கல்விக் கொள்கை கலந்துரையாடல் பதிவுகள் – உமா (பகுதி 01/02)

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தேசியக் கல்விக் கொள்கை வரைவு குறித்து தொடர்ந்து பல கலந்துரையாடல்கள் நடந்துக்கொண்டிருந்தது. அதில் தமுஎகச ஏற்பாடு செய்த உரையாடல் குறித்த சிலப் பதிவுகள்

1. Dr.Vasanthi Devi: 

கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும். மும்மொழி மட்டுமல்ல, முழுவதுமே எதிராக உள்ளது. இந்தியாவின் கல்வி அமைப்பு ஏற்றத்தாழ்வு மிக்க கல்வி அமைப்பு, ஜாதிய அடிப்படையில் அமைக்கப்பட்ட கல்வி அமைப்பு இது. நீட்டை எதிர்த்தோம் ஆனால் இப்போது நம் குழந்தைகள் எழுதி தான் வருகின்றனர். இந்தக் கல்விக் கொள்கையின்படி பள்ளிப் பாடங்களுக்கு எந்த மதிப்புமே இல்லை, பயிற்சி மையங்களே பிரதானமாக வளரக்கூடிய நிலை. இந்தி எதிர்ப்பு மட்டும் போதாது , முழுமையாகவே எதிர்க்க வேண்டும் .

2. Aruna Rathnam (ஓய்வு பெற்ற பெற்ற UNICEF Education officer)

இந்த வரைவுக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ளவை அனைத்தும் நிதி ஒதுக்கீட்டுடன் இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். பெரும்பாலான யுக்திகள் கேரளாவில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. அங்கு அரசுப் பள்ளிகள் மக்கள் பள்ளிகளாகப் பார்க்கப்படுகிறது , எம்.எல் .ஏ தொகுதி நிதியைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் அந்த நிலை இல்லை. நாம் எவ்வளவு முயற்சி செய்து இதை எதிர்த்தாலும் பாராளுமன்றம் கூடி ,செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து விடும். மிக மிக கவனமாக, இந்த கல்விக் கொள்கை படிக்கப்பட வேண்டும். மிகப் பெரிய சாணக்யத்தனத்துடன் எழுதப்பட்டுள்ளது. கள அளவில் பள்ளிக்கூடங்களின் ஆசிரியர்கள் , பெற்றோர்கள் மற்றுமுள்ள மனிதர்களைத் தயார் செய்ய வேண்டும். இதில் நிறைய டேக்டிஸ் கையாண்டு இருக்காங்க , நாம் இப்போ மும்மொழிக் கல்விக்காக எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு தெரிவிச்சுட்டு இருக்கோம் , அது ஒரு ஏமாத்து வேலை , திசை திருப்பும் வழி என்பதாக பல்லி வால் – பூனை கதையைக் கூறினார் ,

மூன்றாவது மொழி என்பதில் நாம் இது தான் என்று கட்டாயமாக்குவதை ஏற்காமல் வேறு சில option (உ. ம் . சைகை மொழி ) கேட்கலாம். ஆனால் மொழி மட்டிற்குமான எதிர்ப்பு போதாது. பள்ளி சமுதாய அளவில் கைகோர்க்க வேண்டும் எனவும் இன்னும் சில விஷங்களையும் அருணாமா பகிர்ந்தார்.

