“நான் தெரிந்துகொள்ள வேண்டியவை புத்தகங்களில் இருக்கின்றன. நான் படிக்காத நூல் ஒன்றை எனக்குத் தருபவர்களே எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்”
– ஆபிரகாம்லிங்கன்
“என்னோட குழந்தைக்கு புக்கு வாங்கிக் குடுக்கலாம்னு நினைக்கிறேன். ஆனா, என்ன புக்கு வாங்குறதுன்னே தெரில. புக்கு லிஸ்ட் குடுங்களேன்” என்று பல பெற்றோர் அவ்வப்போது கேட்டுக்கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பட்டியலைக் கொடுத்தாலும், அவர்களுடைய குழந்தைகளின் வயதுக்கும், விருப்பத்திற்கும் ஏற்றவாறு இருக்குமா இல்லையா என்கிற ஆய்வையெல்லாம் எந்தவித தனிநபராலும் செய்யமுடியாது, ஏன் அந்த பெற்றோராலும் கூட செய்துவிட முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.
இப்படியொரு சூழலில் தான் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நாகப்பட்டினம் மாவட்டமும், பஞ்சுமிட்டாய் அமைப்பும், கதைக்களம் அமைப்பும், குட்டி ஸ்டோரியும் இணைந்து குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் சிறுவர் நூல்களை அறிமுகப்படுத்தும் ஒரு தொடர் நிகழ்வினை துவங்கினார்கள். நெட்ப்ளிக்சிலோ அமேசான் ப்ரைமிலோ ஒரு வெப்சீரிஸ் வெளிவரப்போகிறதென்றால் இணையமெங்கும் ட்ரெண்டிங்காகவும் வைரலாகவும் பரபரப்பாகவும் பேசப்படுகிற இக்காலகட்டத்தில், குழந்தைகளுக்குத் தேவையான புத்தகங்களை அறிமுகப்படுத்தப் போகிற ஒரு நிகழ்வு துவங்குகிறதென்றால் இணைய உலகமே அதிர்ந்திருக்க வேண்டுமல்லவா. ஆனால் அப்படியான எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல் அமைதியாகத் தான் துவங்கியது “நான் வாசித்த புத்தகம்” என்கிற அத்தொடர் நிகழ்வு.
விளம்பரத்திற்கும் பரபரப்புக்கும் பஞ்சமிருந்தாலும், எந்த நோக்கத்திற்காக அந்த நிகழ்வு துவங்கப்பட்டதோ, அதை மிகச்சரியாக செயல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நிகழ்விலும் மூன்று அல்லது நான்கு குழந்தைகள் கலந்துகொண்டு, அவர்கள் படித்த ஒரு நூலைக் குறித்தும், அதனால் தங்களுக்குக் கிடைத்த அனுபவம் குறித்தும் அழகாகப் பேசத்துவங்கினார்கள். அதனைத் தொடர்ந்து நிகழ்வின் இறுதியில் ஒரு சிறப்பு விருந்தினர் கலந்துகொண்டு, அவர்கள் வாசித்த சிறார் நூலொன்றை அறிமுகப்படுத்திப் பேசுகிறார்கள். ஆக, ஒவ்வொரு நிகழ்வின் முடிவிலும், நான்கு அல்லது ஐந்து புதிய நூல்களின் பெயர்கள் மட்டுமல்லாமல், அந்நூல்கள் குறித்து ஒரு விரிவான பார்வையை பார்வையாளர்களுக்கு அந்நிகழ்வு கடத்திவிடுகிறது. அதில் அறிமுகப்படுத்தப்பட்ட நூல்களை நாம் வாங்கலாமா, வேண்டாமா, அவை நம் குழந்தையின் வயதுக்கும் விருப்பத்திற்கும் சரியாக வருமா, வராதா என்கிற முடிவினை பார்வையாளராக பங்கெடுக்கும் பெற்றோராலும், குழந்தைகளாலும் எளிதாக எடுக்கமுடிகிறது.
