சிலம்பாட்டம் – வேல் முருகன்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

சிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் பொது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாகச் சொல்லப்படுகிறது.

“சிலம்பம்’ என்ற சொல் “சிலம்பல்’ என்ற வினையின் அடியாகப் பிறந்தது. மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, விலங்குகளின் இரைச்சல் போன்ற பல ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, “சிலம்பம்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. எனவே, மலை நிலக் (குறிஞ்சி) கடவுளான முருகனுக்கும், “சிலம்பன்’ என்ற பெயருண்டு.

ஆதிமனிதன் மலைகளிலும் காடுகளிலும் அதிகம் வசிப்பதால் அங்கு எழும் ஓசைகள் போன்று கம்பு சுற்றும் போதும் ஓசையுடன் கூடிய தற்காப்பு என்பதால் மலையின் பெயரே சிலம்பம் என்றும் கம்பு சூத்திரம், கம்புபாடம், கம்பாட்டம், சிலம்பாட்டம் என்றானது.

ஆயக்கலைகள் 64 என்பர். அதில் முதன்மையானது தற்காப்பு கலை (போர் கலை). தற்காப்பு கலையில் தாய்மையானது சிலம்பக்கலை. முதன் முதலில் காட்டில் வாழ்ந்த ஆதிமனிதன் தன்னை காத்துக் கொள்வதே போராட்டமாக இருந்தது. தற்காப்பு அவசியமானதாக‌ இருந்தது. விலங்குகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் தனக்கு ஒரு துணையாகவும் ஆயுதங்களை ஆதிமனிதர்கள் கையில் எடுத்தனர்.

முதலில் ஆயுதங்களாக இறந்துப் போன விலங்குகளின் எலும்புகளை எடுத்தனர். ஆனால் அது எளிதில் உடைந்து போனது. பின்னர் கற்களை எடுதனர். இவை இரண்டையும் விட மிகவும் பெரிதாக உதவியது மரக்கம்புகள் ( மூங்கிலை). நீண்ட தூரத்திலிருக்கும் எதிரிகளிடமிருந்து பாதுக்காத்துக்கொள்ள மரக்கம்புகளே சரியானதாக இருந்தது. அந்த கம்பைவைத்து தான் விலங்குகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள கம்பு சூத்திரத்தைப் பயன்படுத்தினர். எனவேதான் முதல்கலை கம்புச்சூத்திரம் (சிலம்பக்கலை) தோற்றம் பெற்றது.

அதனால்தான் இன்றும் நமக்கு ஆபத்து வரும்போது பயத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு முதலில் கற்களையும் கம்புகளையும் கையிலெடுக்கிறோம். உணவுக்காகவும் உறைவிடத்திற்காகவும் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் ஆயுதங்களைப் பயன்படுத்தி அதன் மூலம் தோன்றிய தற்காப்பு கலை போர்கலை காலத்திற்கு ஏற்றார் போன்று மனிதனின் நவீன மாற்றத்திற்கும் ஏற்றார் போன்றும் இன்று மாற்றம் பெற்றிருக்கிறது .

பொதிகை மலையில் 300 ஆண்டுகளுக்கு முன் அகத்தியர் கம்புசூத்திரம் சிலம்பத்தை பற்றி கூறுகிறது. சிலம்பம் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். இதில் கம்புகளைக் கொண்டு ஒலியெழுப்பி விளையாடுவர். இக்கலையைப் பயிற்றுவிக்கும் செயலைக் ”களிரிப்பயிற்று என்று கூறுவர். சிலம்பக் கலை பற்றிய அகழ்வாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மையானவை. கி.மு.2000க் கும் முற்பட்ட ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கம்பினைப் பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் தமிழகத்தில் இருந்து எகிப்துக்கு கலாச்சாரப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பக்கலையும் பரவியதாக கருதப்படுகிறது.

சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன. தெக்கன் சுவடு, வடக்கன் சுவடு, பொன்னுச் சுவடு, தேங்காய் சுவடு, ஒத்தச் சுவடு, குதிரைச்சுவடு, கருப்பட்டிச் சுவடு , முக்கோணச் சுவடு , வட்டச் சுவடு , பிச்சைச் சுவடு, சத்தியைச் சுவடு , கள்ளர் விளையாட்டு , சக்கரை கிண்டி, கிளவி வரிசை , சித்திரச் சிலம்பம் , கதம்ப வரிசை , கருநாடகச்சுவடு, கம்புச்சூத்திரத்தின் வரிசைகள் ஆகும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை இந்த பகுதிகளில் தான் அதிகமாக காணப்பட்டது. கடற்கரை ஓரங்களில் பயிற்சிக் களமாக இருந்திருக்கிறது. ஏன் என்றால் ஆற்றுப்படுகைகளில் காலடி எடுத்து வைக்க எளிமையாக இருந்திருக்கிறது அடிபடாமல் தாவி குதித்து விளையாடும்போது அடிபடாமலும் இருக்கும் என்பதால் காலடிமுறை, கம்புவீசும் திறன், வேகம் இம்மூன்றுமே அடிப்படைகளாகும்.

சிலம்பம் சுத்துவதால் உடலின் ஏழு சக்கரங்கள் சக்கரங்களை இயக்குகிறது. நாம் வெளித்தோற்றத்தில் கண் பார்க்கிறது காலடி எடுத்து வைக்கிறது கை சுழற்றுகிறது என்பது நாம் வெளித்தோற்றத்தில் பார்த்து தெரிந்து கொள்கிறோம். ஆனால் உண்மையாக கம்பு சுற்றும்போது ஏழு சக்கரங்களை இந்தகலை இயக்குகிறது.மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, அஞ்ஞான, துரியச் சக்கரம் போன்றவைகளை இயக்குகிறது.

மேலும் சிலம்பம் பற்றி அடுத்தப் பதிவில் பார்க்கலாம்…

Leave a comment