3. பேராசிரியர் ச. மாடசாமி

எனக்கு எப்போதும் Curriculum தான் ஆர்வம், அது பற்றி மட்டும் இங்கு பகிர்கிறேன். இரண்டு விஷயங்களைக் கூறுகிறார்கள் , Multilingual skills & Rich traditions of India….இதில் மொழியை , சமஸ்கிருதத்தை முக்கியப்படுத்தறாங்கன்னு நல்லாத் தெரியுது. கணக்குப் பாடத்தில் கூட ஸ்லோகன் மனப்பாடம் செய்வது குறித்து பேசப்படுது. எல்லாப் பாடங்களிலும் சமஸ்கிருத மொழியையே கொண்டு வர முயற்சிப்பது போல இருக்கு இது . Ethics நிறைய நீதிக் கதைகள் கொண்டு வர பேசப்படுது இந்தக் கல்விக் கொள்கையில் , ஏற்கனவே இது பற்றி ஆசிரியர்களுக்கு புரிதலில்லாத நம்பிக்கை இருக்கு , நீதிக் கதைகள் என்று சொல்லப்படுவது எல்லாம் பஞ்ச தந்திரக் கதைகள் உள்ளிட்ட பல கதைகளே, அங்கே ஏமாற்றுதல் தானே கதையில் சொல்லப்படுகிறது.

பாடத்திட்டம் , பாடநூல் தயாரிப்பு அனைத்தும் NCERT செய்து விடுவதாகவும் சில மாற்றங்களை அந்தந்த மாநில SCERT செய்து கொள்வதும் என்பதாகத் தரப்பட்டுள்ளது , காந்தி , அம்பேத்கர் பற்றி மட்டும் குறிப்பிட்டு மற்றவர்கள் பாடங்களில் சேர்ப்பது பற்றி சூசகமாகக் கூறப்படுகிறது.பள்ளிகளுக்குள் ஒரு சாரரைத் தன்னார்வலர்களாகக்
கொண்டு வந்து விடும் சூழல் உள்ளது. ஆகவே Aruna Rathnam சொல்வது போல நாம் Work force ஐ தயாரிக்க வேண்டும். சமூகம் , பள்ளி இரண்டும் இணைய வேண்டும் ,TNSF அறிவொளி போன்ற இயக்கங்கள் இதோடு இணைய வேண்டும். இதில் 8 பகுதிகள் உள்ளன , எல்லாவற்றிலும் எல்லோருக்கும் ஆர்வம் இருக்காது , எல்லோராலும் எல்லாவற்றையும் வாசிக்கவும் முடியாது ஒவ்வொரு தலைப்பும் ஒரு குழுவாகப் பிரிந்து கலந்துரையாடல் தொடர வேண்டும் என்று மாடசாமி தனது கருத்துகளைப் பதிவு செய்தார்.

4. அருணன் எழுத்தாளர் பேராசிரியர்

தொடக்கக் கல்வி , உயர் கல்வி என மிகப் பெரிய கல்விக்் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது , ஒரு சில விஷயங்கள் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்திில் இருக்கிறோம். இரண்டு விஷயங்களை மட்டும் குறிப்பிடுகிறேன். முதலில் , மும்மொழித் திட்டம் ஏன்? இரு மொழித் திட்டமே போதும் . மும்மொழி என்றால் நிச்சயமாகப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதோடு , பள்ளிக் கல்வியில் LKG என்பதை ஆதரிக்க வேண்டிய சூழலில் தான் இருக்கிறோம் , இப்போது நமது அரசாங்கமே இவற்றைப் பள்ளிகளில் துவங்கி விட்டது .CBSE இல் 3 , 4 மொழி இருக்கே என்கின்றனர் , அங்கும் 2 மொழியே போதும் என்கிறார் அருணன் .

5. ஆழி.செந்தில்நாதன்

இரண்டு இணைப்போக்கான பார்வை வேண்டும் ,முதலில் இது ஒற்றை அறிக்கையாக இருப்பதால் நிராகரிக்கப்பது அவசியம். மத்திய அரசு கூட இல்லை, இது முழுமையான ஒற்றையாட்சியாக உள்ளது , கார்ப்பரேட் வளர கோச்சிங் சென்டர் அதிகமாகிடவே இக்கல்விக் கொள்கை வழி வகுக்கும். வட இந்தியாவில் இருந்து எதிர்ப்பே வராது, உலகம் முழுவதிலும் இதே போன்று கல்விக் கொள்கை கொண்டு வந்த நாடுகளில் 40% வேலைகள் இல்லாமல் போயிற்று , அதையே இங்கும் கொண்டு வரத் திட்டமிடுகின்றனர். கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற வேண்டும். இது எங்களுக்கு வேண்டாம். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை வகுப்பதை விட்டு வேதத்தைக் கொண்டு வந்துள்ளனர் என்பதாகப் பேசினார்.