இப்படியாக ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5.20க்கு துவங்கி ஏறத்தாழ ஒரு மணி நேரம் நடந்துவருகிற இந்நிகழ்வில் 50க்கும் மேலான சிறுவர்கள் பேசியிருக்கிறார்கள், 90க்கும் மேற்பட்ட சிறுவர் நூல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். சத்தமில்லாமல் சாதனை செய்வதன் ஒரு உதாரணமாகத் தான் இதையும் பார்க்கிறேன். 100 சிறுவர் நூல்களின் அறிமுகம் என்ற முதல்கட்ட இலக்கை நோக்கிய இந்தப் பயணம் வெற்றியடைய வாழ்த்துகள்.
மணதுணைநாதன், பஞ்சு மிட்டாய் பிரபு & வனிதா மணி உள்ளிட்ட சிலரின் பல மணிநேர உழைப்பினால் தான், இத்தகைய தொடர் நிகழ்வே சாத்தியமாகிறது. அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி.
எல்லோரது பார்வைக்காக அந்தப் பட்டியலை இங்கு பகிர்கிறேன்.
குறிப்பு: இனிவரும் வாரங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் உங்கள் வீட்டில் இருக்கிற குழந்தைகளை கலந்துகொள்ளச் செய்து, நீங்களும் கலந்துகொள்ளுங்கள். இந்தப் பட்டியலில் இல்லாத ஒரு நூலினை உங்கள் குழந்தைகள் வாசித்திருந்தால், அந்நூலை வாசித்த அனுபவத்தைப் பகிர விரும்பினால், உங்கள் குழந்தைகளும் அந்நிகழ்வில் பங்கேற்கலாம். ஒவ்வொரு வாரமும் கீழேயுள்ள பட்டியலில் புத்தகங்கள் சேர்க்கப்படும்.
நன்றி,
சிந்தன்
எண் | புத்தக விவரம் | பேசியவர் |
1 | இரவு பகலான கதை | ஆசிரியர்: இம்.எலின் , தமிழில்: ஆயிஷா நடராசன் | பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் | ஜெய் ஸ்ரீராம் |
2 | தபால் தலை மர்மம் | லயன் முத்து காமிக்ஸ் | ஆயிஷா அஸ்ஃபியா |
3 | சிம்பாவின் சுற்றுலா | ஆசிரியர்: சுட்டி ரமணா | பதிப்பகம் : வானம் | நேத்ரஸ்ரீ |
4 | மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி | ஆசிரியர் : உதயசங்கர் | பதிப்பகம் : வானம் | நேத்ரஸ்ரீ |
5 | கி.ரா தாத்தா சொல்லும் கிராமியக் கதைகள் | தொகுப்பு : கழனியூரன் | பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் | கதைசொல்லி சி.வனிதாமணிஅருள்வேல் |
6 | பீம்ராவ் அம்பேத்கர்: ஏன் என்று கேட்ட சிறுவன் – சௌம்யா ராஜேந்திரன் , தமிழில் : சிந்து | தூலிகா | தன்யஶ்ரீ |
7 | ஒற்றைச் சிறகு ஓவியா – விஷ்ணுபுரம் சரவணன் – பாரதி புத்தகாலயம் | தன்யஶ்ரீ |
8 | யானை- அலெக்சாண்டர் குப்ரின், தமிழில்: சாலை செல்வம் | குட்டி ஆகாயம் | ரமணி |
