வணக்கம் நண்பர்களே, முந்தைய பதிவில் ஓரிகாமி கலையின் வெவ்வேறு வகைகளைப் பற்றி பார்த்தோம். அதில் ஒன்றான முப்பரிமாண 3D origami பற்றிய சில சுவாரஸ்யமான வரலாற்றினை தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். முப்பரிமாண ஓரிகாமி சீன சிறை கைதிகளால் பரவியிருக்கிறது என்கிறது வரலாறு. அவற்றைப் பற்றின செய்திகளையும், பொதுவாக சிறை கைதிகள் பற்றியும் கொஞ்சம் விவாதிக்கலாம்.
இன்று உலகம் முழுவதும் உள்ள சிறைகளில் பல ஆயிரம் மனிதர்கள் மாதம், வருடம், ஆயுள் தண்டனை, தூக்கு தண்டணை என அவரவர் செய்த தவறுகளுக்கு தக்கவாறு தண்டனைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த தண்டனையானது அந்தந்த நாட்டு சட்ட விதிகளின் படி நிறைவேற்றப்படுகிறது. ஆனால் நாம் பேச விரும்புவது மனிதாபிமானம் அடிப்படையில். இந்த தண்டணை கைதிகள் அனைவரும் ஒரு காலத்தில் யாரோ ஒரு பெற்றோர்களுக்கு செல்ல மகள்களாகவும், மகன்களாகவும் வளர்ந்தவர்கள் தானே. ஒரு கள்ளம் கபடமற்ற குழந்தையாக தானே இந்த உலகிற்கு வந்தார்கள். அவர்கள் செய்த எதிர்மறையான தீவினை செயல்கள் எல்லாம் இந்த சமூகம் தானே அவர்களுக்கு பயிற்றுவித்திருக்க வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு எப்போதும் உண்டு.
அனைத்து மனிதர்களும் வேண்டுமென்றே தவறுகள் செய்வதில்லை. இளமையில் நல்ல உணவு, உடை இல்லாமல் வறுமையில் வாழ்ந்த சிலர், வசதியான குடும்பத்தில் பிறந்தும் போதை பொருட்களுக்கு அடிமையான இளைஞர்கள், தவறான பெற்றோர்களார் சிறு வயதில் அனாதையாக்கப்பட்ட குழந்தைகள், எதிர்மறையான கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு தீயவர்களிடம் சிக்குண்டு சிறை கைதியாகிவிடுகிண்றனர். சிலர் பேராசையின் காரணமாக, சிலர் உணர்ச்சிவசப்பட்டு, மனக்கிளர்ச்சிக்கு உள்ளாகி தவறு செய்துவிடுகிறார்கள். சிறை தண்டனையின்,நோக்கம் அவர்களை திருத்துவதற்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும். ஆனாலும், இவர்களுக்கும் உணர்வுகள் இருக்கிறது. அவர்களிடமும் சில திறமைகள் இருக்கின்றன. சிறை கைதிகள் என்றில்லாமல் அவர்களின் அபரிமிதமான மனித சக்திகளை நாம் ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இது குறித்து பல உளவியல் சமூகவியல் அறிஞர்கள் ஆய்வுகள் செய்து சிறைகைதிகளுக்கும் பல விதமான கலைகள், கைவினைப்பொருட்கள், தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறார்கள். ஐக்கிய நாடு மனித உரிமைகள் அமைப்பும் பல ஆக்கபூர்வமான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக 1993 ம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே.
1990 ஆம் வருடம் the golden venture தி கோல்டன் வென்ச்சர் என்ற கப்பலில் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் குடியேற விருந்த சீன மாலுமிகள் மூலமே இந்த 3D ஒரிகாமி கலை வடிவம் வெளிக்கொண்டு வரப்பட்டது. சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்த 300(கிட்டத்தட்ட) சீன மாலுமிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அவர்கள் மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளவும், தொல்லைகளிலிருந்து விடுபடவும் 3D ஒரிகமி படைப்பாற்றலை சீனா மாலுமிகள் கையில் எடுத்தனர். அவர்கள் அமெரிக்க சிறையில் இருந்தபோது படைக்கப்பட்ட ஒரிகாமி உருவங்களை குறிப்பாக பறவை சித்திரங்களை Freedom Birds (சுதந்திரப் பறவைகள்) என்று பெயர் வைத்து அழைத்தனர்.
இன்றளவும் கோல்டன் வின்சர் கப்பலில் வந்த மாலுமிகள் கிட்டத்தட்ட 30 பேர்கள் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் செய்த ஒரிகாமி முப்பரிமாண உருவ பொம்மைகள் அவர்கள் விடுதலைக்கு உதவி செய்தவர்களுக்கு அன்பளிப்பாக அளித்தனர். மேலும் அவர்கள் விடுதலைக்கு சட்டப்பூர்வமாக ஆகும் செலவுகளை அவர்கள் சிறையில் செய்த ஒரிகாமி மாடல்களை தொண்டு நிறுவனங்கள் மூலம் வெளியில் விற்று பணம் சேர்த்துக் கொண்டார்கள். மீதமிருந்த ஒரிகாமி மாடல்களை 2006ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த டிராவலர்ஸ் எக்ஸிபிஷன் இல் காட்சிப்படுத்தினார். இந்த நிகழ்வு உலகளாவிய சிறப்பு மிக்க உண்மை சம்பவம், இந்த நிகழ்வை வைத்து திரைப்படங்கள் பல வந்துள்ளது.
மனிதனுக்குள் இருக்கும் எதிமறையன எண்ணங்களை நீக்கி நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்வதே நல்ல சமூகத்தை கட்டமைக்க வழியை கலைகள் மட்டுமே நமக்கு தருகிறது. ஆம்! இவை அனைத்தும் பல கலைகள் மூலமாகவே சாத்தியமாகிறது.
அவர்கள் செய்த ஓரிகாமி மாடல்கள் மீதமிருக்கும் அசல் மாடல்களை இந்த படத்தில் நீங்கள் காணலாம் இந்த முறையை பின்னர் இவர்கள் கோல்டன் வெஞ்சூர் ஃபோல்டிங் என்றழைக்கிறார்கள். ஆமாம் மாலுமிகள் வந்த அந்தக் கப்பலின் பெயர் தான் இது.
























