அறிவிக்கப்பட்ட குறிக்கோள்களுக்கும் [அவற்றைச் செயல்படுத்துவதற்கென] முன்வைக்கப்படும் நிறுவனக் கட்டமைப்புக்கும் தொடர்பற்ற நிலை – நிவேதிதா மேனன் –

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஆர்வமூட்டும் செயற்பாடுகள்மற்றும் உயிர்த் துடிப்பு மிக்க பல்துறைப் படிப்பு வாய்ப்புகள்” – (எதிர்) – மாபெரும் கூட்டு நிறுவனங்கள்

இவை இரண்டும் தே..கொவில் அடிக்கடி வருகின்றன. “பட்டாங்குச்(அனுபவம்) சார்ந்த கற்றலைப்பற்றிப் பக்கங்கள் 12-13-இல் வியந்தோதுகின்றன. ஆனால், அவற்றைக் குறித்த அனைத்து விவாதங்களும் இறுதியில் தே..கொவின் பின்வரும் அதியுயர் பரிந்துரைக்கேஇட்டுச் செல்கின்றன: பள்ளிகளையும் கல்லூரிகளையும் பெரிய தொகுப்புகளுடன் இணைத்தல்.

பெரிய பல்துறைப் பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்விக் கழகங்கள் ஆகியவற்றை நோக்கிச் செல்வதே உயர் கல்விக் கட்டமைப்புத் தொடர்பாக இந்தத் திட்டக்கொள்கை முன்வைக்கும் அதியுயர் பரிந்துரையாகும் (பக்கம் 34/10.2).

மிகச் சிறிய கல்விக் கழகம்மூவாயிரம் மாணவர்களைக் கொண்டதாக இருக்கும். பல்துறையியம் மற்றும் மாபெரும் கல்வித் தொகுப்பு ஆகியவற்றுக்கிடையிலான இணைப்புக் குறித்துத் தொடர்ந்து குறிப்பிடப்படுகிறது. ஆனால், இவ்விரண்டும் ஒன்றுடன் மற்றது ஏன் நெருங்கிய தொடர்புடையவை என்பது விளக்கப்படவில்லை. பரந்த அளவில் செயல்படுவதன் மூலம் உபரி ஈட்டுவதற்கு வழி செய்வது நோக்கமா? மாபெரும் தொகுப்புகளை உருவாக்குவதற்கு HEFA-விடம் மிகப் பெரிய அளவில் கட்டமைப்புக் கடன் பெறவேண்டியிருக்குமே? அது தான் அத்தகைய தொகுப்புகளை முன்வைப்பதன் நோக்கமா?

அதுபோலவே பள்ளிக் கல்வித் துறையிலும். குறைவான மாணவர் உள்ள பள்ளிகளை இணைத்தல் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. மேலும், நிட்டி ஆயோக்இன் கல்வித் திட்டமான SATH-E மட்டுமே மத்தியப் பிரதேசம், சார்க்கன்ட், ஒரிசா மாநிலங்களில் 2018-ஆம் ஆண்டு நாற்பதாயிரம் பள்ளிகளின் இணைப்புக்கு வழிவகுத்தது.

பொருளாதார உகப்புநிலை குறைவாகவும் தொடர்ந்து நடத்துவதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதாகவும் கருதப்படும் பள்ளிகளை இணைப்பதை தே..கொ. 2020 ஏற்கத்தக்க செயற்பாடாக ஆக்குகிறது. (பக்கம் 28/7.2)

வறியோர் வாழும் பகுதிகளில் உள்ள பள்ளிகளை மூடுவதையே இது குறிக்கிறது. பள்ளிகள் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கப்படுகின்றன; அவற்றின் சேவைகள் ஒவ்வொரு குழந்தையையும் சென்றடைகின்றனவா என்பதற்கு முதன்மையில்லை.

ஆனால், (ஆர்வமூட்டும் செயற்பாடுகள் மற்றும் உயிர்த் துடிப்பு மிக்க பல்துறைப் படிப்பு வாய்ப்புகள் ஆகியவற்றைப் பற்றி நிறையப் பேசும்) கற்பித்தலியல் விவாதங்களுக்கும் கல்வித் துறையில் ஊக்குவிக்கப்படும் நிறுவனக் கட்டமைப்புகளுக்கும் (பல சிறு கல்விக் கழகங்களுக்கு பதில் சில மாபெரும் கழகங்களை உருவாக்குதல்) இடையில் எவ்வித ஒட்டுதலும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆசிரியர்மாணவர் விகிதத்தைக் குறித்துப் பேச்சே இல்லை. குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள சிறிய வகுப்புகள், அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் ஆகிய வசதிகள் இருக்கவேண்டும் என்று வெளிப்படையாகக் கட்டாயப்படுத்தாமல் விட்டால் அந்த மாபெரும் கல்வி நிறுவனங்களில் கற்றலில் ஆர்வமூட்டுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருக்கும்.

