கனவுகளை விதைக்குமா சிதைக்குமா புதிய பாடப்புத்தகம் – பாஸ்கர் ஆறுமுகம்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

முன் எப்போதுமில்லாத அளவிற்கு கடந்த ஒரு வருடமாக பாடத்திட்டம் குறித்து தமிழகம் கடந்து நாடு தழுவிய பேச்சிகாக உருவெடுக்க வைத்திருப்பதே, தமிழக பள்ளிக் கல்வித்துறையில் முக்கிய செயல்பாடு எனலாம் அதற்கு வித்திட்ட உதயசந்திரன் மற்றும் குழுவினரின் பங்கு நிச்சயம் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது.

கடந்த சில வருடங்களாக பள்ளிக் கல்வியை கவனித்தும், மாணவர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் என முன்று தளங்களிலும் வேலை செய்தும் வருகிறோம், ஒரே ஒரு பாடத்திட்ட பணிமனைக்கு அழைக்கபட்டிருகிறேன், வேளாண் மற்றும் சுழலியளுக்கு, அதற்கு முன்பாகவே இந்த செயல்முறைகளை நன்கு கவனிக்க துவங்கினேன், தற்போது வெளியாகியுள்ள 1,6,9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான புத்தகங்களை தொடர்ச்சியாக வசிக்கிறேன் இதுவரை 6,9,11 அறிவியல் பாடங்கள் அனைத்தையும் முதல் சுற்று வாசித்தப் பின்னரே இதை எழுதுகிறேன்.

புத்தக உருவாக்கத்தை மூன்று கூறுகளாக பிரித்து காண முடிகிறது,

  1. உள்ளடக்கம்
  2. ICT மற்றும் டிஜிட்டல்
  3. புத்தக வடிவமைப்பு (ஓவியங்கள், செய்முறைகள், குறிப்புதவி etc.,

ஒன்பதாம் வகுப்பு அறிவியல் பாடங்கள் சற்றே மாணவர்களை கவனத்தில் கொண்டு வடிவமைக்கப் பட்டிருகிறது, இருந்த போதிலும் குறிப்புதவி நுல்கள் மற்றும் சுட்டிகள் தான் கல்லுரி மாணவர்களை மனதில் கொண்டு கொடுக்கப்பட்டிருகிறது, ஒளியியல் பாடத்திற்கு Brijlal Subramaniam அவர்களின் புத்தகம் குறிப்புதவி நூலாக கொடுத்திருப்பது, வியக்கச் செய்கிறது, முதுகலை இயற்பியல் பட்டப்படிப்பில் வரும் புத்தகம் இது, ஆசிரியரின் புரிதலுக்காக வைத்திருப்பதாக சிறுகுறிப்பை வைத்திருக்கலாம்.

இணைய சுட்டிகளுக்கு QR code வழங்கியிருக்கலாம், தேடுவதற்கு ஏதுவான முறையில் அமைந்திருக்கும், முழு URL தட்டச்சி செய்து தேடும் வசக்கொழிந்து நீண்ட காலமானது, முழு வலை முகவரியை கூட தட்டச்சி செய்தாலும், உள்ளே இருக்கும் SUB PAGE சுட்டிகளை தட்டச்சி செய்வது கடினம்.

11 ஆம் வகுப்பு அறிவியல் புத்தகங்கள் மாணவர்களின் நிகழ் மற்றும் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு நேர்த்தியாக வடிவமைத்து இருக்கிறார்கள், உள்ளடக்கம் வடிவமைப்பு மற்றும் டிஜிட்டல் முன்றும் சரியாக பொருந்தி இருப்பது 11 ஆம் வகுப்பு பாடங்களில் தான், நான் இயற்பியல் மாணவன் இருந்த போதிலும் வேதியல் பாடங்கள் கொண்டு செல்லும் விதமும், வேதி வினைகளை எளிமை படுத்தி இருக்கும் விதமும் ஆச்சரியமூட்டும் வகையில் அமைந்திருகிறது, வேதிவிதைகளின் மேல் இருந்த சலிப்பை போக்கும் என்பதில் ஐயமில்லை அவ்வளவு நேர்த்தி, போட்டி தேர்வுக்குமட்டுமின்றி அறிவியலை புரிந்து கொள்ளும் வகையில் தகவலும், எளிமையான பட விளக்கமும் அருமை, மொத்தத்தில் 6,9,11 பாட புத்தகங்களில் எல்லா கூறுகளை கணக்கில் கொண்டு வெளியாகி இருப்பது 11 ஆம் வகுப்பு அறிவியல் புத்தகங்கள்.

