சாகசமும், சுவாரசியமும் நிறைந்த இயற்கை வரலாறு – ஆதி வள்ளியப்பன்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இந்தியப்‌ பாம்புகள்‌, இந்திய முதலைகள்‌ – இந்த இரண்டையும்‌ பற்றிப்‌ பேசப்‌ புகும்போது தவிர்க்க முடியாத பெயர்‌ ரோமுலஸ்‌ விட்டேகர்‌. அவர்‌ மட்டும்‌ அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பாமல்‌ இருந்திருந்தால்‌, இந்தியப்‌ பாம்புகள்‌, இந்திய முதலைகளின்‌ நிலை என்னவாக இருந்திருக்கும்‌? நிச்சயம்‌ அவற்றுக்கு உத்தரவாதமான எதிர்‌ காலம்‌ இருந்திருக்காது என்பது மட்டும்‌ உண்மை.

மற்றொருபுறம்‌ ‘பாம்பு என்றால்‌ படையும்‌ நடுங்கும்‌’ என்று பாம்புகளைப்‌ பற்றி எப்போதும்‌ எதிர்மறைப்‌ பிம்பமே நம்‌ மனதில்‌ உறைந்துள்ளது. நாம்‌ எவ்வளவு அறியாமையில்‌ இருக்கிறோம்‌ என்பதை இந்தப்‌ புத்தகத்தை வாசிக்கும்போது புரிந்துகொள்ளலாம்‌. இந்த நூல்‌ ஒரு தனிநபரின்‌ வாழ்க்கை வரலாறு அல்லது இயற்கை வரலாறு என்று தள்ளி நின்று பார்க்க வேண்டியதில்லை.

ரோமுலஸ்‌ விட்டேகரின்‌ வாழ்க்கை ஒரு வெளிநாட்டு சாகசத்‌ திரைப்படம்‌ போன்றது. அதேநேரம்‌ இந்த சாகச வாழ்க்கைக்கதை இயற்கை குறித்த நம்முடைய புரிதலைத்‌ தலைகீழோக மாற்றுவது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டவருக்கே உரிய பார்வை-செயல்பாட்டுப்‌ பின்னணியுடன்‌ அவர்‌ வாழ்ந்தும்‌ பணியாற்றியும்‌ உள்ளார்‌. அது வெறுமனே காட்சிப்படுத்துதல்‌, பொழுதுபோக்கு ஆர்வம்‌ ஆகியவற்றுடன்‌ சுருங்கிவிடவில்லை; மாறாக, உயிர் அறிவியல் ஆராய்ச்சிக்கும் முறைசார்ந்த இயற்கைப் பாதுகாப்புப் பணிக்கும் அவரை இட்டுச்சென்றுள்ளது.

சென்னை கிண்டி சிறுவர்‌ பூங்காவை அடுத்துள்ள பாம்புப்‌ பண்ணையைப்‌ பற்றி அறியாதவர்கள்‌ சொற்பமாகவே இருப்பார்கள்‌. அதேபோல்‌ மாமல்லபுரம்‌ சென்று திரும்பியவர்களில்‌ பெரும்பாலோர்‌ வடநெம்மேலியில்‌ உள்ள “சென்னை முதலைப்‌ பண்ணையைப்‌ பார்த்திருப்பார்கள்‌. அங்கு சிலை போல்‌ உறைத்தும்‌, சில நேரம்‌ அசைந்தும்‌ தங்கள்‌ உயிரம்சத்தை வெளிப்படுத்தி வருபவையாக உள்ள, உலகன்‌ பல்வேறு முதலை வகைகளைப்‌ பார்த்து ஆச்சரியப்‌ படாதவர்கள்‌ குறைவாகவே இருப்பார்கள்‌. சென்னை பாம்புப்‌ பண்ணையும்‌ முதலைப்‌ பண்ணையும்‌ மிகச்‌ சிறப்‌பாகப்‌ பராமரிக்கப்படும்‌ இயற்கைக்‌ காட்சியசங்கள்‌ என்பதில் சந்தேகமில்லை. அதேநேரம்‌ இந்த இரண்டு அமைப்புகளையும்‌ பின்னணியாகக்‌ கொண்டு இயங்கிய ரோமுலஸ்‌ விட்டேகர்‌, அவருக்குத்‌ துணையாகச்‌ செயல்பட்ட குழு தேசிய அளவில்‌ ஊர்வனவற்றைப்‌ பாதுகாப்பதில்‌ மிகப்‌ பெரிய பங்கை வகித்திருக்கிறது.

