பஞ்சு மிட்டாய் இணைய நிகழ்வுகள் 2020

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கொரோனா பேரிடர் நமது சூழலை பெரிதும் மாற்றியமைத்தது என்பது அனைவரும் அறிந்ததே. முழு நேரம் வீட்டினுள்ளே உறவுகளுடன் இருப்பது என்பது மகிழ்வானதாக இருந்த போதும் அது சவாலானதாகவும் இருந்தது / இருக்கிறது. சூழலுக்கேற்ப தங்களை உருமாற்றிக் கொள்வதில் சிறுவர்கள் பெரியவர்களை விட சிறந்தவர்களாகவே இருக்கின்றனர் என்றே தோன்றுகிறது.

இணைய வழியே கல்வி என்ற நிலை போன்று இணைய வழியே கலை-இலக்கிய நிகழ்வுகளும் சந்திப்புகளும் பெரிதும் நடந்துள்ளது. குழந்தைகளுக்காக பலரும் நிறைய முயற்சிகளை கடந்த ஒரு வருட காலத்தில் நிறைய எடுத்துள்ளதை கவனிக்க முடிகிறது. பஞ்சு மிட்டாய் சிறார் குழுவும் குழந்தைகளுக்கான நிகழ்வுகளை கடந்த வருடத்தில் இணைய வழியே ஒருங்கிணைத்தும், நண்பர்களின் நிகழ்வில் பங்கெடுத்தும் வந்துள்ளது. அதன் வழியே பல நூறு குழந்தைகளை சந்தித்து உரையாடவும் செய்தது.

2020-ல் பஞ்சு மிட்டாய் சிறார் குழு இணைய வழியே 25 நிகழ்வுகளை ஒருங்கிணைத்துள்ளது. இந்நிகழ்வுகள் வழியே குழந்தைகள் சார்ந்து இயங்கும் பலரை இணைக்கும் வாய்ப்பும் அமைந்தது. எழுத்தாளர்கள், இசை, நாடகம், அறிவியல் செயற்பாட்டாளர்கள், ஓரிகாமி, ஓலை பொம்மை, ஓவியம், பொம்மலாட்ட கலைஞர்கள், சூழலியலாளர்கள், கதை சொல்லிகள், ஆசிரியர்கள் & செயற்பாட்டாளர்கள் என பலரை சந்தித்ததில் பெரிதும் மகிழ்கிறோம்.  சிறப்பு விருந்தினராக வந்து சிறப்பித்த நண்பர்கள் அனைவருக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், குழந்தைகளுக்கும், சூம் செயலிக்கான செலவுகளை பகிர்ந்த நண்பர்களுக்கும்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இன்னும் பலரை சிறப்பு விருந்தினராக அடுத்தடுத்த முயற்சியில் இணைக்க காத்திருக்கிறோம்.

பஞ்சு மிட்டாய் ஒருங்கிணைத்த நிகழ்வுகள்: (வீடியோ பதிவுகள்)