9 | குருவி நடக்குமா- ரேவதி | பழனியப்பா பிரதர்ஸ் | ரமணி |
10 | பஞ்சு மிட்டாய் சிறுவர் இதழ் | திரவியம் |
11 | அந்தியில் மலர்ந்த மொட்டுக்கள்(சிறுவர் எழுதிய கதைகள்) தொகுப்பாசிரியர்: உமையவன் | நிவேதிதா பதிப்பகம் | திரவியம் |
12 | பூச்சிகளின் தேசம் – கோவை.சதாசிவம் | குறிஞ்சி பதிப்பகம் | ஆசிரியர் மணிமாறன் |
13 | காக்கரை நாட்டு எறும்புகள் – இ.சந்தோஷ் குமார் , தமிழில் : எல்.பி. சாமி | பாரதி புத்தகாலயம் | சூடாமணி |
14 | மரணத்தை வென்ற மல்லன் – உரூபு, தமிழில்: உதயசங்கர் | வானம் பதிப்பகம் | சூடாமணி |
15 | வானவில் (சிறார் பாடல்கள்) – ந.க. தீப்ஷிகா | சாரல் வெளியீடு, | தோ.ம.மோனிகா |
16 | கெட்டிக்காரக் குட்டித் தவளை- துரை ஆனந்த்குமார்| சாரல் வெளியீடு, | தோ.ம.மோனிகா |
17 | யாருக்கு தைக்கத் தெரியும் – சுட்டி ரமணி | வானம் பதிப்பகம் | தோ.ம.மோனிகா |
18 | கால் முளைத்த கதைகள் – எஸ். ராமகிருஷ்ணன் | தேசாந்திரிபதிப்பகம் | சித்தார்த் |
19 | முட்டாளின் மூன்று தலைகள் – எஸ். ராமகிருஷ்ணன் | தேசாந்திரிபதிப்பகம் | சித்தார்த் |
20 | கடலும் கிழவனும், அம்மாவுக்கு கடிதம் – ஹெமிங்வே, ஏர்னஸ்ட் தமிழில்: ச.மாடசாமி | பாரதி புத்தகாலயம் | ஆசிரியர் உதயலட்சுமி |
21 | ஜன்னலில் ஒரு சிறுமி – டெட்சுகோ குரோயாநாகி, தமிழில்: சொ. பிரபாகரன், க. வள்ளிநாயகம், வெளியீடு – நேஷனல் புக் டிரஸ்ட் | மீனா |
22 | குட்டி இளவரசி – ஃப்ரான்சிஸ் ஹட்சன் பர்னட், தமிழில்: சுகுமாரன், வெளியீடு: வானம் பதிப்பகம் | மீனா |
23 | பறக்கும் இளவரசன் – தொகுப்பு: சுகுமாரன் | வெளியீடு:நெஸ்ட்லிங், | யாழினி |
24 | மந்திர மரமும் மாய உலகங்களும்- இரா. கற்பகம் | வெளியீடு:நெஸ்ட்லிங், | யாழினி |
25 | காக்கை சிறுவன், டரோ யஷிமோ, தமிழில் கோ மா கோ இளங்கோ | வெளியீடு: பாரதி புத்தகாலயம் | அ.தமிழ்இனியன் |
26 | சாவித்திரிபாய் பூலே – பேரா.சோ.மோகனா | அ.தமிழ்இனியன் |
27 | குட்டி இளவரசன் – அந்த்வான் து செந்த்-எக்சுபெரி, தமிழில்: வெ. ஸ்ரீராம், ச. மதனகல்யாணி | வெளியீடு: க்ரியா | எழுத்தாளர் உதயசங்கர் |
28 | மீன்காய்க்கும் மரம் – வைசாகன் | தமிழில் உதயசங்கர் | வானம் பதிப்பகம் | சஞ்சனா |
29 | கரடியின் கையில் ஒரு கதை இருக்கிறது – சுகுமாரன் | சஞ்சனா |
30 | லாலி பாலே – ஆர்.ஆகாஷ், எஸ்.ராமகிருஷ்ணன் | பாரதி புத்தகாலயம் | ஶ்ரீலஷ்மன் |
