பஞ்சு மிட்டாய் 6ம் இதழைப் பற்றி நண்பர்கள்

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்

பஞ்சு மிட்டாய் சிறுவர் இதழ், கையில் பொருந்தி கொள்ளக்கூடிய அளவான வடிவமைப்பு, மனதிற்கு சட்டென்று உவப்பான வண்ணமயமான பக்கங்கள், அவ்வளவுதான் என, எளிதாக தொடங்கி, எளிதாக முடியும் கதைகள். பாடல்கள், கட்டுரைகள், என, குழந்தைகளின் உயரத்தை தொட்டு விடும் முயற்சியில், சாத்தியமான பாதையில் பயணிக்கின்றது. குழந்தைகள் நமக்கு மூன்று முக்கியமான வாழ்நெறிகளை கற்பிக்கின்றனர்.

1. திரும்ப திரும்ப ஒரு செயலை செய்வதற்கு ஊக்கம் குறையாமல் , அதே விருப்பத்துடன் செய்வது.

2. எப்போதும் அறிதலுக்கான வேட்கை,

3. இந்த கணத்தில் வாழ்தல்.

அவர்களுக்கு நாம் தருவது என்ன?
ஊடகங்களும், தொடுபேசிகளும், மாசு பூசும் கற்பித்தல் களுக்கும் , மாற்றாக, குழந்தமை கற்பனைகளுக்கு நீர் ஊற்றும் புத்தக துணையாக, இந்த பஞ்சு மிட்டாய் பரிந்துரைக்கப்பட வேண்டிய ஒன்று, நிச்சயம் பிரபுவும் , அவரது குழுவினரும் , தங்கள் அர்ப்பணிப்பிற்காய் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

– நளினி கண்ணன்

பஞ்சுமிட்டாய் ஆறாம் இதழ் ஓவியங்கள், கதைகள், விளையாட்டுகள், புதிர்கள் என்று கலவையான படைப்புகளுடன் வெளியாகியிருக்கிறது.

முக்கியமாக சிறார்களே வரைந்த ஓவியங்கள் மிகச்சிறப்பாக இருக்கின்றன. பஞ்சுமிட்டாய் குழுவினருக்கு வாழ்த்துகள்.

இன்னும் அதிக பக்கங்களுடன் பஞ்சுமிட்டாய் ஏழாம் இதழை எதிர்பார்க்கிறேன்.

– சரவணன் பார்த்தசாரதி

முந்தைய இதழ்களை விட மிகச்சிறந்த முறையில் மெருக்கேறியிருக்கிறது.

மிகச்சிறந்த வண்ணமயம். கதைகள், விளையாட்டு, ஓவியம், பாடல் , புத்தக அறிமுகம் என மிகச் சிறந்தக் கலவையாக வந்திருக்கிறது. அவ்வளவு அழகு, அத்தனை ஆனந்தம். மேலும் மேலும் குழுவினரின் மெனக்கெடலுக்கும் முயற்சிக்கும் மிகச்சிறந்த இடத்தை அடைந்திருக்கிறது.

நாளை மறுநாள் புறப்படவிருக்கும் 20நாள் பயணத்திற்கு பயணப் பையில் இடம் பெற்று பயணத் துணைக் குட்டி நண்பர்களுக்கு பரிசாய் அவர்கள் கையில் இடம் பிடிக்கப் போகிறது “பஞ்சுமிட்டாய்”.

குழுவினருக்கு வாழ்த்துகளும் பேரன்பின் பெரும் முத்தகளும்.

– இனியன்

Leave a comment