அறிவிப்பு! குழந்தை இலக்கியப் படைப்புகள் 2020 – தகவல் திரட்டும் முயற்சி

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்

“குழந்தைகளுக்காக இந்த வருடம் எத்தனை புத்தகம் வெளியாகி இருக்கிறது?” குழந்தைகள் சார்ந்து இயங்கும் நண்பர்கள் ஒவ்வொரு வருடமும் இந்தக் கேள்வியை கேட்பது உண்டு. பின்பு அவர்களே தேடி ஒரு பட்டியலை உருவாக்கி அதனை குழந்தைகளுக்கு கொண்டு சேர்ப்பார்கள். இதுப் போன்ற ஒரு பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு எளிதாக கிடைப்பது மிகவும் அவசியம்.

2020ஆம் ஆண்டு வெளியான குழந்தை இலக்கியப் படைப்புகளின் பட்டியலை தயாரிக்கும் முயற்சியில் பஞ்சு மிட்டாய் இணையதளம் முன்னெடுக்கிறது. நண்பர்கள் அனைவரும் 2020ஆம் ஆண்டு வெளியான புத்தகங்களை பதிவு செய்ய உதவுங்கள். பதிப்பகங்கள் தங்களது பட்டியலை மொத்தமாக அனுப்ப விரும்புவோர் எங்களது மின்னஞ்சல் (editor.panchumittai@gmail.com) முகவரிக்கு விபரங்களை அனுப்பவும்.

பட்டியல் தயார் ஆனதும் https://www.panchumittai.com/ இணையத்தில் (சனவரி-2021 மாத இறுதியில்) வெளியிடப்படும்.

அவசியம் தேவையான தகவல்கள்:

  1. புத்தகம் / இதழ் / மின்புத்தகம் / மின்னிதழ் / இணையதளம்
  2. ஆசிரியர் / மொழிப்பெயர்ப்பாளர் / தொகுப்பாசிரியர்
  3. பதிப்பகம்

கூடுதல் தகவல்களை விருப்பம் இருந்தால் பதிவு செய்யலாம்:

  1. வயதுவாரியான பிரிவு
  2. குழந்தகளுக்கான படைப்புகள் / குழந்தைகளின் படைப்புகள் / குழந்தைகள் பற்றின படைப்புகள்
  3. சிறுகதை / நாவல் / கட்டுரை / பாடல் ….

நன்றி,
பஞ்சு மிட்டாய் ஆசிரியர் குழு

Leave a comment