31 | தானேகாவும் தங்க மலையும் – முத்து | வானம் பதிப்பகம் | ஶ்ரீலஷ்மன் |
32 | சுக்கா புக்கா முக்கா | பதிப்பகம்:பாரதி புத்தகாலயம் | சரவண பாண்டியன் |
33 | 8 மாம்பழங்கள் (பாடல் புத்தகம்) பாவண்ணன் – பதிப்பகம்:பாரதி புத்தகாலயம் | சரவண பாண்டியன் |
34 | எறும்புகள் – நக்கீரன் | தடாகம் வெளியீடு | ஆசிரியர் சாந்த ஷீலா |
35 | நரியின் கண்ணாடி | எழுதியவர் : அமன் | வெளியீடு: வானம் | பக்கங்கள் : 56 | புனிதம் |
36 | உயிர் தரும் மரம் | எழுதியவர்: ஷெல் சில்வர்ஸ்டீன் | தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ | வெளியீடு : பாரதி புத்தகாலயம் | பக்கங்கள் : 29 | அபிமன் |
37 | குட்டி யானை வீட்டுக்கு போகுது | எழுதியவர்: லீ குய்மெய் தமிழில் : சாலை செல்வம் | வெளியீடு : குட்டி ஆகாயம் | கவிநயா |
38 | ஒடியட்டும் பிரம்பு | கதை: உன்னிக்கிருஷ்ணன் பய்யாவூர் | தமிழில் : உதயசங்கர் | வெளியீடு: பாரதி புத்தகாலயம் | பக்கங்கள் :12 | சஞ்சய் குமரன் |
39 | அம்மாவின் பிறந்தநாள் | எழுதியவர்: ஜானகி சூரியரச்சி | தமிழில் : கொ.மா.இளங்கோ | எழுத்தாளர் கொ.மா.கோ இளங்கோ |
40 | மகிழ்ச்சி | எழுதியவர்: பேரா.எ.சோதி | அறிவி பதிப்பகம் | மிஷாந்த் |
41 | சிறுவர் சிறுமியர் அறிவியல் சிறுகதைகள் | எழுதியவர்: லூர்து எஸ்.ராஜ் | அறிவு பதிப்பகம் | குறளினி |
42 | மந்திர விதைகள் | எழுதியவர்: மித்சுமாசா அனோ | தமிழில்: கொ.மா.கோ இளங்கோ | பாரதி புத்தகாலயம் | செம்மொழி |
43 | இரு சகோதரர்கள் | எழுத்தாளர்: டி.பி.சென்குப்தா | தமிழில் :சு.கி.ஜெயகரன் | பாத்திமா பதிப்பகம் | குழலி |
44 | காடனும் வேடனும் | எழுதியவர்: பூவிதழ் உமேஷ் | வாசகசாலை பதிப்பகம் | எழுத்தாளர் & கதைசொல்லி நீதிமணி |
45 | காட்டுக்குள்ளே திருவிழா | எழுதியவர் : கொ.மா.கோதண்டம் | வெளியீடு: விஜயம் | பக்கங்கள் : 128 | தேஜஸ்ரீ |
46 | நீங்க என்னோட அம்மாவா? | எழுதியவர்: பி.டி.ஈஸ்ட்மேன் | தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ | வெளியீடு : பாரதி புத்தகாலயம் | பக்கங்கள் : 29 | நிகிலன் |
47 | யாருக்குத் தைக்கத் தெரியும்? | எழுதியவர்: ரமணி | வெளியீடு : வனாம் பதிப்பகம் | பக்கங்கள் : 30 | தக்ஷெய் |
48 | மின்மினிக்காடு | எழுதியவர்: கே.கிருஷ்ணகுமார் | தமிழில் : யூமா வாசுகி | வெளியீடு: பாரதி புத்தகாலயம் | பக்கங்கள் : 48 | சுபவர்ஷினி |