நுண்ணாய்வுச் சிந்தனைமற்றும் தன்னாட்சி” – (எதிர்) – கல்வி நிலையங்களைக் கட்டுப்படுத்துதல்

இந்தச் சொற்றொடர்களும் தே..கொ. 2020-இல் பல இடங்களில் வருகின்றன. ஆனால் கல்விக் கழகங்களில் செய்யவேண்டிய மாற்றங்கள் என முன்வைக்கப்படும் [பின்வரும்] வழிமுறைகள் மேற்கண்டவற்றைப் பொருளற்றவை ஆக்குகின்றன.

முதலாவதாக, ஆசிரியர்களுக்கு நிலைத்த பணி உறுதியில்லை. பல்வேறு பணிமுறைமைகளை அவர்கள் நிறைவு செய்தால் மட்டுமே அவர்களுடைய பணி உறுதி செய்யப்படும் (பக்கம் 40/13.6). பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவையும் எவ்வளவு ஆண்டுகள் ஒருவர் வேலையில் இருந்தார் என்பதைப் பொறுத்து அமையமாட்டா; அவருடைய செயற்பாடுகளை அளவிட்டு அதைப் பொறுத்தே பதவி, சம்பள உயர்வுகள் முடிவு செய்யப்படும்” (பக்கம் 22-3/5.20).

நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட அமைப்பு விழுமியங்களைவைத்துப் பார்த்தால் எத்தகைய கற்பித்தல், பாடத்திட்டங்கள், ஆசிரியரின் அணுகுமுறை ஆகியன ஊக்குவிக்கப்படும், எத்தகைய சிந்தனைகள், உரைகள் ஆகியன களைந்தெடுத்து அப்புறப்படுத்தப்படும் என்பதைப் புரிந்து கொள்வது கடினமில்லை.

இரண்டாவதாக, அனைத்து நுழைவுத் தேர்வுகளும் தேசியத் தேர்வுக் குழுமத்தால் (the National Testing Agency – NTA) நடத்தப்பெறும். HEFA-வைப் போலவே NTA-வும் ஏற்கெனவே இயங்கிக்கொண்டுள்ளது. அந்தத் தேர்வுகள் அனைத்தும் இணையவழியில் நடத்தப்பெறும் பன்முகத் தெரிவு வினாக்களைக் கொண்டவை.

பள்ளிக் கல்வி அல்லது இளங்கலைப் படிப்பு முடித்த மாணவர்களில் பலருக்கு இணையவழிக் கற்றல், தேர்வெழுதுதல் ஆகியவற்றுக்கான வாய்ப்பும் போதுமான அறிமுகமும் இல்லாதிருக்கலாம். ஆகவே, அந்தத் தேர்வு முறை விலக்கிவைக்கும் தன்மை உடையது. மேலும், ஒரு சரியானபதிலைத் தேர்ந்தெடுப்பதைவிட கருத்துருக்களைப் பற்றிச் சிந்தித்தல், பகுப்பாய்வு செய்தல் ஆகியன முதன்மையானவை. ஆகவே, பன்முகத் தெரிவு வினாக்களை மட்டும் கொண்ட தேர்வுகள் குமுகிய அறிவியல் மற்றும் மானுடவியல் பாடங்களைப் பொறுத்தவரை அந்தத் தேர்வுகள் குறுகிய தன்மையுடையவை; திறனாய்வு சார்ந்த சிந்தனைத் திறனை வளர்ப்பதை அவை ஊக்குவிக்கமாட்டா. (அவற்றைப் பற்றிய விரிவான திறனாய்வு ஒன்றுக்கு இந்த மேற்கோளைக் காணவும்.)

(, தே..கொ. 2020 பின்வரும் நம்பிக்கையை முன்வைக்கிறது:

இணையத் தொடர்புள்ள திறன்பேசிகள் அல்லது கைக்கணினி அனைத்து இல்லங்களிலும் மற்றும்/அல்லது பள்ளிகளிலும் கிடைக்கும் நிலை வந்துவிட்டால் …”

பலப் பல ஆர்வமூட்டும் செயற்பாடுகளைத் தொடங்கலாம். பக்கம் 20/4.46)

மூன்றாவதாக, கல்விக் கழகங்களின் ஆளுகை பற்றிப் பேசும்போது “எளிய ஆனால் இறுக்கமானஎன்கிற பதம் பல இடங்களில் வருகிறது. இது ஒரு முரணான சொல்லாடல். கல்வி நிலையங்களைப் பொறுத்தவரை, “எளியஎன்பது (நாம் ஏற்கெனவே பார்த்தவாறு, நிதி நல்கை தொடர்பான) அரசின் பொறுப்பு பற்றியது; “இறுக்கமானஎன்பது கல்வி மீது அரசின் கட்டுப்பாடு குறித்தது. இந்த இறுக்கத்துக்குப் பின்வரும் இரண்டு கூறுகள் இருப்பதாக ஓர் ஆய்வாளர் பகுக்கிறார்.

