பஞ்சு மிட்டாய் சிறார் காலாண்டிதழ் – அறிமுகம்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

சிறார் உலகை பிரதிபலிக்கும் நோக்கத்துடனே பஞ்சு மிட்டாய் காலாண்டிதழ் இயங்குகிறது. சிறார்களின் படைப்பும் முழு சுதந்திரத்துடன் இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றோம். சிறார்கள் சொல்லும் கதைகள் அவர்களது மொழியிலே பதிவு செய்யப்படுகிறது,ஓவியங்களிலும் கூட பெரியோர்களின் தலையீடு இல்லாமல் தான் இருக்கிறது. இதழுக்கான படைப்புகளும் நிகழ்வுகள் மூலம் எதார்த்தமான சூழலில் எடுக்கப்படுகிறது. வாசிக்கும் பழக்கத்தை சிறார்களுக்கு விதைக்கும் வகையில் இதழ் வடிவமைக்கப்படுகிறது.

இதுவரை (செப்-2018 வரை ) மொத்தம் ஏழு இதழ்கள் வெளியாகியுள்ளன. முதல் நான்கு இதழ்கள் இணைய இதழாக வெளியாகியது. இணைய இதழ் நல்ல வரவேற்பை பெற்றது. நண்பர்களின் துணையுடன் 5ம் இதழிலிருந்து அச்சு இதழாக மாறியது. தற்பொழுது காலாண்டு இதழாக அச்சு வடிவில் பல வண்ண இதழாகவும் தரமான தாள்களுடனும் குழந்தைகளுக்கு பிடித்த வடிவமைப்பில் அவர்களின் படைப்புகளை முன்நிறுத்தி வெளிவருகிறது. அச்சு இதழாக 5 மற்றும் 6 இதழ் வெளியாகியுள்ளது. அச்சு இதழ் பல்வேறு நிலப்பகுதியை சார்ந்த குழந்தைகளையும் சென்றடைந்துள்ளது.

பஞ்சு மிட்டாய் இதழ் சிறுவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்,குழந்தை செயற்பாட்டாள்ர்கள்,எழுத்தாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்களது பகுதி பிள்ளைகள் பஞ்சு மிட்டாய் இதழை ரசித்ததைப் பற்றியும், இதழைப் பார்த்த பிறகு சிறுவர்களுக்கு கதைகள் மீது ஏற்பட்ட ஆர்வத்தைப் பற்றியும்,முதன் முதலாக குழந்தைகள் சுயமாக உருவாக்கிய கதைகள் பற்றிய மகிழ்ச்சியையும் பகிர்ந்து வருகின்றனர்.

கதைகள்,பாடல்கள்,வாசிப்பு அனுபவம், பாரம்பரிய‌ விளையாட்டு, புதிர், காமிக்ஸ் மூலம் அறிவியல் துணுக்குகள்,வண்ணமையான் ஓவியங்கள் என பஞ்சு மிட்டாய் சிறார்களின் மகிழ்ச்சையை மட்டுமே ஆதரமாக கொண்டு செயல்படுகிறது.

பஞ்சு மிட்டாய் சந்தா விபரங்கள் :

10 இதழ்கள் – ரூ.500/-

5 இதழ்கள் – ரூ.250/-

தனி இதழ் : ரூ.50/-

குறிப்பு: சாதாரண தபால் சரியாக வராதோருக்கும் மற்றும் tracking வசதியுடன் தேவைப்படுவோர்க்கு 100ரூ (புத்தகத்திற்கு 10ரூ) சந்தாவுடன் சேர்த்து அனுப்பும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

வங்கி / PayTM விபரங்களுக்கு : பிரபு – 9731736363  / editor.panchumittai@gmail.com

இதழ் தேவைப்படும் நண்பர்களுக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும்.

நேரடியாக வாங்க :

பெங்களூர் & தஞ்சாவூர்: பஞ்சு மிட்டாய் சிறார் குழு – பிரபு – 9731736363

சென்னை : வானம் பதிப்பகம் – 9176549991 [இராமாபுரம்] , பனுவல் புத்தக நிலையம் / டிஸ்கவரி புக் பேலஸ் / பாரதி புத்தக நிலையம்

இணையம் மூலம் வாங்க :

CommonFolks
CommonFolks
Panuval
     Panuval

 

 

 

 

 

பஞ்சு மிட்டாய் இதழ் பற்றிய ஆசிரியர்கள்/பெற்றோர்கள்/எழுத்தாளர் நண்பர்களின் பதிவுகள்.

இணைய‌ இதழ்கள் :

இதழ் 4 – https://goo.gl/5j4XQS

இதழ் 3 – https://goo.gl/cTWuXk

இதழ் 2 – https://goo.gl/Liaiyc

இதழ் 1 – https://goo.gl/Ycv8ne

விபரங்களுக்கு : பிரபு – 9731736363 / editor.panchumittai@gmail.com

Leave a comment