49 | குருவிக் குஞ்சு | எழுதியவர்: ம.கோர்க்கி | வெளியீடு: குட்டி ஆகாயம் | எழுத்தாளர் சாலை செல்வம் |
50 | சிறுவனும் நாதஸ்வரமும் | தொகுப்பு: வே.சுடரொளி, ஈஸ்வர சந்தனமூர்த்தி | வெளியீடு: பாரதி புத்தகாலயம் | பக்கங்கள்: 32 | காவிய ராகவன் |
51 | 5 சீன சகோதரர்கள் | தொகுப்பு: கூத்தலிங்கம் | வெளியீடு : பாரதி புத்தகாலயம் | பக்கங்கள் : 32 | சாதனா |
52 | வாடகைக்கு ஒரு வீடு | எழுதியவர்: லீஹ் கோல்ட்பெர்க் | தமிழாக்கம்: மதன் ராஜ் | பதிப்பகம்: நேஷனல் புக் ட்ரஸ்ட் | பக்கங்கள்: 24 | ஜெய் ஆதித்யா |
53 | மந்திரக் கிலுகிலுப்பை | எழுதியவர்: சரிதாஜோ | வெளியீடு: சுவடு | பக்கங்கள் : 120 | சாய் ஹரிணி |
54 | மலைப் பூ | எழுதியவர்: விழியன் | வெளியீடு: பாரதி புத்தாலயம் | குட்டி ஸ்டோரி சிந்தன் |
55 | சிறுவனும் நாதஸ்வரமும் | தொகுப்பு: வே.சுடரொளி, ஈஸ்வர சந்தனமூர்த்தி | வெளியீடு: பாரதி புத்தகாலயம் | பக்கங்கள்: 32 | காவிய ராகவன் |
56 | நன்மையே தரும் மரம் | எழுதியவர்: ஷெல் சில்வர்ஸ்டைன் | தமிழில்: கே.கே.கிருஷ்ணகுமார் | வெளியீடு : பாரதி புத்தகாலயம் | பக்கங்கள் : 20 | காவ்யா |
57 | எனை வளர்த்த தமிழ் | தொகுத்தவர்: சு.த.தமிழினி | தமிழினி |
58 | என்ன செய்யலாம் – நந்தினி நாயர் | தமிழில் : ஜீவா ரகுநாத் | வெளியீடு: தூளிகா | மகிழ் |
59 | நீலா மாலா | எழுதியவர்: அழ.வள்ளியப்பா | வெளியீடு: குழந்தை புத்தக நிலையம் | பக்கங்கள்: 194 | சிறார் எழுத்தாளர் விழியன் |
60 | புலி வருது புலி | கதை: சுஜா சூசன் ஜார்ஜ் | தமிழில் : உதயசங்கர் | வெளியீடு: பாரதி புத்தகாலயம் | பக்கங்கள்: 24 | சித்ரநிலா |
61 | ஆறடி நிலம் | தொகுப்பு: ச.தமிழ்ச்செல்வன் | வெளியீடு : பாரதி புத்தகாலயம் | பக்கங்கள் : 48 | அனன்யா |
62 | கொள்ளு பிறந்த கதை | கதை: கெ.பி .ஜனார்தனன் | தமிழில்: உதயசங்கர் | பக்கங்கள்: 24 | வெளியீடு: பாரதி புத்தகாலயம் | ஈசான் கிருஷ்ணா |
63 | சிவப்புக் கிளி | எழுதியவர்: வசுதேந்திரா | தமிழில் : யூமா வாசுகி | வெளியீடு: விகடன் | தீபக் |
64 | உலகம் குழந்தையாக இருந்தபோது | எழுதியவர்: வெரியர் எல்வின் | வெளியீடு: நேஷ்னல் புக் டிரஸ்ட் | பக்கங்கள்: 90 | உதிரி நாடக நிலம் விஜயகுமார் |
65 | அப்பாவின் கணக்கு டீச்சர் எழுதியவர்: அம்ருதாஷ் மிஸ்ரா | தமிழில் : அனிதா ராம்குமார் | வெளியீடு: ப்ரதம் புக்ஸ் | சு.வா.அத்வைதா |