ரோமுலஸ்‌ விட்டேகர்‌ என்ற தனிநபர்‌ இந்தச்‌ செயல்‌பாடுகளுக்கான மைய விசையாக இருந்திருக்கிறார்‌; அதே நேரம்‌, அவருடன்‌ பணிபுரிந்த நடேசன்‌ உள்ளிட்ட எண்ணற்ற இருளர்‌ பழங்குடிகள்‌ தொடங்கி, அவரது வாழ்க்கையில்‌ பங்களித்த, கடந்து போன பலருடைய பங்களிப்புகள்‌ இந்த நூலில்‌ விரிவாகப்‌ பதிவு செய்யப்பட்டுள்ளன. இருளர்‌ பழங்குடிகளிடம்‌ கொட்டிக்கிடக்கும்‌ இயற்கை அறிவை சரியான வகையிலும்‌, அறிவியல்பூர்வமாகவும்‌ பயன்படுத்தவும்‌, இயற்கை குறித்த அவர்களுடைய அனுபவ அறிவைக்‌கொண்டே அவர்களது வாழ்வாதாரம்‌ நீடிக்கவும்‌ வழி வகுத்தவர்‌ விட்டேகர்‌. இது சார்ந்து, ரோமுலஸ்‌ – ஜாய்‌ விட்டேகர்‌ இணையருடைய முயற்சியில்‌ விளைந்த “இருளர்‌ பாம்பு பிடிப்போர்‌ கூட்டுறவுச்‌ சங்கம்”; மிகச்‌ சிறந்த வெற்றிக்‌கதை.

தேசிய அளவில்‌ உயிரினப்‌ பாதுகாப்பு சார்ந்து கவனத்தைத்‌ திருப்பியதில்‌ ரோமுலஸ்‌ விட்டேசரின்‌ பங்கு அளப்பரியது. அத்துடன்‌, பாம்புப்‌ பண்ணை, முதலைப்‌ பண்ணையால்‌ ஈர்க்கப்பட்டு அவருடைய வழித்தடத்தைப்‌ பின்பற்றி சேகர்‌ தத்தாத்ரி, சதீஷ்‌ பாஸ்கர்‌ உள்பட உயிரினப்‌ பாதுகாப்பு, இயற்கைப்‌ பாதுகாப்புப்‌ பணிகளில்‌ இறங்கியவர்கள்‌ எண்ணற்றோர்‌. இன்றைக்கும்கூட கோடைக்காலத்தில்‌ உயிரினங்களுடன்‌ நேரடி. அனுபவம்‌ பெறுவதற்கு முதலைப்‌ பண்ணை குழந்தைகளை வரவேற்கிறது.

இயற்கைப்‌ பாதுகாப்பு சார்த்த செயல்பாடுகளில்‌ இன்றைக்கு விமர்சிக்கப்படும்‌ உலக இயற்கை நிதியம்‌ (IUCN), சர்வதேச அமைப்புகள்‌ இந்திய இயற்கை, உயிரினப்‌ பாதுகாப்பில்‌ எப்படிப்பட்ட பங்கை வகித்திருந்தன; அந்த அமைப்புகளின்‌ சார்பில்‌ செயல்பட்டவர்கள்‌ யார்‌; அவர்கள்‌ சந்தித்த இடர்கள்‌ என்ன; அவர்களுடைய பணி எப்படிப்‌பட்டது என்று இந்திய இயற்கை வரலாறு சார்ந்து இந்தப்‌ புத்தகத்தில்‌ நேரடிப்‌ பதிவுகள்‌ நிறைய இடம்பெற்றுள்ளன.

இந்திய இயற்கையியல்‌ அறிஞர்கள்‌ குறித்து வெளியாகயுள்ளவாழ்க்கை வரலாற்று நூல்கள்‌ குறைவு. அந்த வகையில்‌ “பறவை மனிதர்‌’ சலீம்‌ அலியின்‌ ‘ஒரு இட்டுக்குருவியின்‌ வழசள்‌ குறிப்பிடத்தக்கது. உலக அளவில்‌ இந்தியத்‌ துணைச்‌ கண்டப்‌ பறவைகள்‌ பற்றி அறிவியல்பூர்வ புரிதலை ஏற்படுத்தயதில்‌ அவருடைய பங்கு அளப்பரியது. அதேபோன்றதொரு விழிப்புணர்வை, அறிவியல்பூர்வப்‌ புரிதலை, பாதுகாப்பை பாம்புகள்‌, முதலைகள்‌ உள்ளிட்ட களர்வனவற்றுக்கு அளித்திருப்பவர்‌ ரோமுலஸ்‌ விட்டேசர்‌.