  1. பேய் இருக்கா? – எழுத்தாளர் உதயசங்கர் (ஏப்ரில் 19 2020) – பேய் பிசாசு பற்றிய கேள்வி பதில் நிகழ்வு
  2. ஒரு ஊர்ல – கதை சொல்லி வனிதாமணி அருள்வேல்(26 ஏப்ரில் 20220) – கதை சொல்லல் நிகழ்வு
  3.  சகியும் சகாவும் – மாயக்குரல் கலைஞர் ப்ரியசகி (03 மே 2020)
  4.  ஆடலாம் பாடலாம் – சிறார் நாடகம் – உதிரி நாடக நிலம் விஜயகுமார் (10 மே 2020) – சிறார் நாடகப் பயிற்சி
  5.  சிறார்களுக்கான சூழலியல் கதைகள் – எழுத்தாளர் கோவை சதாசிவம் (17 மே 2020) – சூழலியல் கதைகள்
  6. சுட்டிகளுக்கு குட்டி குட்டி அறிவியல் விளையாட்டுகள் – அறிவரசன் (23 மே 2020) – அறிவியல் சோதனை நிகழ்வு
  7. Socket Puppet – தாமஸ் (31 மே 2020) – செய்முறை நிகழ்வு
  8. இசையுடன் கதை பாடல் ஆடல் விளையாட்டு (பறை இசை) – நரேஷ் (07 ஜூன் 2020) – கதை சொல்லல் நிகழ்வு
  9. ஓரிகாமி – தியாக சேகர் (14 ஜூன் 2020)
  10.  புலி என் friend – விஷ்ணுபுரம் சரவணன் (21 ஜூன் 2020) – கதை சொல்லல் நிகழ்வு
  11. தென்னங்கீற்று பொம்மைகள் – திலகராஜன்(28 ஜூன் 2020)
  12. கடல் ஆமையும் கதை மூட்டையும் – கொ.மா.கோ.இளங்கோ(5 ஜுலை 2020) – கதை சொல்லல் நிகழ்வு
  13. நிறங்களின் ரகசியம்(ஓவியம்) -ஓவியர் கார்த்திகா(12 ஜூலை 2020) – நிறங்களின் சேர்க்கை குறித்த நிகழ்வு
  14. ஏன் எதற்கு எப்படி?(விஞ்ஞானியுடன் உரையாடல்) – விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் (19 ஜூலை 2020) – அறிவியல் கேள்வி பதில் நிகழ்வு
  15. கலை சொல்லும் கதைகள் (பொம்மலாட்டம்) – கலை அறப் பேரவை மு.கலைவாணன்(26 ஜூலை 2020) – கதை சொல்லல் நிகழ்வு
  16. தாத்தாவின் பூந்தோட்டம் (நிழல் பாவை ) – அபிநிஷா (2 ஆகஸ்ட் 2020) – நிழல் பாவை வழி கதை சொல்லல்
  17.  கோமாளிக் கொண்டாட்டம் – பொம்மலாட்ட கலைஞர் மதியழகன் (9 ஆகஸ்ட் 2020) – கோமாளியின் கதை சொல்லல் நிகழ்வு
  18. கை விரல்களில் பட்டாம்பூச்சு – TNSF எஸ்.சுப்பிரமணி(16 ஆகஸ்ட் 2020) – கை விரல் வித்தை நிகழ்வு
  19. சோதிப்போம் சாதிப்போம்(அறிவியல்) – சத்யமாணிக்கம்(23 ஆகஸ்ட் 2020) – அறிவியல் சோதனை நிகழ்வு
  20. ரயில் வண்டி கதைகள் – அனிதா(30 ஆகஸ்ட் 2020) – கதை சொல்லல் நிகழ்வு
  21. எறிபிடிவித்தை – Juggling  கலைஞர் ராஜராஜன்(6 செப். 2020) – கோமாளியின் Juggling நிகழ்வு
  22. கதையோடு விளையாடு – சரிதா ஜோ(13 செப். 2020) – கதை சொல்லல் நிகழ்வு
  23. கொஞ்சம் பூகோளம் கொஞ்சம் உரையாடல் – ஆசிரியர் சாந்த சீலா (20 செப். 2020)  – பூகோளம் பற்றிய கேள்வி பதில் நிகழ்வு
  24. எண்களின் வரலாறு – ஹேமபிரபா(27 செப். 2020) – எண்கள் பற்றிய உரையாடல்
  25. பஞ்சு மிட்டாய் 10 , 11 இதழ்கள் வெளியீடு(8 நவ. 2020)

பஞ்சு மிட்டாய் ஒருங்கிணைத்த நிகழ்வுகளோடு நண்பர்கள் ஒருங்கிணைத்த நிகழ்வுகளிலும் பங்கெடுத்துள்ளோம். அவற்றில் சில,

  1. அமெரிக்கா & லண்டன் நண்பர்கள் வழியே சில நிகழ்வுகளை நடத்தினோம்
  2. அருகாமை ஆளுமை – ஒருங்கிணைப்பு :கிருத்திகா தரன்
  3. பஞ்சுமிட்டாயுடன் உரையாடலாம் – Nikhil Foundation
  4. சிறார்களின் படைப்புலகம் குறித்து ஓர் உரையாடல் – குழந்தைநேயப் பள்ளிகள் அமைப்பு.
  5. Kids Tamil Stories – UAE
  6. ஒரு கதை சொல்லட்டா – ஒருங்கிணைப்பு : கல்வி 40 
  7. சஞ்சீவி மாமா | புத்தகம் குறித்து கலந்துரையாடல்
  8. இலக்கிய தேன் சாரல் – பெங்களூர் (சிறுவர் நிகழ்வு)
  9. குழந்தைகளின் படைப்புலகம் – ஒருங்கிணைப்பு:  சிறார் கலை இலக்கியச் சந்திப்பு
  10. புத்தக நண்பன் நிகழ்வு

இவற்றோடு அக். 2020 மாதம் முழுதும் சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் சார்பாக சிறார் கலை இலக்கியச் சந்திப்பு தொடர் கருத்தரங்கை நண்பர்களுடன் சேர்ந்து ஒருங்கிணைக்க வாய்ப்பும் கிடைத்தது. அதன் பதிவுகளை இந்த இணைப்பில் காணலாம்.

நன்றி,

பஞ்சு மிட்டாய் பிரபு

Leave a comment