ஒருபக்கம் ஆசிரியரின் மன வருத்தத்திற்கு என்னால் ஏதும் சொல்ல முடியவில்லை என்றாலும் இன்னொரு பக்கம் அந்தப் பெற்றோரின் கண்டிப்பு என்னை ஒருவித ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அடைய செய்தது. “பெற்றோர்கள் விழித்துக்கொண்டார்கள் , உண்மையை உணர துவங்கிவிட்டனர் . screen timeக்கு (தொழில்நுட்பசாதனங்களுக்கு) கல்வி முறையில் கொடுக்கப்படும் அதிகப்படியான முக்கியத்துவம் என்பது கல்வியில் ஏற்படும் பாதகத்தின் ஒரு பகுதி என்பதை உணரத் துவங்கிவிட்டனர்”
நாம் வேலை செய்வதற்கும், இசையைக் கேட்பதற்கும், விளையாடுவதற்கும், வாழ்க்கையின் மன அழுத்தத்திலிருந்து தப்பிப்பதற்கும் தொழில்நுட்ப திரைகளுக்கு முன்னால் அமர்ந்திருக்கிறோம். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது குழந்தைகள் அமைதியாக இருக்க அவர்களை கைப்பேசி போன்ற தொழில்நுட்ப திரைகளுக்கு முன்னால் உட்கார வைத்து விடுகிறோம், அதேபோல் வகுப்பறையிலும் (அது சிறியதோ பெரியதோ) செய்கிறோம். திரைகள் நம்மை மகிழ்விக்கின்றன, ஓய்வெடுக்க உதவுகின்றன, மேலும் நாம் சிந்திக்கக்கூடிய கேள்விகளுக்கு கூட விரைவாக பதில் தர உதவுகின்றன. ஆனால் உண்மையின் ரகசியம் வேறுவிதமாக இருக்கிறது: “கல்வியில் தொழில்நுட்பத்தை மட்டும் தனியாக வைத்துப் பார்த்தால் அதற்கு எந்த முக்கியத்த்துவமும் இல்லை. கல்வி துறையில் தொழில்நுட்பம் ஆரம்ப கட்டத்தில் உள்ளது, மேலும் இதில் தொழில்முனைவோர் கல்வியைப் பற்றி புரிந்துகொள்ள முடியாத அளவில் தான் இருக்கிறார்கள். வணிகத்திற்கும் கல்விக்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கிறது. அது என்னவென்றால், தொழில்முனைவோர் இலாபங்களில் மீது கவனம் செலுத்துகிறார்கள், ஆனால் கல்வியாளர்கள் குழந்தைகள் மற்றும் கற்றல் மீது கவனம் செலுத்துகிறார்கள்.
ஒரு வியாபாரியின் பார்வையில், 50 மாணவர் கொண்ட வகுப்பில் ஒரு ஆசிரியரும் 50 கணினி சாதனம் என்பது நல்ல வருமானம் தரக்கூடிய மிகச் சிறந்த யோசனையாக கருதப்படுகிறது. Rocket ship character school இதுப் போன்ற ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. Richard Whitemire என்பவர் தனது புத்தகத்தில் “சில ஆசிரியர்கள் மற்றும் சாதனங்களைக் கொண்டு சுழற்சி முறையில் மாணவர்களுக்கு கற்பித்தல்” என்ற ஒரு முறையைப் பற்றி எழுதியுள்ளார். அதில் வெறும் ஆறு ஆசிரியர்கள் மற்றும் சில உதவியாளர் துணைக்கொண்டு 630 மாணவர்கள் கொண்ட பள்ளியை(உதாரணமாக : Rocketship Mosaic பள்ளி) நடத்தி வெற்றி கண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சாதனங்களை உபயோகப் படுத்தி கற்றுக் கொள்ளும் பொழுது மாணவர்கள் மிக மகிழ்ச்சியுடனும் மற்றும் அதிகமான பாடங்களை எளிமையுடனும் கற்றுக்கொள்ள முடியும் என்று வியாபாரிகள் நினைக்கின்றனர். மேலும் சிறிய கண்களுக்கு முன் சிறிய திரைகளை வைப்பது மூலம் ஆசிரியர்களின் வேலை மிகவும் எளிமையாகிவிடும் என்று கூட சிலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் “எளிமையான வேலையே தங்களுக்கு வேண்டும்” என்று எண்ணி ஆசிரியர் வேலைக்கு வந்த ஒருவரை கூட இதுவரை நான் பார்த்ததேயில்லை.
காலம் வேகமாக நகர்கிறது, கல்வி சார்ந்து இயங்கும் தொழில்முனைவோர் கல்வி துறையின் மீதான தங்கள் பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கல்வி என்பது சந்தையும் அல்ல அதில் குழந்தைகள் அங்கு தயாரிக்கப்படும் கருவிகளும் அல்ல.
உறுதியான மக்களாட்சிக்கு நல்ல கல்வி என்பது மிக முக்கியமானதாகும். மேலும் அது குழந்தைகளுக்கான அறிவு வளர்ச்சியுடன் நல்ல நெறிமுறைகளை கற்பிப்பதாகவும் இருக்க வேண்டும். தொழில் நுட்பத்துடன் கூடிய கல்வி என்பது பள்ளிகளின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதோட மட்டுமல்லாமல் மாணவர்களின் மனவளர்ச்சியையும், சாதனங்களுக்கு அடிமையாகாமல் இருத்தலையும் கல்வி சம்பந்தமான அவர்களது உளவியலையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
கல்வியில் தொழில்நுட்பம் சார்ந்த விசயங்களை வடிவமைக்கும் போதும் சரி அதை செயல்படுத்தும் போதும் சரி அதனை தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். மனித தொடர்புகளே குழந்தைகளை கல்வியின் மீதான ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் தருகிறது. எப்படி நமது பிரச்னைகளுக்கு ஒரு மருத்துவர் அல்லது வழக்கறிஞரோடு நேரடியான தொடர்பை நாம் எதிர்பார்ப்போமோ அப்படியே கல்வியுடனான தொடர்புக்கும் நம்பகத்தன்மைக்கும் நிஜ ஆசிரியர்களே குழந்தைகளுக்கு தேவை. இது சாத்தியமானால் மட்டுமே தொழில்நுட்பம் கல்வி துறையில் சரியான இடத்தினை அடைய முடியும்.
என் கல்வி தொழில்நுட்ப நண்பர்களே, “நிதி சீர்திருத்தங்களையும் லாப நோக்கங்களையும் சற்று மறந்து விடுங்கள். இது தொழிலநுட்பம்(technology) எனும் வியாபார சந்தை அல்ல. இது “teachnology” (technology அல்ல) எனும் இடம், இதில் வகுப்பறையின் பொறுப்பு ஆசிரியர்களிடம் தான் இருக்கும் ஏன்னென்றால் அவர்கள் தான் நம் குழந்தைகளுடன் உற்சாகமான மற்றும் அறியப்படாத எல்லைகளுக்கு பயணிக்க கூடியவர்கள்.
இணைப்புகள் :