சென்னை புத்தகக் காட்சி பரிந்துரைகள் : பெற்றோர்கள் ஆசிரியர்கள் சிறார்கள்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு நண்பர்களிடம் சில பரிந்துரைகளை கேட்டோம். குழந்தை வளர்ப்பு, கல்வி, பெற்றோர்கள் வாசிக்க வேண்டியவை, ஆசிரியர்கள் வாசிக்க வேண்டியவை. சிறார்களுக்கு பிடித்தமானவை, சிறார் இலக்கியம்(பாடல்கள், கதைகள், கட்டுரைகள், படக்கதைகள், காமிக்ஸ், இதழ்கள்) என வெவ்வேறு தலைப்புகளில் பரிந்துரைகளை கொண்டு வர திட்டமிடுகிறோம். அதன் முதல் பதிவாக மூன்று நண்பர்களின் பரிந்துரைகள்.

கல்வி சார்ந்து வாசிக்க வேண்டிய நூல்கள் : பாஸ்கர் ஆறுமுகம்

1. சிவப்பு பால்பாயிண்ட் பேனா – ச.மாடசாமி
2. தெரிவிளக்கும் மரத்தடியும் – ச.மாடசாமி
3. எனக்குறிய இடமெங்கே – ச.மாடசாமி
4. இது யாருடைய வகுப்பறை – ஆயிஷா நடராஜன்
5. இருளும் ஒளியும் – ச.தமிழ்செல்வன்
6. குழந்தைகள் எவ்வாறு கற்கின்றனர் – ஜான்ஹோல்ட்
7. தமிழகத்தில் கல்வி  : வசந்தி தேவி – சுந்தரராமசாமி நேர்காணல்
8. டோட்டோ சான்
9. பள்ளிக் கல்வி – புத்தகம் பேசுது நேர்காணல்
10. வகுப்பறைக்கு உள்ளே – தட்சணாமூர்த்தி

பெற்றோர்கள் வாசிக்க வேண்டிய நூல்கள் : குட்டி ஆகாயம் வெங்கட்

1. ஜான்ஹோல்ட் புத்தகங்கள்
2. பெனி எனும் சிறுவன் – பாரதி புத்தகாலயம்
3. குட்டி இளவரசன்
4. தொலைக்காட்சி – அடையாளம் பதிப்பகம்
5. கதை கதையாம் காரணமாம் – விஷ்ணுபுரம் சரவணன் – வானம் பதிப்பகம்
6. மாண்டிசோரி புத்தகங்கள்
7. ரசிய சிறார் கதைகள்
8. டோட்டோ சான்
9. NBT சிறார் கதைகள் ( 40 புத்தகங்கள்)
10. உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை – கொ. மா. கோ. இளங்கோ( பாரதி புத்தகாலயம்)

சென்ற வருடம் வாசித்த புத்தகங்களில் பிடித்த 10 புத்தகங்கள் : சுட்டி ரியா (வயது 7)

1. கிச்சா பச்சா – விழியன் – வானம் பதிப்பகம்
2. வாத்து ராஜா – விஷ்ணுபுரம் சரவணன் – பாரதி புத்தகாலயம்
3. வித்தைக்கார சிறுமி – விஷ்ணுபுரம் சரவணன் – வானம் பதிப்பகம்
4. புலி கிலி – நீதிமணி – பாரதி புத்தகாலயம்
5. பறக்கும் ஹேர் க்ளிப் – விஜயபாஸ்கர் விஜய் – வானம் பதிப்பகம்
6. எனக்குப் பிடிச்ச கலரு – ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு – வானம் பதிப்பகம்
7. மூக்கு நீண்ட குருவி – கன்னிகோயில் ராஜா – வானம் பதிப்பகம்
8. மீன் காய்க்கும் மரம் – உதயசங்கர் – வானம் பதிப்பகம்
9. ஆமை காட்டிய அற்புத உலகம் – யெஸ்.பாலபாரதி – பாரதி புத்தகாலயம்
10. பஞ்சு மிட்டாய் சிறார் இதழ்

குறிப்பு : புத்தகம் குறித்து விழிப்புணர்வு கொண்டு வரும் நோக்கத்திலே பதிவுகள் கொண்டுவரப்படுகிறது. பரிந்துரைகள் அனைத்தும் தனி நபர்களின் விருப்பம் சார்ந்ததே.

Leave a comment