குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த ஆண்டில், எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் சிறார் இலக்கியப் பங்களிப்பைக் குறிப்பிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். 1980 – களிலிருந்து சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம், கட்டுரை, ஆகிய துறைகளில் இயங்கி வருகிறார். இதில் சிறார் இலக்கியத்தில் மட்டும் 106 படைப்புகள் வெளியாகியுள்ளன. அழ.வள்ளியப்பாவின் காலத்திற்கு பிறகான, தமிழ்ச் சிறார் இலக்கியச் சூழல் வெவ்வேறு காரணங்களால் சரிவைச் சந்தித்தது. ஆனால், அந்தக் காலக்கட்டத்தில் மிகத் தீவிரமாக சிறார் இலக்கியத்தில் இயங்கியவர்கள் வெகு சிலரே. அதில் எழுத்தாளர் உதயசங்கர் மிக முக்கியமானவர். படக் கதைகள், பாடல்கள், சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை, பெற்றோருக்கான கட்டுரைகள் எனச் சிறார் இலக்கியத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் பங்காற்றி வருபவர். கடந்த 2021ஆம் ஆண்டு தோன்றிய, தமிழ்நாடு சிறார் கலைஞர்கள்-எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் சிறார் இலக்கியப் படைப்புகளின் பட்டியல்.
- தலையாட்டி பொம்மை – குழந்தைப்பாடல்கள் – காலம் வெளியீடு-2002
- பச்சை நிழல் – சிறுவர் கதைகள்- என்.சி.பி.ஹெச்.- 2014
- மாயக்கண்ணாடி – சிறுவர் கதைகள்- நூல்வனம்- 2016
- பேசும் தாடி – சிறுவர் நாவல் – வானம்- 2016
- விரால் மீனின் சாகசப்பயணம் – விகடன் பிரசுரம் – 2017
- கேளு பாப்பா கேளு – குழந்தைப்பாடல்கள் – வானம் 2017
- பேய் பிசாசு இருக்கா? – கட்டுரை நூல் – வானம் 2017
- அண்டாமழை – சிறுவர் கதைகள் – வானம் 2018
- ரகசியக்கோழி – சிறுவர் கதைகள் – வானம் 2018
- ஏணியும் எறும்பும் – சிறுவர் கதைகள் –வானம் 2018
- மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி – சிறுவர் கதைகள்-வானம் 2018
- சூரியனின் கோபம் – சிறுவர் கதைகள் – வானம் 2020
- மாயாவின் பொம்மை – சிறுவர் கதைகள் – வானம் 2020
- கால்களில் ஒரு காடு – சிறார் கதைகள் – புக் ஃபார் சில்ட்ரென் 2021
- சிறார் கிராமியக்கதைகள் – புக் ஃபார் சில்ட்ரென் 2022
- சிறார் நாடோடிக் கதைகள் – புக் ஃபார் சில்ட்ரென் 2022
- என் அம்மா எங்கே – வானம் 2022
- குட்டிப்பாப்பாவின் அற்புத உலகம் – சுவடு 2022
- பேயா பிசாசா? – புக் ஃபார் சில்ட்ரென் 2022
- மாரி என்னும் குட்டிப்பையன் – அறிவியல் வெளியீடு – 2022
- கஞ்சராஜாவின் கணக்கு – புக் ஃபார் சில்ட்ரென் – 2022
- விசிலடிக்கும் சைக்கிள் – வானம் -2022
- தாத்தாவுக்குத் தாத்தா – தமிழ்நாடு பாடநூல் கழகம் -2022
- குறும்புகாரக்குட்டிக்குரங்கு – புக் ஃபார் சில்ட்ரென் -2022
- புழுவின் கர்வம் – புக் ஃபார் சில்ட்ரென் – 2022
- அணிலின் துணிச்சல் – புக் ஃபார் சில்ட்ரென் – 2022
- கூடி வாழவேண்டும் – புக் ஃபார் சில்ட்ரென் – 2022
- ஓணான் கற்ற பாடம் – புக் ஃபார் சில்ட்ரென் – 2022
- தேன் எடுக்கப்போன குட்டித்தேனீ – புக் ஃபார் சில்ட்ரென் -2022
- கசப்பு மரம் இனிப்பு மரம் – புக் ஃபார் சில்ட்ரென் 2022
- ஊஞ்சலில் ஆடிய வண்ணத்துப்பூச்சி – புக் ஃபார் சில்ட்ரென் 2022
- வழி தவறிய வண்ணத்துப்பூச்சி – புக் ஃபார் சில்ட்ரென் 2022
- பச்சைக்கிளிகளின் சண்டை – புக் ஃபார் சில்ட்ரென் 2022
- அம்மா எங்கே? – புக் ஃபார் சில்ட்ரென் 2022
- யாருடைய முட்டை? – புக் ஃபார் சில்ட்ரென் 2022
- மானுடப்பயணம் – தமிழ்நாடு பாடநூல் கழகம் 2022
இளையோர் இலக்கியம்
- குட்டி இளவரசனின் குட்டிப்பூ – வானம் 2021
- பொம்மைகளின் நகரம் – அறிவியல் வெளியீடு 2021
- அலாவுதீனின் சாகசங்கள் – புக் ஃபார் சில்ட்ரென் 2021
- புலிக்குகை மர்மம் – வானம் 2021
- ஆதனின் பொம்மை – வானம் 2021
- சோ சோவின் விசித்திரவாழ்க்கை – ஓங்கில் இணைய வெளியீடு – பாரதி புத்தகாலயம் – 2022
- கட்டைவிரலின் கதை – வானம் 2022
குழந்தை இலக்கியம் மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்பு
- வாயும் மனிதர்களும் – அபிமன்யு- பாரதி புத்தகாலயம்—2002, வானம் 2020
- தயா – எம்.டி.வாசுதேவன் நாயர்- பாரதி புத்தகாலயம்– 2004
புத்தகப்பூங்கொத்து – குழந்தைகளுக்கான படக்கதைகள் – 25- பாரதி புத்தகாலயம்-2009
- சில் சில் சில்
- நீங்கள் என் அம்மாவா?