6. பேரா.கருணாநந்தம் :

இந்தக் கல்விக் கொள்கைக்குள் சீர்திருத்தம் என்று எடுத்துச் சென்றால் அது தற்கொலைக்குச் சமம். Multilingual – Role of Man என்பது மிகப் பெரிய ஏமாற்று வித்தை, மாநிலத்தை ஒதுக்கி வைக்கிறது. Reform என்ற பெயரில் கொண்டு வருவது எல்லாமே bureaucratic தான், இது ஒரு தேசிய சதி, modern education எனக் கூறி விட்டு, நாளந்தா, புத்திஷ்டுகள் பற்றி மாதிரிகளாகக் கூறுவது எப்படி சரியாக இருக்கும் ? இதை compromising tone இல் ஏற்கவே கூடாது. No என்று தான் சொல்ல வேண்டும் என்கிறார்.

7. Dr .அனுரத்னா

ஒரு மருத்துவராக , உயர் கல்வி குறித்து எனது கருத்தைப் பதிவு செய்கிறான் , NEET போல எல்லா இடங்களிலும் தேர்வு என்பது ஏற்றுக் கொள்ள முடியாது , பொதுத் தேர்வு என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்கிறார்.

8. ஓவ்யா

நீட்டுக்குப் போராட்டமாக என்ன செய்தோம் ?

சாதியக் கல்வி முறை இருக்கு என்பதை நாம் மக்களுக்குள் கொண்டு வர வேண்டும். சமூக நீதி இயக்கங்கள் இருக்கிறதா நாடு முழுவதும் ? இது கல்வியாளர்களது பிரச்சனை இல்லை , அரசியல்வாதிகள் இணைய வேண்டும். அவர்களைத் தேர்ந்தெடுத்துப் போராட வைக்க வேண்டும். நாடு முழுவதும் ஒரே கல்விக் கொள்கை என்பது ஃபிராடுதான். மாநிலக் கல்வித் திட்டத்தை கல்வியாளர்கள் செய்யலாம், ஆனால் மக்களிடம் இதை நாம் எடுத்துச் செல்வது நாமாக இருக்க வேண்டும் , குலக்கல்வி பிரச்சனை வந்த போது பெரியார் பொதுமக்களிடம் எடுத்துச் சென்றதைப் போல இதை மக்களிடம் தான் எடுத்துச் செல்ல வேண்டும் , தமிழ்நாடு மறுக்கும் , எதிர்க்கும் இந்தக் கல்விக் கொள்கையை ஏற்காது என்பதை .. என சமூக செயல்பாட்டாளரும் எழுத்தாளருமான ஓவ்யா பதிவு செய்கிறார்

9. Krishnamoorthy Jayaraman கல்வியாளர் , பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம்

கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஓவ்யா அவர்கள் சொல்வது போல பெரியார் குலக்கல்வி முறையை எதிர்க்க மக்களிடம் எடுத்துச் சென்றதைப் போல , இக்கொள்கை குறித்து கல்வியாளர்கள் தரப்பில் உரையாடல் நிகழலாம் , மற்றொரு புறம் பல அமைப்புகளைத் திரட்டி ஒரு மக்கள் போராட்டம் முன்னெடுக்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள படி பள்ளி மேலாண்மைக் குழுக்களிடம் , கிராமப் பஞ்சாயத்துகளில் மக்களைத் திரட்டுதல் இப்படி நாம் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச் சென்றால் தான் இக் கல்விக் கொள்கை குறித்த புரிதலும் , போராட்டம் குறித்த புரிதலும் மக்களிடம் ஏற்படும் என்கிறார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும் , பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்க மாநிலச் செயலாளருமான கல்வி செயல்பாட்டாளர் கிருஷ்ணமூர்த்தி.

தொடரும்…

Leave a comment