வணக்கம் நண்பர்களே! உலகளாவிய அளவில் ஓரிகாமி கலை வெவ்வேறு வகையான தொழில்நுட்ப முறையில் கையாளப்படுகிறது , கிட்டத்தட்ட 80 க்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர், அவைகளில் சில முக்கியமான பரவலாக பலரால் கையாளப்படும் வகைகளை நாம் இன்று தெரிந்துகொள்ளலாம்.
ஜப்பானிய மரபு ஓரிகாமி (Pure Origami): இந்த வகை ஓரிகாமியில் பாரம்பரியமான ஜப்பானிய ஓரிகாமி முறைப்படி ஒருசதுரமான காகிதம் எந்தவித பசை, கத்தரிக்கோல், நூல் போன்ற உபகரணங்க்களும் பயன்படுத்தாமல் மடிப்பை மட்டுமே பயன்படுத்தி பல உருவங்கள் உருவாக்கப்படுறது, உதாரணமாக கொக்கு, தவளை போன்ற உருவங்கள் உருவான பிறகு அதில் எந்த வித அலங்கரிப்பும் செய்யக்கூடாது . இதுவே pure origamiயின் முக்கிய அம்சமாக உள்ளது.
இயங்கும் ஓரிகாமி (Action Origami): இந்த வகை ஓரிகாமி குழந்தைகளுக்கு மகவும் பிடித்த ஒன்று. இந்த வகையில் செய்யப்படும் காகித மடிப்பு பொம்மைகள் இயங்கும் தன்மையை கொண்டதாக இருப்பதால் அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும். உதாரணமாக பறக்கும் கொக்கு, பேசும் காகாம், பேசும் நரி, பறக்கும் வண்ணத்துப்பூச்சி போன்ற வகைகள்.
முப்பரிமாண ஓரிகாமி (3D Origami): இந்த வகையில் செயல்படும் ஓரிகாமி உருவங்கள் பார்க்க மிகவும் அழகாக இருக்கும், பல வகையான வண்ண நிறங்களில் இருக்கும், இந்த வகை ஓரிகாமி உருவங்கள் செய்ய பல மணி நேரங்கள் தேவைப்படுகிறது. சில உருவங்களுக்கு ஒரு நாள் முழுதும் கூட தேவைப்படும். சில உருவங்கள் செய்ய 10 , 20 நாட்கள் கூட தேவைப்படும். இது பலர் குழுவாக சேர்ந்து செய்வதற்கு ஏற்ற வகை.
ஒரு சிறிய காகிதத்தை முக்கோண வடிவில் மடித்து அதுபோல பல சின்ன சின்ன 100 க்கும் மேற்பட்ட தனிதனி முக்கோண காகித துண்டுகளை ஒன்றுடன் ஒன்றை இணைத்து ஒரு உருவத்தை உருவாக்கும் கலையே முப்பரிமாண ஓரிகாமி என அழைக்கப்படுகிறது.
இதன் மூலமாக பறவைகள், விலங்குகள், மலர்கள், பழங்கள், எண உருவாக்க முடியும். தோராயதாக 100லிருந்து 30,000 முக்கோண காகித துண்டுகள் வரை பயன் படுத்தி செய்கிறார்கள். இவை சீனாவில் பிரபலமாக உள்ளது
கொத்து ஓரிகாமி(Modula Origami): இந்த வகை ஓரிகாமி உருவங்கள் பல வகையான வண்ணங்களில் பார்க்க அழகாக இருக்கும். தனி தனி சிறிய சதுர காகிதங்களை முறையே மடித்து, இப்படி தனி தனியாக மடித்த காகிதங்களை ஒன்றுடன் ஒன்று இனைத்து உருவங்களை உருவாக்கும் முறைக்கு கொத்து ஓரிகாமி எனப்படும். இந்த வகை கொத்து ஓரிகாமி மூலம், முப்பரிமாண நட்சத்திரங்கள், முப்பரிமாண கணித வடிவியல் உருவங்கள், மற்றும் பல கூறை அலங்கார உருவங்களை உருவாக்க முடியும்.
