எனக்கு பஞ்சு மிட்டாய் புத்தகம் மிகவும் பிடித்திருந்தது மிஸ் – து.ரக்சனா (7ஆம் வகுப்பு)

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

எனக்கு பஞ்சு மிட்டாய் புத்தகம் மிகவும் பிடித்திருந்தது மிஸ். நான் பஞ்சு மிட்டாய் புத்தகத்தை பிடித்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன் மிஸ். இந்த புத்தகத்தில் நிறைய கதைகள் இருந்தது மிஸ். இந்த புத்தகத்தில் கம கமக்கும் பூ வாசம், கரடி பொம்மை, தக்காளி ராஜா, பள்ளிக்கூடம் திறந்தாச்சு போன்ற கதைகளை படிக்கும் போதே காமெடியாகவும் சிரிப்பாகவும் இருந்தது மிஸ். நான் பஞ்சுமிட்டாய் புத்தகத்தை முழுமையாக படித்தேன் மிஸ். ஆனால் நான் பஞ்சுமிட்டாய் புத்தகத்தை ரொம்ப நேசித்தேன் மிஸ். இதில் வரும் கதை, பாடல், விளையாட்டு போன்றவை எல்லாம் என்னை மிகவும் நேசித்தது மிஸ். தக்காளி ராஜா கதை காமெடியாக இருந்தது மிஸ். ஏனென்றால் எல்லா காய்கறிகளும் சேர்ந்து தேர்தல் நடத்தி தக்காளியை ராஜாவாக ஆக்குச்சாம். ராஜா குதிரை மேல ஏறி சண்டைக்கு வந்தாராம். தக்காளி தனியா சண்டை போட்டுச்சாம். குதிரை குளம்படியில் மாட்டி தக்காளி கூழ் ஆயிடுச்சாம். ராஜா சிரிச்சாராம். நசுங்குன தக்காளி உள்ள இருந்த விதை எல்லாம் விழுந்து செடியா முளைச்சிச்சாம். இது தான் எனக்கு மிக மிக காமெடியாக இருந்தது மிஸ். இதை படித்து அரைமணி நேரம் குலுங்கி குலுங்கி சிரிச்சேன் மிஸ்.

நாய் கதை எனக்கு பிடித்திருந்தது மிஸ். காமெடியாக இருந்தது. நாய் இருந்தததாம் மிஸ். ஆனால் நாய்க்கு நிறைய நண்பர்கள் இருந்தாங்களாம். ஆனால் நாய்க்கு அந்த ஊர்ல இருக்கவே பிடிக்கலையாம் மிஸ்.அதுனால நாய் எங்கிருந்து வந்துச்சோ அதோட சொந்த ஊருக்கே திரும்ப போயிடுச்சாம். இதுதான் எனக்கு மிகவும் சிரிப்பாகவும் காமெடியாகவும் இருந்தது மிஸ். என் அம்மா “என்ன ரக்சனா எதற்கு சிரிக்கிற?” ன்னு கேட்டாங்க. “அம்மா ராஜா கதையும், நாய் கதையும் படிச்சு பாருமா”ன்னு சொன்னேன். படிச்சுப்பாத்திட்டு எங்க அம்மாவும் சிரிச்சாங்க மிஸ். அது மட்டுமல்ல மிஸ். பஞ்சு மிட்டாய் புத்தகம் பின்னாடி “காட்டுப் பக்கம் போகலாமா” என்று ஒரு விளையாட்டு இருந்தது மிஸ். மிகவும் ஜாலியாக இருந்தது மிஸ்.

கம கமக்கும் பூ வாசம் கதை பிடித்திருந்தது மிஸ். ஆனால் சதனாவுக்கு பாட்டி தினமும் கதை சொல்வாங்களாம். ஒரு ஊர்ல மகிழம்பூன்னு கதை ஆரம்பிச்சாங்களாம். அப்போவே வீடு முழுக்க மகிழம்பூ வாசனை வந்ததாம். அப்போ எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது மிஸ். அப்போ நானும் மகிழம்பூ மகிழம்பூ என்று கத்துனேன் ஆனால் வாசனை ஒன்றும் வரல மிஸ். சரின்னு ரோஜாப்பூ ரோஜாப்பூ னு கத்துனேன் அப்பாவும் ஒன்னும் வரவே இல்லை. ஆனால் அப்போ தான் உணர்ந்தேன் நடிப்புன்னு மிஸ்.

 – து.ரக்சனா (7ஆம் வகுப்பு)

பஞ்சு மிட்டாய் இதழை மாணவர்களுக்கு கொடுத்து அதைப் பற்றிய கருத்துக்களை அழகாக மாணவர்களின் எண்ண ஓட்டத்திலே பெற்று அதை நம்முடன் பகிர்ந்த ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்களுக்கு நன்றிகள்.

Leave a comment