புத்தகப் பட்டியல் – 07

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

சிறார் இலக்கியத்தில் மொழிபெயர்ப்பு என்பது மிக முக்கியமான இடத்தினை வகிக்கிறது. ஆங்கிலம், மலையாளம், ரஷ்ய, சீன மற்றும் பிற இந்திய மொழி படைப்புகள் தமிழில் வந்த வண்ணம் இருக்கிறது. அப்படி மொழிபெயர்ப்பில் கவர்ந்தப் பட்டியலை நண்பர் நம்முடன் பகிர்ந்துள்ளார். அதேப் போல் நீண்ட நாட்களாகவே நூலக நண்பர்களின் உலகை பிரதிப்பலிக்க வேண்டுமென்று பஞ்சு மிட்டாய் முயற்சித்துக் கொண்டே இருந்தது. தற்போது நூலகத்திலிருந்தும் சிறார்களை கவர்ந்த புத்தகங்கள் என தாங்கள் கவனித்த பட்டியலை நண்பர்கள் பகிர்ந்துள்ளனர். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ரசித்த மொழிபெயர்ப்புக் கதைகள் – அ.ர.ஹபீப் இப்றாஹீம்

01. பறவையை நேசித்த மலை (The Mountain That Loved a Bird) – எலிஸ் மக்லெரன் – தமிழில்: சரவணன் (தும்பி சிறார் இதழ் – 2)
02. உயிர் தரும் மரம் (The Giving Tree) – ஷெல் சில்வர்ஸ்டீன் – தமிழில்: கொ.மா.கோ. இளங்கோ – பாரதி புத்தகாலயம் புக்ஸ் ஃபார் சில்ரன்
03. கடைசிப் பூ (The Last Flower) – ஜேம்ஸ் தர்பெர் – தமிழில்: சிறகினி, அதீதன் (தும்பி சிறார் இதழ் – 18)
04. வானவில்லின் மனது – சதீஷ்.கே.சதீஷ் – தமிழில்: யூமா வாசுகி – பாரதி புத்தகாலயம்
05. மந்திர விதைகள் (Magic Seeds) – மித்துமாசா அனோ – தமிழில்: கொ.மா.கோ. இளங்கோ – பாரதி புத்தகாலயம் புக்ஸ் ஃபார் சில்ரன்
06. ரெட் பலூன் (Red Balloon) – ஆல்பர்ட் லாமொரிஸ் – தமிழில்: கொ.மா.கோ. இளங்கோ – பாரதி புத்தகாலயம் புக்ஸ் ஃபார் சில்ரன்
07. குட்டி விதை (The Tiny Seed) – எரிக் காரல் – தமிழில்: சிறகினி, அதீதன் ( தும்பி சிறார் இதழ் – 6)

கீழுள்ள நூல்கள் பெரியவர்களுக்கான கதைகளாகவே அடையாளம் காணப்பட்டாலும், சிறார்களின் உலகையும் அழகாக்கும் தன்மைக்கொண்டவை.

08. லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை) (Life is Beautiful) ராபர்டோ பெனினி, வின்சென்சோ செராமி
தமிழில்: யுகன் – நற்றிணை பதிப்பகம்
09. விலங்குப் பண்ணை (Animal Farm) – ஜார்ஜ் ஆர்வெல் – தமிழில்: க. நா. சு. – நற்றிணை பதிப்பகம்
10. ரசவாதி (The Alchemist) – பாவ்லோ கொய்லோ – தமிழில்: நாகலட்சுமி சண்முகம் – மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்

நூலகத்தில் சிறார்கள் ரசித்தவை – செந்தில் [சிகரம் மழலையர்,இளம்சிறார் அறிவகம் , குருசாமிபாளையம்]

01. நீங்களும் விஞ்ஞானி ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? -ஆயிஷா.இரா.நடராசன்
02.  சில்லுக்கோடு-கோவை.சதாசிவம்
03.  எனக்கு ஏன் கனவு வருது?-எஸ்.ராமகிருஷ்ணன்
04.  வாத்துராஜா-விஷ்ணுபுரம் சரவணன்
05.  டாலும்,ழீயும்-விழியன்
06.  யானை டாக்டர்-ஜெயமோகன்
07.  பஞ்சுமிட்டாய்-ஆகஸ்டு இதழ்
08.  றெக்கை
09.  லிட்டுவின் நூல்கண்டு-பூவிதழ் உமேஷ்
10.  சிறுத்தை குட்டியின் கேள்விகள்-கே.பாப்புட்டி-தமிழில் அம்பிகா நடராஜன்
11.  துளிர்
12.  எண்களின் கதை-த.வி.வெங்கடேஸ்வரன்

சிறார்கள் உலகை புரிந்துக்கொள்ள உதவிய புத்தகங்கள் மற்றும் சிறார் இல‌க்கியம் – ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு

01. குழந்தை அவள் செய்த முதல் தப்பு – குட்டி ஆகாயம்
02. பதின் – எஸ்.ராமகிருஷ்ணன்
03. யாரேனும் இந்த மௌனத்தைத் தகர்த்திருந்தால் – கம்லா பாசின் (மொ : சாலை செல்வம் ) – குட்டி ஆகாயம்
04. தமிழர் நாட்டு விளையாட்டுகள் – இரா.பாலசுப்பிரமணியம் – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
05. அண்டா மழை – உதயசங்கர் – வானம் பதிப்பகம்
06. பேய் பிசாசு இருக்கா – உதயசங்கர் – வானம் பதிப்பகம்
07. சிறுவர் நாடோடிக் கதைகள் – கி.ராஜநாராயணன் – அன்னம் பதிப்பகம்
08. காட்டுக்குள்ளே திருவிழா – கொ.மா.கோதண்டம் – விஜயா பதிப்பகம்
09. பச்சை நிழல் – உதயசங்கர் – NCBH
10.  மாயி சான் – தோசி மாருகி (மொ: கொ.மா.கோ.இளங்கோ)

Leave a comment