66 | யாருக்குத் தைக்கத் தெரியும்? | எழுதியவர்: ரமணி | வெளியீடு : வானம் | அபர்ணா |
67 | எலும்புப் புதிர் | எழுதியவர்: லவினா மஹ்புபனி | தமிழில்: அனிதா ராம்குமார் | வெளியீடு: ப்ரதம் புக்ஸ் | தர்ஷிதா |
68 | பறந்து பறந்து | எழுதியவர்: சி.ஆர்.தாஸ் | தமிழில் : உதயசங்கர் | வெளியீடு: வானம் | கதைசொல்லி சதீஷ்குமார் |
69 | மந்திர விதைகள் | எழுதியவர்: மித்சுமாசா அனோ | தமிழில் : கொ.மா.கோ. இளங்கோ | வெளியீடு: பாரதி புத்தாகலயம் | சுஜெய் |
70 | கொக்கும் ஓநாயும் | யோகதேவி பரமசிவம் |
71 | சிவப்புக் கொண்டைச் சேவல் | எழுதியவர்: வீக்தர் வழ்தாயெவ் | வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம் | சாதனா |
72 | யானை வழி | கதை: டி.வினயசந்திரன் | தமிழில்: உதயசங்கர் | வெளியீடு: பாரதி புத்தாகலயம் | ரமணா |
73 | கடற்கன்னி கயல் | எழுதியவர்: சுகுமாரன் | வெளியீடு: பாத்திமா புக்ஸ் | கல்வியாளர் வெற்றிச்செழியன் |
74 | யானையும் நாயும் | எழுதியவர்: பத்ரி நாராயண் | தமிழில் : கே.ஜே.விஜயன் | வெளியீடு: நேஷ்னல் புக் டிரஸ்ட் | சிவன்யா |
75 | மாயக்கண்ணாடி | எழுதியவர்: உதயசங்கர் | வெளியீடு: வானம் பதிப்பகம் | இளநிலா |
76 | கழுதைப் புலி ஒரு கானகத் தோட்டி | எழுதியவர்: கோவை சதாசிவம் | வெளியீடு : குறிஞ்சி பதிப்பகம் | நிரஞ்சனா |
77 | வங்காரியின் பசுமைத் தூதுவர்கள் | எழுதியவர் : ஜேனெட் வின்ட்டர் | தமிழில்: ஆதி வள்ளியப்பன் | வெளியீடு: பாரதி புத்தாகலயம் | தன்யஸ்ரீ |
78 | கொக்குகளுக்காகவே வானம் | எழுதியவர்: தியாக சேகர் | வெளியீடு: தன்னறம் நூல்வெளி | காகித மடிப்புக் கலை கலைஞர் தியாகசேகர் |
79 | குட்டித்தாத்தா | எழுதியவர்: நாடலே நோர்டன் | தமிழில் : கொ.மா.கோ.இளங்கோ | வெளியீடு: பாரதி புத்தகாலயம் | அஸ்லாம் கவின் |
80 | கரடியும் இரண்டு வழிப்போக்கர்களும் ஈசாப் கதைகள் | அப்ஷான் கவின் |
81 | பூமிக்கு அடியில் ஒரு மர்மம் | எழுதியவர்: யெஸ்.பாலபாரதி | வெளியீடு : வானம் பதிப்பகம் | ரமணி |
82 | சாலுவின் ப்ளூபெர்ரி | எழுதியவர் :ராபர்ட் மெக்லோஸ்கே | தமிழில்: கொ.மா.கோ இளங்கோ | வெளியீடு: பாரதி புத்தாகலயம் | அ.தமிழ்இனியன் |
83 | பெரியார் பிஞ்சு இதழ் | செ.கு.ரா- நாளை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் |
84 | விலங்குக் கதைகள் | எழுதியவர்: தா.கோவேந்தன் | வெளியீடு: சித்ராலயா பதிப்பகம் | தன்ஷிகா |