ஆறாம் வகுப்பு அறிவியல் பாடங்களை பொருத்தமட்டில் வண்ணமயமாக இருந்தாலும், குழந்தைகளை கருத்தில் கொள்ளாமல் வடிவமைத்து இருப்பது போலவே தோன்றுகிறது, Content mapping செய்திருக்கும் விதமே சற்று நெருடலாகத் தான் இருக்கிறது, முழுக்க முழுக்க போட்டித் தேர்வுகளுக்கான தகவல் களஞ்சியம் போலவே காட்சியளிக்கிறது, QR Code கள் பொரும்பாலும் வேலை செய்யவில்லை, இணையதளம் என்பதால் எப்போது வேண்டுமானால் செழுமைபடுட்டிக் கொள்ளலாம், ஆச்சர்யம் என்னவென்றால் மத்திய அரசின் Diksha இணையதளத்துடனே பல்வேறு மாநிலங்களின் பாடப் புத்தக  சுட்டிகளும் கொண்டு செல்கிறது, இவை ஒருபுறம் இருக்க, பாடங்கள் அனைத்தும் கடினமான முறையிலேயே கொண்டு செல்கின்றனர், உதாரணமாக ஆறாம் வகுப்பு மூன்றாவது பாடம் “Matter Around Us” தொடக்கத்திலேயே Scanning Electron microscope, Tunneling Electron Microscope, Scanning Tunneling microscopy, plasma, Cryogenic என அடிக்கடுக்காக கலைசொற்கள், கலைசொற்கள் அறிமுகத்தின் தேவை என்னவோ அவசியம் தான் ஆனால் ஆறாம் வகுப்பு மாணவனுக்கு இத்தனை கடினம் தேவைதான என்கிற கேள்வியோடே நகர்கிறது ஆறாம் வகுப்பு அறிவியல்.

அனைத்து பாட புத்தகங்களுக்கும் வண்ணமயமாக, அழகாக மாணவர்கள் நேசிக்கும் விதம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  படங்கள், ஓவியங்கள் மிக சிறப்பாக இணைத்துள்ளார்கள், பாடங்களோடு படங்கள் பொருந்தி அழகும், சிந்திக்கும் வகையிலும் செய்த குழுவினரை பாராட்டியே ஆக வேண்டும்.

புத்தகங்கள் கற்றலுக்கான ஒரு கருவி, புத்தகங்கள் மாணவர்களுக்கு இடையேயான உறவைவிட, ஆசிரியர் மாணவர்களுக்கு இடையேயான உறவு மிகவும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு, கற்றலில் அடுத்தப் படிகளை எட்ட வேண்டும், கற்றல் இருவழிப் பாதையாக அமையவேண்டும். அனைத்து கருவிகள், இயந்திரங்களை விட மாணவர்களையும் ஆசிரியைகளையும்  மையமாக வைத்து தான் வகுப்பறை அமைய வேண்டும், தகவலை விட சிந்தித்தலும், செயற்பாடுகளும், வகுப்பறை ஜனநாயகமும் மிகவும் முக்கியம் அதை ஆசிரியர்கள் தான் உருவாக்குகிறார்கள். ஏனென்றால் வகுப்பறை என்பது அனைத்து குழந்தைகளுக்குமான பொதுவெளி.

டிஜிட்டல் உலகம் உள்ளே வந்திருப்பது வரவேற்க்க தக்கதே, ஏனென்றால் மாணவர்களை விட ஆசிரியர்கள் அதிகம் கற்க வேண்டிய சூழலை அது உருவாக்கும், இணையதளங்கள் தங்களை வேகமாக தகவமைத்துக் கொள்ளும் அதற்கேற்ப தாங்களும் முன்னே செல்ல வேண்டிய தேவையை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை, டிஜிட்டல் கூறுகள் மாணவ – ஆசிரியர் உறவை வலுப்படுத்த வேண்டும், அதில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். மொத்ததில் கடந்த கால புத்தகங்களை விட நேர்த்தியாகவும், தற்கால சமூக பொருளாதார கூறுகளை உள்ளடக்கியும், போட்டிதேர்வுகளை எளிமையாக அணுகும் வகையிலும் பல படிநிலைகளை கடந்து தமிழக பாட நூல்கள் வெளிவந்துள்ளது, கல்வியில் புதிய மயில்கல்லை நாட்டியிருக்கும் அனைவருக்கும் பாராட்டும் நன்றியும்.

Leave a comment