கல்விக் கொள்கை கலந்துரையாடல் பதிவுகள் – உமா (பகுதி 02/02)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

10. பூபாலன்

பட்டதாரி ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவரான இவர், இக் கல்விக் கொள்கையில் ஆசிரியர் நியமனம் பற்றிக் குறிப்பிடவே இல்லை, முன்னால் மாணவர் அமைப்பு பற்றி தொடர்ந்து எல்லாப் பகுதிகளிலும் குறிப்பிட்டுள்ளனர். விளையாட்டுத்துறை குறித்து எந்த கவனமும் எடுக்கப்படவில்லை இந்த தேசியக் கல்விக் கொள்கையில், ஆகவே இதை நிராகரிக்க வேண்டும் என்கிறார் .

11. மாணவர் அமைப்பு நிரூபன்

இந்த தேசியக் கல்விக் கொள்கையில் மாணவர் குறித்து எந்தப் பார்வையும் இல்லை என்பது தெளிவாகிறது. மாநிலக் கல்வியுரிமை பறிக்கப்படுவதோடு மாணவர் உரிமையைப் பறித்து வாழ்வியலையும் பறித்துள்ளது. இரு மொழி மட்டுமே போதும் என்பதை வலியுறுத்துவதோடு இந்த எதிர்ப்பைப் பதிவு செய்ய இக் கல்விக் கொள்கை வரைவை எரிக்கும் போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளோம் என்கிறார்.

12. விழியன்

484 பக்கங்களில் 150 பக்கத்தை வெட்டி எடுத்து விடலாம். 22 பக்கங்களுக்கு கஸ்தூரி ரங்கன் பற்றிய அறிமுகமே உள்ளது. 1992 க்குப் பிறகு குழந்தைகளுக்கான ஒரு ஆய்வு என்பதே இல்லை, சமீபத்திய ஆய்வு எதுவுமில்லை , 92க்குப் பிறகு ஏறக்குறைய 28 வருடங்கள் குழந்தைகளின் மனப்போக்கு மாறியிருக்கலாம்.

கொள்கை முழுவதும் Fantasy ஆக இருக்கு, இதை நாம் தமிழகம் முழுவதும் ஒரு Social Talk ஆக முன்னெடுக்கலாம். தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு மட்டுமே எதிர்ப்பு காட்டுகின்றனர், வெறும் ஒற்றை எதிர்ப்பாக இருக்கக் கூடாது. முழுவதும் எதிர்க்க வேண்டும் என்கிறார் குழந்தைகளுக்காக எழுதும் விழியன். அதோடு இவ்வரைவை தமிழில் மொழி பெயர்த்த அனுபவம் குறித்தும் பகிர்கிறார்.

13. உமா ( ஆசிரியர், A3 அமைப்பு ஒருங்கிணைப்பாளர்)

ரொம்ப மகிழ்ச்சி , புதிய கல்விக் கொள்கை பற்றி இவ்வளவு பேர் உரையாடுவது. ஆனால் எதார்த்தத்தில் ஒரு ஆசிரியராக நான் சில விஷயங்களைச் சொல்லணும் , இது ஓவ்யா அவர்கள் கூறுவது போல முற்றிலும் அரசியலாகப் பார்க்க வேண்டும் என்பதை நான் ஏற்கிறேன் ,

முதலில் தேசியக் கல்விக் கொள்கை என்ற ஒன்று தேவையே இல்லை, ஒவ்வொரு குழந்தையும் தனித்தனி திறன்களைப் பெற்றிருக்கும், எல்லோருக்கும் எப்படி ஒரே கல்விக் கொள்கை பொருந்தும்? என் பள்ளி குழந்தையின் சூழல் வேறு, வட இந்தியக் குழந்தையின் வாழ்வியல் சூழல் வேறு, தென்னிந்தியாவிலேயே சென்னை குழந்தையின் வாழ்வியல் வேறாகவும், நீலகிரி மாவட்டக் குழந்தையின் வாழ்வியல், திறன் வேறாகவும் இருக்கும் எனில்….. கல்வி மாநிலத்திற்கு ஒரு கல்விக் கொள்கை, உள்ளூர் வளங்கள் சார்ந்து அமைய வேண்டும் .

