உயிர் காட்டுயிர்களைத் தேடி…இதழ் அறிமுகம் – சண்முகானந்தம்

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்

உயிர் இருமாத இதழ்- காட்டுயிர், சூழலியலுக்கான தமிழின் முழுமையான முழுவண்ண இருமாத இதழ். வெப்ப மண்டல நாடான இந்தியா, பல்வேறு தட்ப வெப்ப நிலப்பரப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது. பனிப்படர்ந்த வட கிழக்கு மாநிலங்கள், இதமான குளிர் நிறைந்த தென்னிந்தியப் பகுதிகள், வறண்ட நிலப்பரப்பு கொண்ட வட இந்தியப் பகுதிகள் எனப் பல்வேறு நிலப்பரப்புகளை இந்தியா கொண்டுள்ளது. 

இலையுதிர்க் காடுகள், பசுமை மாறாக் காடுகள், மழைக்காடுகள், புல்வெளிக் காடுகள், நதியோரக் காடுகள், மூங்கில் காடுகள், அலையாத்திக் காடுகள், சதுப்பு நிலங்கள், ஈர நிலங்கள் எனப் பல வகையான காடுகளையும், எண்ணற்ற நீர்நிலைகள், அருவிகளையும் கொண்டுள்ளது. எல்லையற்ற இயற்கை வளங்கள் நாடு முழுவதும் பரவியுள்ளது. இத்தகைய இயற்கை வளங்களைச் சார்ந்து 1300-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், பெரும் பூனைகள், பாலூட்டிகள், 250-க்கும் மேற்பட்ட பாம்பு வகைகள், 1500-க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி வகைகள்,இருவாழ்விகள், கடல் வாழ் உயிரினங்கள், ஊர்வன வகைகள், கொறி உயிரினங்கள், பூச்சியினங்கள், நுண்ணுயிரிகள் என சூழலமைவிற்கேற்ப உயிரின வகைமை பரவியுள்ளது. இந்திய நிலப்பரப்பிற்கே உரித்தான ஓரிட வாழ்விகளும் (Endemic Species) பரிணமித்துள்ளன. இவை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படக்கூடிய சோலைமந்திகள், வரையாடுகள், வெளிமான்கள், இமயமலைப் பகுதிகளில் மட்டும் காணப்படக்கூடிய யாக் போன்ற சிறப்பு உயிரினங்களும் காணப்படுகின்றன.

காடுகள், நீர்நிலைகள், சதுப்புநிலங்கள் என இயற்கை வளங்களை வாழ்விடங்களாக கொண்டுள்ள உயிரினங்களைக் காக்க, பறவைகள் காப்பிடங்கள், உயிரினக் காப்பிடங்கள்,தேசியப் பூங்காக்கள், கடல்வாழ் தேசியப் பூங்காகள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட காப்பிடங்கள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளன.

இத்தகைய விரிந்த இயற்கையையும், காட்டுயிர்கள், காப்பிடங்கள் குறித்து அறிவியல்பூர்வமாக ‘உயிர்’ (காட்டுயிர்களைத் தேடி…) இதழ் பேச தொடங்கியுள்ளது. துறை சார்ந்த ஆய்வாளர்களின் கட்டுரைகள், காட்டுயிர் ஒளிப்படக்கலைஞர்களின் அரிய ஒளிப்படங்கள் மற்றும் ஒளிப்படக்கதைகள் வழியே இம்முயற்சி முன்னெக்கப்படுகிறது.இம்முயற்சிக்கு தங்களது பங்களிப்பையும், ஆதரவையும், ‘உயிர்’ இதழ் எதிர்நோக்கியுள்ளது.

சந்தா விபரம்:

தனி இதழ் : ரூ.60/-
ஓராண்டு சந்தா: ரூ.300/-
ஈராண்டு சந்தா: ரூ. 500/-

தொடர்புக்கு:

uyirpublication@gmail.com / 9940404363

வங்கிக் கணக்கு :
Uyir Publications,
Axis Bank,
Account No: 918020003499708,
IFS Code: UTIB0001619,
Thiruvottriyur, Chennai – 600 019.

பஞ்சு மிட்டாய் இணையத்தின் குறிப்பு: நிகழ்வுகள், செயற்பாட்டாளர்கள், இதழ் , இலக்கியம் , பதிப்பகங்கள், புத்தக கடைகள் சார்ந்த அறிமுகங்கள் அனைத்துமே தகவல்கள் அனைவருக்கும் சேர வேண்டுமென்ற நோக்கத்திலே பகிரப்படுகிறது. இதழ் சந்தாக்கள் , நிகழ்வு கட்டணங்கள் மற்றும் விற்பனைகள் அனைத்தும் வாசகர்களின் சொந்த முடிவே. பஞ்சு மிட்டாய் இதழ்,நிகழ்வுகள்,புத்தகங்கள் தவிர மற்ற எந்தவித குழு/இதழ்/பதிப்பகங்கள்/நிகழ்வுகள்/விற்பனையங்களுக்கு பஞ்சு மிட்டாய் இணையதளமோ அல்லது பஞ்சு மிட்டாய் நண்பர்களோ பொறுப்பேற்க இயலாது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave a comment