பஞ்சு மிட்டாய் 9ஆம் இதழ் : இதழ் என்பது பல செயல்பாடுகளை செய்ய வைக்கிறது. இதழுக்கான படைப்புகளை எதேச்சையான சூழலில் தேடிப்பிடிப்பது என்பது பயணங்களை உருவாக்கி தருகிறது. இம்முறையும் சிறுவர்களின் படைப்புகளை சேகரிக்க சென்னை, பெங்களூர், வேதாரண்யம், திருப்பூர், கோவை, காயல்பட்டினம் என நிறைய ஊர்களுக்கு பயணித்தோம். சில இடங்களில் நிகழ்வுகளின் வழியே சேகரித்தோம், சில இடங்களில் நண்பர்களின் துணைக்கொண்டு கதைப்பெட்டி வழியை சேகரித்தோம்.
கதை, பாடல், ஓவியங்கள், புதிர் என சிறார்களின் ஒவ்வொரு படைப்பிலும் இயற்கை மீதான அக்கறையும் கவனிப்பும் நிறைந்து இருந்தது. கஜா புயல் அனுபவங்கள், எலி-பூனை விளையாட்டு, சின்ன தம்பி யானை, பரிசு தரும் சூரியன், கழுகு ராஜாவுக்கு சட்டை தைக்கும் தையல் சிட்டு என விதவிதமான படைப்புகள் இந்த இதழை அலங்கரித்திருக்கிறது. குறிப்பாக யானை வழித்தடங்கள் குறித்த பிரச்சனைகளை ஓர் புதிராக மாற்றி எளிமையாக கொடுத்திருக்கிறோம். அதேப் போல “எலி-பூனை” விளையாட்டையும் அறிமுகம் செய்திருக்கிறோம்.
இம்முறை ஓவியங்களை ஓவியர்கள் ராகவி, கார்த்திகா மற்றும் செளமியா அவர்கள் வரைந்திருக்கிறார்கள். சின்னத்தம்பி புதிருக்கான ஓவியத்தினை ஓவியர் செளமியா மிக நேர்த்தியாக செய்திருக்கிறார், அதேப் போல நாயின் மகிழ்ச்சி & காக்கை பாடலுக்கான ஓவியங்களை கார்த்திகா அழகாக செய்துள்ளார். கஜா புயலுக்கான ஓவியத்தை சுட்டி இஷானி செய்துள்ளார். மற்ற ஓவியங்கள் அனைத்தும் ராகவி செய்துள்ளார். ராகவியின் ஓவியங்கள் இதழுக்கு புதிய வடிவத்தினை கொடுத்திருக்கிறது. அனைத்து ஓவியருக்கும் நன்றிகள்.
பஞ்சு மிட்டாய் இதழை உங்கள் நண்பர் வட்டத்தில் அறிமுகம் செய்யும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பஞ்சுமிட்டாய் 102ஆம் நிகழ்வு: இதழை சந்தாதாரர்களுக்கு அனுப்பிய கையோடு சிறிய நிகழ்வின் வழியே இதழை நவம்பர் 10ஆம் தேதி வெளியிட்டோம். எங்களு பகுதி சிறார்களுடன் மீண்டும் இணைந்து ஊர் நிகழ்வு. உள்ளே வந்ததுமே எலி-பூனை விளையாட்டு ஆட வேண்டும் என்று கேட்டுக்கொன்டே இருந்தார்கள். சிறிய உரையாடல்களுடன் துவங்கி பின்னர் சின்ன சின்ன விளையாட்டுகள் என நிகழ்வு சென்றது. நடுவே கதை சொல்லலும், பாடலும். நிகழ்விற்கு நண்பர்கள் முனிராஜ் & சிவசங்கர் அவர்களும் வந்திருந்தார்கள். அவர்களுடன் கதைகள் பேசி புது விளையாட்டுகள் என நிகழ்வும் 2 மணி நேரம் சென்றது.
நண்பர் முனிராஜ் கோட்டானும் கோழியும் விளையாட்டை அறிமுகம் செய்தார் கூடவே ஆட்டோ விளையாடும். இங்கும் அங்குமாக சிறுவர்கள் ஓடி விளையாடி பின்னர் சிவசங்கர் கதையுடன் தொடர்ந்தது. சிவசங்கர் கட்டைவிரல் குள்ளன் கதையை அழகாக சொன்னார். சிரிப்பொலிகள் சிதறின. இறுதியாக குழந்தைகள் விருப்பத்தின் பெயரில் நேரம் இல்லாத போதும் எலி பூனை விளையாட்டு ஆட்டிவிட்டு தான் நிகழ்வினை முடித்தோம்.
விளையாட்டுடன் பஞ்சு மிட்டாய் 9ஆம் இதழும் வெளியிடப்பட்டது. குழந்தைகள் வெளியிட நண்பர்கள் முனிராஜ் மற்றும் சிவசங்கர் பெற்றுக்கொண்டனர்.
பஞ்சு மிட்டாய் சந்தா விபரங்கள் :
சந்தா விபரம் : 10 இதழ்கள் – ரூ.500/- (தனி இதழ் : ரூ.50/-)
இதழ் சாதாரண தபாலில்(normal post – stamp) அனுப்பி வைக்கப்படும். சாதாரண தபாலை பெறுவதில் பலருக்கு சிக்கல் இருக்கிறது. ஆதலால் பதிவு தபாலில் அனுப்பி வைக்கவும் தயாராக இருக்கிறோம். அதற்கான செலவை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பதிவு தபால் செலவு பகிர்வு (10 இதழ் சந்தாவிற்கு) – ரூ.120/-
வங்கி விபரங்களுக்கு (Mobile/Watsapp) பிரபு – 9731736363
இணையத்தில் நேரடியாக வாங்க :
பஞ்சு மிட்டாய் வெளியீடுகள்:
பஞ்சு மிட்டாய் புத்தகங்களை உங்கள் பகுதி சிறார்களுக்கு பரிசளியுங்கள். எங்களது முந்தைய இதழ்கள் மற்றும் இதர வெளியீடுகள். மொத்தம் 5 புத்தகங்கள் ரூ.230/ -. நீங்கள் சொல்லும் முகவரிக்கு உங்கள் வாழ்த்துக்களுடன் நாங்கள் அனுப்பிவைக்கிறோம்.