  1. தன்னாட்சி என்பது அரசால் வரையறுக்கப்பட்டுக் கட்டுப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, அது, “ஏற்பளிக்கப்பட்ட சட்டகத்துக்குள்இருந்து பாடத்திட்டம், கற்பித்தல் அணுகுமுறைகள் ஆகியவற்றை வடிவமைப்பதற்கு ஆசிரியர் குழாமுக்கு தன்னாட்சியுரிமை வழங்குகிறது (தே..கொ. 2020, 40). “ஏற்பளிக்கப்பட்ட சட்டகம்என்பது, கல்வித் துறை அதிகார வகுப்பினர் [ஆசிரியர்களுக்கு தே..கொ.-வில்] “உறுதியளிக்கப்பட்டுள்ள விடுதலையைக் தம் விருப்பம்போலக் கட்டுப்படுத்தி அடக்குவதற்கு வாய்ப்பளிக்கிறது”.

  1. (கல்வி வாரியங்கள், கல்விக் குழுக்கள்) என இப்போது நடைமுறையில் இருக்கும் அனைத்து வகையான தன்ஆளுகை வடிவங்களும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு,

தன்னாண்மை பெற்ற ஆளுநர்களைக் கொண்ட வாரியம் உயர் கல்விக் கழகங்களுக்குத் தலைமை தாங்கும். “கல்வி நிலையங்கள் மீது மிகுந்த அக்கறையும் நன்கு அறியப்பட்ட செயல்வல்லமையும் பொருந்திய, உயர் தகுதி பெற்ற, திறன் மிக்க, ஈடுபாடுடைய வல்லுநர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்படுவார்கள்”. “வெளியில் இருந்து வரும் இடையூறுகள் அறவே இல்லாமல் ஆளுகை செய்தல், கல்வி நிலையத்தின் தலைவர் உட்பட அனைத்து நிலைகளிலும் பணியமர்த்துதல், ஆளுகை தொடர்பான எல்லா முடிவுகளையும் எடுத்தல் ஆகிய அனைத்து அதிகாரங்களும் படைத்தவர்கள்என்று அவர்களுடைய பங்கு குறித்துச் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது (பக்கம் 49). ஆட்சிக் குழுவைத் தேர்ந்தெடுத்தல், பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள், துறைகள் ஆகியோருக்கு இதுகாறும் வழங்கப்பட்ட பெயராளி உரிமைகள் ஆகியன இனி ஒழித்துக்கட்டப்படும் என்பதையே இது காட்டுகிறது.

ஆக, உயர் கல்விக் கழகங்கள் அரசாங்கத்தால் நியமிக்கப்படும் ஆளுநர் வாரியங்களால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்.

நான்காவதாக, ஆராய்ச்சிச் செயற்பாடுகள் அனைத்தும் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தால் (National Research Foundation – NRF) கட்டுப்படுத்தப்படும்.

அனைத்துத் துறைகளிலும் போட்டிகளின் அடிப்படையில் ஆய்வு நிதிகள் வழங்கப்படும். வெற்றிகரமான ஆய்வுகளுக்கு ஏற்புக் கிடைக்கும்; அவற்றின் பொருத்தப்பாட்டின் அடிப்படையில் அரசுக் குழுமங்களுக்கும் தொழிலகங்கள் மற்றும் தனியார்/அறநோக்குள்ள கழகங்கள் ஆகியவற்றுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகள் மூலம் அந்த ஆய்வுகள் நடைமுறைப்படுத்தப்படும் (பக்கம் 46/17.9).

அரசும் தொழிலகங்களும் எந்த அளவுக்குத் திறனாய்வு சார்ந்த சிந்தனைகளை ஊக்குவிக்கும் என்பது கடினமான கேள்வியன்று.

தொடரும்…

ஆங்கில மூலக் கட்டுரையாளர்: நிவேதிதா மேனன் (2020 செப். 08)

தமிழாக்கம்: பரிதி

கட்டுரையை முழுமையாக வாசிக்க :

ஆங்கிலத்தில்
தமிழில்

Leave a comment