புத்தகப் பட்டியல் – 08

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

42வது சென்னை புத்தகக் காட்சி 20ம் தேதியுடன் (ஞாயிறு) முடிவடைகிறது. நமது புத்தகப் பட்டியலும் அன்றுடன் முடிகிறது. முடிந்தவரை பல நண்பர்களுடன் உரையாடி பட்டியலைத் தயாரித்தோம். ஏற்கனவே அறிமுகமான புத்தகங்களை தவிர்த்துவிட்டு புதிய புத்தகங்களை அறிமுகம் செய்ய வலியுறுத்தினோம். நண்பர்களும் அதற்கேற்ப பட்டியலை தயாரித்துக் கொடுத்தனர். இந்தத் தருணத்தில் பதிவுகளை கொடுத்த நண்பர்களுக்கும், பட்டியலின் முக்கியத்துவத்தை உணர்த்திய வாசக நண்பர்களுக்கும் ‘பஞ்சு மிட்டாய்’ இணையத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இதோ நமது எட்டாவது பதிவு..

சூழலியல் சார்ந்து வாசிக்க வேண்டிய நூல்கள் – ஆற்றல் ப்ரவீன் குமார்

01. மயிலு – கோவை சதாசிவம் – குறிஞ்சி பதிப்பகம். – வகுப்பறையில் எழுந்த 100 கேள்விகளுக்கான பதில்கள்
02. காடு பெருசா அழகா இருந்துச்சு – யாழினி இயல்வாகை பதிப்பகம்
03. காட்டிலே கதைகள் – சிப்பி பள்ளிப்புறம் – தமிழில் எல்.பி.சாமி- பாரதி புத்தகாலயம்.
04. பல்லுயிரியம் – ச.முகமது அலி – வாசல்
05. உலகின் மிகச்சிறிய தவளை – எஸ்.ராமகிருஷ்ணன் -டிஸ்கவரி புக் பேலஸ்
06. காட்டுப் பள்ளிக்கூடம் – சிறுவர் பாடல்கள் – வெற்றிச் செழியன் – மக்கள் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை
07. வண்ணத்துப்பூச்சிகள்-ஆர்.பானுமதி- க்ரியா வெளியீடு
08. ப‌றவைகள்: அறிமுகக் கையேடு- ஆசை மற்றும் ப. ஜெகநாதன். -க்ரியா வெளியீடு
09. கடவுளின் பறவைகள் – பனுவல் – நூல் வனம் – பாலகுமார் விஜயராமன் (தமிழில்)
10. யானை டாக்டர் – ஜெய மோகன் – இயல்வாகை
11. வட்டமிடும் கழுகு – ச.முகமது அலி – தடாகம்

கல்வி சார்ந்து பெரியவர்கள் வாசிக்க வேண்டியவை – சிவகுருநாதன் சிபா

01. சிங்கம் பறந்தபோது முதலிய ஆப்பரிக்கக் கதைகள் – பிரிஜிட்டா ஜெயசீலன் – நேஷனல் புக் டிரஸ்ட்
02. எறும்பும் புறாவும் – லியோ டால்ஸ்டாய் – பாரதி புத்தகாலயம்
03. குழந்தைகளும் குட்டிகளும் – ஓ.பெரோவ்ஸ்கயா (மொ. ருக்மணி) – பாரதி புத்தகாலயம்
04. The Happy Child: Changing the Heart of Education by Steven Harrison
05. கற்க கற்பிக்க – வசிலி சுகமலீன்ஸ்கி – பாரதி புத்தகாலயம்
06. இன்றைய இந்தியக் கல்வி சவால்களும் தீர்வுகளும் – பாரதி புத்தகாலயம்
07. The Discovery of the child , The Secret of childhood – Maria Montessori
08. கல்வி சிந்தனைகள் – பெட்ரண்ட் ரஸல் – பாரதி புத்தகாலயம்
09. பிஞ்சுகள் – கி.ராஜநாராயணன் – அன்னம் பதிப்பகம்
10. நான் மலாலா – மலாலா யூசுஃப்சாய், கிறிஸ்டினா லாம்ப் – காலச்சுவடு
11. பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன் – யமுனா ராஜேந்திரன்
12. குழந்தைப் போராளி – சைனா கெய்ரெற்சி – கருப்புப் பிரதிகள்

பதின் பருவத்தினருக்கு – வே.சசிகலா உதயகுமார்

01. திருடன் மணியன்பிள்ளை – ஜி. ஆர். இந்துகோபன். தமிழில் : குளச்சல் மு. யூசுப் – காலச்சுவடு.
02. குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் – கமலா வி.முகுந்தா – தமிழில் : ராஜேந்திரன்
03. ஹிபாகுஷா : அணுகுண்டு – மரணம் -கதிர்வீச்சு ஆசிரியர் : ம . ஜெகதீஸ்வரன் . வெளியீடு : ஜெ எஸ் ஆர் பதிப்பகம்
04. சூப்பர் 30 ஆனந்த் குமார் – பிஜு மாத்யு – காலச்சுவடு
05. கெளரி லங்கேஷ் – மரணத்துள் வாழ்ந்தவர் – சந்தன் கெளடா – காலச்சுவடு
06. கம்யூனிசம் – ஓர் எளிய அறிமுகம் – இரா. பாரதிநாதன் – புலம் வெளியீடு
07. தமிழ்நாட்டு விளையாட்டுகள் – ஞா.தேவநேயப் பாவாணார்
08. வகுப்பறையின் கடைசி நாற்காலி – ம.நவீன் – புலம் வெளியீடு

Leave a comment