இதன் முக்கியமான சிறப்பு காகிதங்களையும் மடிப்பு தொழில்நுட்பம் மட்டுமே பயன்படுத்தி செய்வது தான், ஒட்டுவதற்கு பயன்படும் எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது.
பிண்ணல் ஓரிகாமி (Strip Origami): இந்த வகை ஓரிகாமி நம் நாட்டில் உள்ள பனை ஓலை மற்றும் தென்னை ஓலைகளில் செய்யப்படும் பிண்ணல் முறை போலவே பல நீளமான துண்டு காகிதங்களை பிண்ணி பல உருவங்களை செய்ய முடியும். உதாரணமாக நட்சத்திரங்கள், தோடு, மணி, சாவிக்கொத்து போன்றவைகள் செய்யலாம்.
மிட்டாய் தாள் ஓரிகாமி (Candy Wrapper Origami): இந்த வகளை ஓரிகாமி பெரும்பாலும் மிட்டாய் பிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடிக்கும். சாக்லேட் மிட்டாய் மற்றும் குச்சி மிட்டாய்களின் பல காகித உறைகளை ஒன்று சேர்த்து அவைகளை பயன்படுத்தி அழகிய உருவங்களை உருவாக்கும் முறையே மிட்டாய் தாள் ஓரிகாமி எனப்படுகிறது.
பணத் தாள் ஓரிகாமி (Dollar Bill Origami): இந்த வகையில் காகிதத்திற்குபதிலாக பணத்தை மடித்து உருவங்கள் செய்கிறார்கள் இந்த முறை அமெரிக்காவில் பிரபலமாக இருக்கிறது. பல நாடுகளில் இந்தமுறையையும் பயன்படுத்துகிறார்கள்
ஈரத்தாள் ஓரிகாமி (Wet Folding Origami): இந்த வகை ஓரிகாமி ஜப்பான் நாட்டை சேர்ந்த ஓரிகாமியின் தந்தை என்று அழைக்கப்படும் அகிரா யோசிசவா அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறையில் காகிதமானது நீரினால் ஈரமாக்கப்பட்ட காகிதங்களை கொன்டு மடித்து உருவங்கள் செய்யப்படுகிறது. இப்படி செய்வதால் காகித உருவங்கள் அழகாகவும் , நேர்த்தியாகவும் இருக்கிறது. இந்த வகையில் மடிக்கும் போது சற்று கூடுதல்கவணம் தேவை, மேலும் காகிதத்தின் ஈரம் உலர்வதற்குள் மடிக்க வேண்டும்.
இணைப்பு ஓரிகாமி (Quilts Origami): இந்த வகை ஓரிகாமி தரை தளம் மற்றும் சுவர்களில் அலங்காரம் செய்ய பயன்படுகிறது. காகிதத்தின் இரண்டு பக்கத்திலும் வெவ்வேறு வண்ணங்களில் அச்சிடப்பட்ட தாள்களை முக்கோண, சதுர, செவ்வக, வடிவங்களில் பல 100 காகிதங்களில் மடித்து அவைகளை ஒன்றோடொன்று இணைத்து பல வடிவங்களை உருவாக்கும் முறை. உதாரணமாக நமது வீடுகளில் தரை தளத்தில் பயண்படுத்தப்படுத் டைல்ஷ் வடிவமைப்பு போல இருக்கும்.
நான் இங்கு சில பிரபலமான வகைகளை மட்டுமே இக்கட்டுரையி் பதிவு செய்துள்ளேன், உலகம் முழுவதும் பல வகைகள் உருவாக்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த முறைகளை நீங்களும் முயற்சித்து பாருங்கள் நண்பர்களே!
























