“பஞ்சு மிட்டாய் சிறுவர் இதழ்” – அயல்நாட்டு தமிழர்களுக்கு ஓர் அறிவிப்பு.

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
இந்தியாவுக்கு வெளியே வாழும் தமிழர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு! ஆங்கிலத்தில் இருப்பது போன்று தமிழில் சிறுவர்களுக்கான இதழ்கள் இல்லை என்று பலரும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், கடுமையான நெருக்கடிக்கு மத்தியிலும் தொடர்ச்சியாகவும் மிகத்தரமாகவும் தயாரிக்கப்பட்டு வெளியாகிற பஞ்சுமிட்டாய் போன்ற தமிழ் சிறுவர் இதழ்களை வாங்கவேண்டியது நம்முடைய கடமை என்றே கருதுகிறேன்.

தொடர்ந்து 5 ஆண்டுகளாக தமிழ் சிறுவர் உலகில் இயங்கி வரும் பஞ்சு மிட்டாய் சிறார் குழுவின் பஞ்சு மிட்டாய் சிறுவர் இதழ் தற்பொழுது வெளிநாட்டிற்கும் செல்ல தயாராக இருக்கிறது. பல்வேறு சிறுவர் இதழ்கள் நின்று போனசூழலில் பஞ்சு மிட்டாய் சிறுவர் இதழ் குழந்தைகளின் படைப்புகளை முன்னிறுத்தி தொடர்ந்து காலாண்டு இதழாக இயங்கி வருகிறது. சிறுவர்களுக்கான கதை, பாடல், பாரம்பரிய விளையாட்டு, அறிவியல், புதிர், காமிக்ஸ், கேள்வி-பதில், நேர்த்தியான வடிவமைப்பு, வண்ணமையமான ஓவியங்கள் என சிறுவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
தபால் வழியே பயணித்து பல்வேறு மாநிலங்களில் வாழும் தமிழ் சிறுவர்களை சந்தித்த பஞ்சு மிட்டாய் சிறுவர் இதழ் தற்பொழுது வெளிநாட்டில் வாழும் தமிழ் சிறுவர்களை சந்திக்க தயாராக உள்ளது. ஏற்கனவே தபால் வழியே அமேரிக்கா, பெல்ஜியம், லண்டன், நெதர்லாந்து, சிங்கப்பூர் என பயணித்தும் உள்ளது. வெளிநாட்டில் உள்ள நண்பர்களுக்கு தபால் செலவை கருத்தில் கொண்டு 10 இதழ் சந்தாவாக 55$ முடிவு செய்திருக்கிறார்கள்.
சந்தா விவரம் :
10 இதழ் சந்தா (2.5 வருடம்) : 55$
[3 மாதத்திற்கு ஒரு முறை இதழ் வெளிவரும் – தனித்தனியாக 10 இதழ்கள் அனுப்பி வைக்கப்படும்]
விருப்பமுள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்.
பிரபு +91-9731736363 (பஞ்சு மிட்டாய் சிறார் குழு)
[சிந்தன் அவர்களின் முகநூல் பதிவு]

Leave a comment