இந்த நூலை ஒரு தனிநபரின்‌ வாழ்க்கை வரலாது என்று மட்டும்‌ நிச்சயமாகச்‌ சொல்ல முடியாது. இயற்கை வரலாற்றுப்‌ புத்தகம்‌ என்று சொல்வதுதான்‌ சரியாக இருக்கும்‌. அதிலும்‌ குறிப்பாகத்‌ தமிழகத்தை மையமாகக்‌ கொண்டு பணியாற்றிய உலகறிந்த ஓர்‌ அறிஞரின்‌ வரலாறு இது. தமிழகத்தை மையப்படுத்தி, தமிழகப்‌ பழங்குடிகளுடன்‌ உறவாடி, இயற்கைச்‌ சூழலைச் குறித்த புரிதலை மாநில-தேரிய-சர்வதேச அளவில்‌ ஏற்படுத்திய ஒருவரைப்‌ பற்றிய நூல்‌ தமிழில்‌ வெளியாவது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஆங்கில எழுத்தாளர்களில்‌ குறிப்பிடத்தக்கவரான ஜாய்‌ விட்டேகரின்‌ எழுத்து, இந்த வாழ்க்கை வரலாற்று நூலை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றியிருக்கிறது. ஒருபுறம்‌ இயற்கை வரலாறு, மறுபுறம்‌ ஒரு தனிநபருடைய வாழ்க்கையில்‌ நிகழ்ந்த சுவாரசிய சம்பவங்கள்‌, அவருடன்‌ ‘பணிபுரிந்தோர்‌, ஏன்‌ சில உயிரினங்கள்கூட இந்த நாலில்‌ தனி இடத்தைப்‌ பிடித்துள்ளன. ஜாய்‌ விட்டேகரின்‌ படைப்புகளுடன்‌ குறைந்தபட்சப்‌ பரிச்சயம்‌ கொண்டவர்‌களுக்கு, அவருடைய எழுத்து முறைமீது நிச்சயம்‌ ஓர்‌ ஈர்ப்பும்‌ எதிர்பார்ப்பும்‌ இருக்கும்‌. அந்த எதிர்பார்ப்பை இந்த நூல்‌ பன்மடங்கு தாண்டிச்‌ செல்கிறது.

அதேநேரம்‌, ஒரு வாழ்க்கை வரலாற்று நூலை இவ்வளவு நகைச்சுவை உணர்வுடனும்‌ சுவாரசியத்தன்மையுடனும்‌. எழுத முடியும்‌ என்பதற்குச்‌ சிறந்த எடுத்துக்காட்டாகவும்‌ திகழ்கிறது. இந்தப்‌ புத்தகத்தின்‌ குறிப்பிடத்தக்க அம்சம்‌ எந்த இடத்திலும்‌ ரோமுலஸ்‌ விட்டேசர்‌ புனிதப்படுத்தப்படவில்லை. ஒருவருடைய வாழ்க்கைப்‌ போக்கில்‌ இயல்பாக நடைபெற்ற சம்பவங்களில்‌ குறிப்பிடத்தக்கவை கவனமாக இந்த நாலில்‌ கோக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட வாழ்க்கைச்‌ சம்பவங்கள்‌ குறித்து விவரிக்கும்போதுகூட வெளிப்படைத்‌ தன்மையுடனும்‌, அதே நேரம்‌ குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டும்‌ ஜாய்‌ விட்டேசர்‌ எழுதியுள்ளார்‌.

எழுத்தாளரும்‌ மொழிபெயர்ப்பாளருமான கமலாலயனின்‌ மொழிபெயர்ப்பில்‌ இந்த நூல்‌ சிறந்த வகையில்‌ மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில்‌ மொழிபெயர்ப்பாளர்களின்‌ பணி பெரும்பாலான நேரம்‌ உரிய மதிப்பைப்‌ பெறுவதில்லை. இந்த நூல்‌ ஆங்கிலத்தில்‌ வெளியாகி பல பத்தாண்டுகளுக்குப்‌ பிறகு தற்போது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதேநேரம்‌, இந்தப்‌ புத்தகத்துக்கு உரிய தேவை இன்றும்‌ மிக அஇகமாகவே இருக்கறது.

ரோமுலஸ்‌ விட்டேகர்‌ போன்றோர் தொடர்ச்சியாக ஏற்படுத்திய விழிப்புணர்வின்‌ வழியாகவும்‌, மிச்சமிருக்கும்‌ இயற்கை வாழிடங்கள்‌ வேகமாக அழிக்கப்பட்டுவகும்‌ சூழ்நிலையிலும்‌ இளைஞர்கள்‌ பலர்‌ இயற்கைப்‌ பாதுகாப்புத்‌துறையின்‌ பல்வேறு பிரிவுகளில்‌ ஆர்வத்துடன்‌ கால்பதித்‌துள்ளனர்‌. விட்டேகரைப்‌ போல்‌ ஒவ்வொன்றையும்‌ முதன்‌முறை பரிசோதித்துப்‌ பார்த்து, தவறுகளைத்‌ இருத்துக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நுழைய வேண்டிய அவசியம்‌ இன்றைக்கு இல்லை என்பது இந்த நூலைப்‌ படிக்கும்போது புலப்படும்‌. அத்துடன்‌ இந்த நூல்‌ காட்டும்‌ திசை அவர்களுக்குச்‌ சரியான பாதையின்‌ மீது வெளிச்சத்தைப்‌ பாய்ச்சும்‌. அந்த வகையில்‌ இந்த நூல்‌ மூத்த மொழிபெயர்ப்‌யாளர்‌ கமலாலயனின்‌ ஆக்கத்தில்‌ முக்கியப்‌ பங்களிப்பாக அமையும்‌ என்பதில்‌ சந்தேகமில்லை. வாசகர்களுக்கும்‌ முற்றிலும்‌ புதியதோர்‌ உலகைத்‌ திறந்து காட்டும்‌.

– ஆதி வள்ளியப்பன்

Leave a comment