85 | சுட்டி யானை இதழ் | வெளியீடு: இயல் வாகை பதிப்பகம் | மகிழ் |
86 | கால் முளைத்த கதைகள் | எழுதியவர்: எஸ்.ராமகிருஷ்ணன் | வெளியீடு : தேஷாந்திரி பதிப்பகம் | ஸ்ரீநிதி |
87 | எறும்புகள் ஈக்கள் சிற்றுயிர்கள் ஓர் அறிமுகம் | எழுதியவர் : ஆதி வள்ளியப்பன்| வெளியீடு: காக்கைக்கூடு பதிப்பகம் | சரவணபாண்டியன் |
88 | துளிர் சிறுவர் இதழ் | தேமொழிச்செல்வி – அறிவியல் செயல்பாட்டாளர் & எழுத்தாளர் |
89 | எலி வீடு | எழுதியவர்: சரவணன் பார்த்த சாரதி | வெளியீடு: பாரதி புத்தகாலயம் | தன்ஸ்ரீ |
90 | சைபார்க் தாத்தா | எழுதியவர்: லாவண்யா கார்த்திக், மொழிப்பெயர்ப்பு: காயத்ரி சிவக்குமார் | வெளியீடு: ப்ரதம் புக்ஸ் | ஸ்ரீஹர்சன் |
91 | தந்திரம் பலிக்குமா? | யோகதேவி |
92 | இரகசியத் தோட்டம் | எழுதியவர் : ப்ரான்சிஸ் ஹர்சன் பர்னட், தமிழில்: சுகுமாரன் | வெளியீடு: வானம் பதிப்பகம் | தனிஷ்கா |
93 | வானவில் பறவையின் கதை , உலக நாடோடிக் கதைகள். | தமிழில் : யூமா வாசுகி | வெளியீடு: பாரதி புத்தகாலயம் | நா.வருணனி – அறிவியல் இயக்க செயல்பாட்டாளர் மற்றும் ஆசிரியர் |
94 | சிங்கத்தின் குகையில் சின்ன குருவி | எழுதியவர்: எலிசா க்லேவேன் , மொழிபெயர்ப்பாளர்: கொ.மா.கோ இளங்கோ | வெளியீடு: பாரதி புத்தகாலயம் | சுபஸ்ரீ |
95 | பெர்டினன் கன்றுக்குட்டியின் கதை | எழுதியவர்: மன்ரோ லீப் மொழிப்பெயர்ப்பு: கொமா.கோ.இளங்கோ | வெளியீடு: பாரதி புத்தகாலயம் |
எழில் தீபிகன் |
96 | புத்தகம்: அன்பின் வெற்றி | தொகுப்பும்,மொழிபெயர்ப்பும்: யூமா வாசுகி | வெளியீடு: பாரதி புத்தகாலயம் | அனிஷ்குமார் |
97 | கடைசிப் பூ | எழுதியவர் : ஜேம்ஸ் தர்பெர் , மொழிபெயர்ப்பு : கொ.மா.கோ.இளங்கோ | வெளியீடு: பாரதி புத்தகாலயம் | பிரணவநாதன் |
98 | பென்சில்களின் அட்டகாசம் | எழுத்தாளர்: விழியன் | வெளியீடு: பாரதி புத்தகாலயம் | ஆசிரியர் கமலவல்லி |
99 | உன்னியின் விருப்பம் | Meryl Garcia , தமிழில் : Sheba Ravindran | Pratham Books | |
100 | ஏழும் ஏழும் பதினாலாம் – அழ.வள்ளியப்பா | பஞ்சு மிட்டாய் | |
101 | கொக்கும், கொசுவும், மரங்கொத்தியும் உப்பு விற்ற கதை | டி. ஆர். ராஜேஷ் , தமிழில் : உதயசங்கர் | வெளியீடு: பாரதி புத்தகாலயம் | |
102 | அழகிய பூனை | வண்ட கக் தமிழில்: கொ. மா. கோ. இளங்கோ | வெளியீடு: பாரதி புத்தகாலயம் |