இக்கல்விக் கொள்கையில் ஒரு புதிய சிந்தனையை முன் வைக்கிறார்கள், அது Modular approach எனில் , தேர்வானது பாடப்புத்தகங்களை மையப்படுத்தாமல் குறிப்பிட்ட பாடங்களை இணைத்து மாட்யூல் (கட்டகங்கள் ) தயாரிப்பு செய்து அதிலிருந்து தேர்விற்கு முக்கியத்துவம் தரப்படும் என்பதாக, எனில் கற்பித்தலே நடக்க வாய்ப்பில்லாமல், டீச்சிங் போய் கோச்சிங் என, கோச்சிங் சென்ட்டர்ஸ் அதிகமாகவே இக்கல்விக் கொள்கை நம்மை திரும்ப அழைத்துச் செல்கிறது, அப்போது கோடிக்கணக்கான பணம் செலவழித்து தயாரிக்கும் பாடப்புத்தகங்கள் எதற்கு? இதன் பின் இருக்கும் அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதோடு மும்மொழி குறித்தும் சிந்திக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்கனவே ஆங்கில வழி எனக் கூறி அரசுப் பள்ளிகள் எல்லாம் தாய் மொழி வழிக் கல்வியை இழந்து, குழந்தைகள் தமிழ், ஆங்கிலம் என இரு மொழியிலும் ஒன்றும் அறியாதவராக மாறிவரும் குழலில் கல்வி அழிந்து வருகிறது. 5 ஆம் வகுப்பு வரைதாய் மொழி வழி படித்த குழந்தைகளை அவர்கள் பெற்றோர்கள் 6 ஆம் வகுப்பில் ஆங்கில வழியில் சேர்த்து விட, காரணம் கேட்டால், மிஸ் காலேஜ் எல்லாம் போனா, இங்லீஷ்ல தான் பரீட்சை வருது என அப்பா சொல்லி இங்கே சேர்த்து விட்டார் மிஸ் என்று குழந்தைகள்பரிதாபமாகக் கூறுகின்ற சூழல். ஆங்கிலமே சரியாக சொல்லிக் கொடுக்க ஆசிரியர்களும் நியமிக்காமல் இருக்கும் நிலையில் மூன்றாவது மொழி இதெல்லாம் உதவாதுங்க .

14. ராஜூ – புதிய ஆசிரியன் நூலாசிரியர்

ஒரு கருத்துப் போராட்டத்தை இந்த அறிக்கையின் மீது மக்களிடையே முன்னெடுக்க மக்களைத் திரட்ட வேண்டும். , இது குறித்து விவாவதங்கள் ஆங்காங்கே நடைபெற கருத்துகளைத் தொகுக்க வேண்டும்.

15. பிரின்ஸ் கஜேந்திர பாபு

கல்வி என்பது பண்பாட்டுக் கூறு, இந்தியா பண்பாட்டுக் கூறுகளால் நிரம்பியது. இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருக்கிறது, குறிப்பாக ஆர்டிகிள் 14, 21, 23, 24 இவற்றைப் பற்றி விவாதம் பண்ணியிருக்கிறதா ? Abolising Child labouring – need right to equility.. இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுவது எதுவுமே இந்த NEP 2019 இல் இல்லை. 1927 இல் அம்பேத்கர் பிரிட்டிஷ்க்கு எழுதிய கடிதத்தில் என் மக்களுக்கு உயர் கல்வி அறிவியல், கணிதம் வேண்டும் என்றார். 9-12 வகுப்பு குழந்தைகளுக்கு 8 செமஸ்டர்கள், அதை அவர்கள் எப்போது வேண்டுமானாலும் எழுதலாம், ஆனால் இந்தப் படிப்பு கல்லூரிக்கு தகுதி கிடையாது ?

9 – 14 வயதில் என்ன புரிதல் வந்து விடப் போகிறது? எப்படி அந்த வயதில் தேர்ந்தெடுக்க இயலும் ? ஒற்றை ஆட்சியைத் தாண்டிச் செல்கிறது. காட்ஸ் ஒப்பந்தம் (443 பக்கம் ) படித்திருந்தால் இதில் இருக்கும் டெர்ம்ஸ் புரியும். தலித் பார்வையில் இக் கல்விக் கொள்கை அறிக்கையைப் பார்க்க வேண்டும் , இதில் Teacher Education குறித்து பேசும் போது மட்டும் தான் SC / ST/0BC என்று பேசப்படுகிறது. கல்வி உதவித் தொகை இல்லை , ரிஸர்வேஷன் இல்லை, It’s only talk about Merit , ONLINE COACHING பற்றி தான் பேசுது. கல்லூரிக்கு 1, 2, 3, 4 என கிரேடு கொடுத்து இருக்காங்க, சிங்கிள் காலேஜ் சிஸ்டம் தான். இப்போது ஆசிரியர்கள் SGT, B.Ed ,M.SC என தங்கள் வசதிக்கேற்ப படித்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றுகின்றனர். எல்லா ஆசிரியரும் 4 வருஷம் படிக்கணும் என்றால் என்ன அர்த்தம் ? யார் சிறிய வகுப்புகளுக்கு கற்பிக்கப் போவாங்க ? (மழலையர் கல்வி ) LKG UKG க்கே முறையான கல்வி எனில் என்ன அநியாயம் ?

பள்ளிக் கல்வி , உயர் கல்வி இரண்டையும் Demolish பண்றாங்க. அம்பேத்கர் பார்வையிலிருந்து இது சமூக நீதிக்கு எதிரானது.

Leave a comment