கொரோனா பேரிடர் தாமதத்திற்குப் பிறகு இதோ இரண்டு இதழ்கள் இணையாக வர இருக்கின்றன…அவற்றில் 10-ஆவது இதழ் குழந்தைப் பாடல்கள் சிறப்பு இதழாக வருகிறது. குழந்தைப் பருவப் பாடல், விளையாட்டுப் பாடல், விடுகதைப் பாடல், கோமாளிப் பாடல், புதிர்ப் பாடல், கதைப் பாடல், வினா-விடைப் பாடல், அறிவியல் பாடல், சூழலியல் பாடல், நாட்டுப்புறப் பாடல் எனப் பல்வேறு விதமான பாடல்களைத் தொகுத்து அழகிய ஓவியங்களுடன் இந்த இதழை வண்ணமயமாக வடிவமைத்துள்ளோம். 11-ஆவது இதழ் சிறுவர்களின் கைவண்ணத்தில் வந்துள்ளது. சிறுவர்களின் கதைகளும், ஓவியங்களும், கேள்விகளும் இதழை அழகாக்கியுள்ளன.
10-ஆவது இதழில் ராகவி அவர்களின் ஓவியங்களும், 11-ஆவது இதழில் ராஜன் அவர்களின் ஓவியங்களும், மணிகண்டன் அவர்களின் வடிவமைப்பும் இதழ்களை மேலும் அழகாக்கியுள்ளன
நவம்பர் இரண்டாவது வாரத்தில் உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்ட உள்ளன … கூடவே சுட்டிகளின் குட்டி இதயங்களையும் கவர இருக்கின்றன …அதுவரை கொஞ்சம் காத்திருங்கள் …
பஞ்சு மிட்டாய் இதழ் தொடர்புக்கு – பிரபு – 9731736363 / editor.panchumittai@gmail.com
பஞ்சு மிட்டாய் சந்தா விபரங்கள் :
10 இதழ்கள் சந்தா – ரூ.500/-
5 இதழ்கள் சந்தா – ரூ.250/-
தனி இதழ் : ரூ.50/-
குறிப்பு: சாதாரண தபால் சரியாக வராதோருக்கும் மற்றும் tracking வசதியுடன் தேவைப்படுவோர்க்கு 120ரூ (புத்தகத்திற்கு 12ரூ) சந்தாவுடன் சேர்த்து அனுப்பும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இணையம் மூலம் வாங்க :