍தேனி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

  👍மதுரை கொட்டாம்பட்டியில் உள்ள துவக்கப்பள்ளியில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அப்பள்ளி ஆசிரியர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  👍மேட்டுப்பாளையம் அருகே மலைவாழ் குழந்தைகள் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக எழுந்த புகாரினை தொடர்ந்து ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யபட்டார்.

  👍திருவண்ணாமலை அருகே ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி தனியார் பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  👍திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சிறுமூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

  👍மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் தலைமையாசி‌ரியராக பணியாற்றியவர் ஆரோக்கியசாமி. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் பயின்ற சுமார் 90 மாணவியருக்கு, 2 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல்கள் தந்ததாக ஆரோக்கியசாமி மீது பெற்றோரும், மகளிர் அமைப்பினரும் புகார் கூறியிருந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் குற்றம் செய்ததாக ஆரோக்கியசாமி மீதும், குற்றச்சாட்டை மறைத்ததாக வகுப்பு ஆசிரியர்கள் மூவர் மீதும் வழக்கு தொடர்ந்தனர். மதுரை மாவட்ட தீண்டாமை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கில், 24 மாணவியர் சாட்சியம் அளித்தனர்.

  இதையடுத்து ஆரோக்கியசாமிக்கு, பல்வேறு பிரிவுகளில் 55 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

  👍மதிய நேரத்தில் சாப்பிட வீட்டுக்கு செல்லும் மாணவிகளையும், சாப்பாடு முடித்துவிட்டு பள்ளிக்கு மீண்டும் செல்லும் மாணவிகளையும் குறிவைத்து பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவரை ஹைதராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.

  இது தொடர்பாக கால்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, அந்த ஆட்டோ டிரைவர், பள்ளி மாணவிகளிடம், எனது சகோதரிக்கு ஒரு சிறிய உதவி செய்ய வேண்டும் வர முடியுமா என்று உதவி கேட்பார், அவரை நம்பி வரும் மாணவிகளை பலவந்தமாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

  👍14 வயது மாணவியை 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்: பள்ளி தலைமையாசிரியர், 2 ஆசிரியர்கள், 15 மாணவர்கள் கைது

  👍வீட்டுக் காவலாளிகளே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்; இந்த அவலம் தமிழ்நாட்டில் ???

  இன்னும் தோண்ட தோண்ட நிறைய உள்ளது. அவ்வளவையும் பதிவிட்டால ? நான் இங்கே பதிவிட்ட அனைத்தும் வரலாற்றில் அன்று அல்ல. வரலாற்றில் இனறு ..

  உலகிலேயே பாலியல் கொடுமைகள் மிக மிக குறைவாக நடக்கும் நாடு இந்தியா _ னு எப்ப செய்தி வ௫ம் ?

Leave a comment