- நான் குட்டி மூசா
- பூனை கணக்குப் படிக்கிறது
- மேகங்களின் கதை
- யாருடையது இந்தத் தோட்டம்?
- சித்திரம் வரைதல்
- இனி பால் வேண்டாம் அம்மா
- குட்டி குட்டி முயல்
- கிளிக்குஞ்சு
- பாட்டி சொன்ன கதைகள்
- நன்மையே தரும் மரம்
- ஒரு போராட்டம்
- ரயிலும் குதிரையும்
- படர்ந்து படர்ந்து படர்ந்த கதை
- சூரியனைத் தொடவேண்டி
- எறும்பு அரண்மனை
- ஒடியட்டும் பிரம்பு
- ஆகாய யுத்தம்
- ஸ்கூலுக்குப் போகிறாள் சுஸ்கித்
- என் கதை
- என்னுடைய நண்பர்கள்
- மந்தாரக்கிளி
- இலஞ்சிப்பூக்கள்
- வால்களின் கதை
புத்தகப்பரிசுப்பெட்டி – குழந்தைகளுக்கான படக்கதைகள் -15- பாரதிபுத்தகாலயம்-2014
- ஆமையும் குரங்கும் வாழை நட்ட கதை
- யானை வழி
- யானையும் அணிலும்
- யானையும் தையல்காரனும்
- என்னுடைய காக்கா
- கொக்கும் கொசுவும் மரங்கொத்தியும் உப்பு விற்ற கதை
- மாடப்புறாவின் முட்டை தொலைந்து போன கதை
- சின்னத்தேனீ பாடுது
- மல்லனும் மகாதேவனும்
- மண்ணாங்கட்டியும் காய்ந்த இலையும்
- நல்ல நாய்
- கொள்ளு பிறந்த கதை
- ஐந்து பூனைக்குட்டிகளின் கதை
- புலி வருது புலி
- வாலறுந்த குரங்கின் கதை
- லட்சத்தீவின் கிராமியக்கதைகள் – எம்.முல்லக்கோயா- என்.சி.பி.ஹெச். – 2013
- லட்சத்தீவின் இராக்கதைகள் – எம்.முல்லக்கோயா – பாரதி புத்தகாலயம்-2008
- மீன் காய்க்கும் மரம் – வைசாகன்- வானம்-2016
- மரணத்தை வென்ற மல்லன் – உரூபு – வானம்- 2016
- பறந்து பறந்து – சி.ஆர்.தாஸ் – வானம் – 2016
- அய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும் – மாலி- வானம் 2016
- இயற்கையின் அற்புத உலகில் – பேரா.சிவதாஸ் – வானம் 2016
- பாருக்குட்டியும் அவளுடைய நண்பர்களும் – பேரா.சிவதாஸ் – வானம் 2018
- பூதத்தான் மலையில் இருளாண்டி ராட்சசன் – சிப்பி பள்ளிபுரம் – வானம் 2018
- இரண்டு தவளைகள் – அப்துல்லா பேரம்பரா – வானம் 2019
- தாத்தாமரமும் நட்சத்திரப்பூக்களும் – கெ.வி.மோகன்குமார் – வானம் 2020
- கதைகேளு கதைகேளு காக்காவின் கதை கேளு – வானம் 2020
- குட்டிப்பெண்ணும் காளான்களும் – டால்ஸ்டாய் – வானம் 2020
- காலக்கனவுகள் – சி.ஆர்.தாஸ் – புக் ஃபார் சில்ட்ரென் 2021
- கிளிமரம் – கிரேஸி – புக் ஃபார் சில்ட்ரென் 2021
- நடனமாடிய ஆடுகள் – உகாண்டா கதைகள் –சி.ஆர்.தாஸ் –புக் ஃபார் சில்ட்ரென்2022
- ஆலமரமும் சந்திரனும் – சி.ஆர். தாஸ் – புக் ஃபார் சில்ட்ரென் 2022
குழந்தை இலக்கியம் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு
- பயங்களின் திருவிழா – ஸ்வேதாசிவசெல்வி –போதிவனம் 2017
- சிரிக்க வைக்க சில கதைகள் – ரஸ்கின் பாண்ட் – என்.பி.டி. -2020
- வேம்புத்தாத்தா –எஸ்.ஐ. ஃபருக்கி – என்.பி.டி.2020
கட்டுரை நூல்
- குழந்தைகளின் அற்புத உலகில் – நூல்வனம் 2020
நன்றி.
குறிப்பு: உதயசங்கர் அவர்களின் ஓவியத்தை வரைந்த நண்பர் பிரபாகரன் அவர்களுக்கு நன்றி.