ஓரிகாமி கொக்கின் புதிய பரிமாணங்கள் – தியாக சேகர் (ஓரிகாமி கலை குறித்த தொடர் – பகுதி 08)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஓரிகாமி காகித கொக்கு ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு உண்டாக்கிய பெருந்துயரத்தின் வலியினையும், உலகில் அன்பையும் அமைதியையும் பரப்புகிறது என்று ஏற்கனவே பார்த்தோம். இந்த பகுதியில், சமகாலத்தில் உலகின் பல்வேறு பயன்பாட்டில் உள்ள ஓரிகாமி கொக்கு ஒரு கலாச்சார அடையாளமாக மாறிக்கொண்டிருக்கிறது. அவைகளைப் பற்றிய தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே.
ஓரிகாமி கொக்கின் வடிவம் பல்வேறு விதமாக பயன்படுகிறது, இளைஞர்கள் உடுத்தும் பணியன்களில் ஓரிகாமி கொக்கு பல வண்ணங்களில் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பலநாடுகளில் இளைஞர்கள் தங்களது உடம்பில் ஓரிகாமி கொக்கின் உருவத்தை பச்சை குத்திக் கொள்ளும் பழக்கம் உள்ளது.

உலகத்தில் உள்ள முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் இப்போது ஏற்பட்டுள்ள சூழல்  மாறுபாட்டின் காரணமாக , சுற்று சூழல் பாதுகாப்பில் அக்கறை காட்ட துவங்கியுள்ளது. இதன் ஒரு முயற்சியாக மறுசுழற்சி முறையில் அடிடாஸ் நிறுவனம் தனது ஷூ ஒன்றை தயாரித்தது கடந்த வருடம் . உணவு மற்றும் நீர் பானம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் நிறுவனமான நெஸ்லே தனது தயாரிப்பு பொருட்களுக்கு 100% மறுசுழற்சி முறையில் தான் பேக்கேஜிங் 2025ஆம் ஆண்டிற்குள் அமையுமென்று திட்டம் இருப்பதாக அறிவிப்பு ஒன்றை செய்தது.

Kit-Kat Origmai Wrapper:

அதன் முதல் முயற்சியாக நெஸ்லே நிறுவனம் ஜப்பானில் தனது பிரசித்திப்பெற்ற சாக்லேட்டில் ஒன்றான கிட்-கேட் ஸ்கின் கவர் ஒரிகாமி காகிதத்தால் செய்யப்பட்டிருக்கும் என்று அறிவித்தது. இதன் மூலம் கிட் கேட் சாக்லேட்டிற்கு பிளாஸ்டிக்கில் இருந்து விடுதலை அளித்தது. இதைப் பற்றி நெஸ்லே நிறுவன தலைமைச் செயலாளர் திரு.மார்க் ஸ்னைடர் அவர்கள் கூறுகையில் “சமாளித்தல் என்பது ஒரு ஒருங்கிணைந்த முயற்சி ஆகும். புது யுக்திகள் மூலம் மறுசுழற்சி நோக்கி நகர்வதற்கான அனைத்து திட்டங்களையும் நாங்கள் வகுத்து முன்னேறிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

ஜப்பானியர்கள் கிட்கட் சாக்லேட்ன் மீது அலாதியான பிரியம் கொண்டவர்கள் என்று சொல்லவேண்டும். ஒரு நாளில் மட்டும் 40 லட்சம் கிட்கேட் சாக்லேட்டுகள் ஜப்பானுக்கு விற்பனையாகிறது. பழைய பிளாஸ்டிக் கவரில் இருந்து புதிய காகித ஒரிகாமி கவருக்கு கிட்கேட் மாறியதன் மூலம் ஒவ்வொரு வருடத்திலும் 380 டன்கள் பிளாஸ்டிக்கில் இருந்து இந்தத் தாய் பூமிக்கு விடுதலை அளிக்க முடியும் என்று நெஸ்லே நிறுவனம் நம்புகிறது. ஒரிகாமி காகிதத்தால் செய்யப்பட்ட புதிய கிட்கேட் கவர் சுற்றுச்சூழலுக்கு மட்டும் நன்மை பயக்கக்கூடியதாக மட்டுமல்லாமல் சிறுவர்கள் புத்துணர்ச்சியாக இருக்க ஓரிகாமி கொக்கு படிப்பதற்கான செயல்முறை விளக்கங்களும் ஒவ்வொரு கிட் கேட் சாக்லேட் உறையோடு அமைந்திருக்கும் என்பது ஒரு கூடுதல் தகவல். ஒரிகாமி கொக்கு செய்ய ஊக்குவிப்பதன் மூலம் கிட்கட் தனது வாடிக்கையாளர்களுக்கு குப்பைக்கு போகும் பொருட்களை கலைப் பொருட்களாக மாற்ற ஊக்குவித்து ஓரிகாமி கொக்கின் மூலம் அன்பும் அமைதியும் இந்த பூமியில் நிலைத்திருக்க ஒரு கருவியாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

ஓரிகாமி கொக்கு ஊதுபத்தி

நாகசாகி எல்லைக்குட்பட்ட அசாமி என்ற ஒரு இடத்தில் ஒரு சமூக குழுவானது நாகசாகி அணு குண்டு அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு வருடமும் கொண்டு சேர்க்கப்படும் நூற்றுக்கணக்கான கிலோ காகித கொக்குகளின் மூலம் ஒரு புது கலாச்சாரத்தை உருவாக்கி அதை பயன்பாட்டுக்கு எடுத்து வந்திருக்கிறது. அந்த நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் தான் ஆயிரம் கொக்கு காணிக்கைகளை கொண்ட அமைதிக்கான அர்ப்பணிப்புகள் அதிக அளவில் அமைந்திருக்கும். அதை தூள் நிலைக்கு மாற்றும் முயற்சியில் இந்த குழு ஈடுபட்டது. ஆயிரம் கொக்குகள் கொத்துக்கொத்தாக ஆசாமி என்ற பீங்கான் பொருட்களை தயாரிக்க பிரசித்திபெற்ற இடத்தில் எரியூட்டப்பட்டது. எரியூட்டப்பட்டு அதோடு வாசனை திரவியங்களை சேர்த்து ஊதுபத்தியாக மதிப்பு கூட்டியிருக்கிறார்கள் ஆகஸ்ட் 9 1945ல் நாகசாகியில் நடந்த அணு குண்டு வெடிப்பு பேரழிவின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அன்புக்காகவும் அமைதிக்காகவும் நடக்கும் பேரழிவு பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் இந்த கொக்குகளினால் ஆன ஊதுபத்திகளை பயன்படுத்தி கொண்டிருந்தார்கள்.

உள்ளூர் சமூக புத்துயிர்ப்பு குழுக்களில் ஒன்றான கம்பரா ஷா. காகிதக் கொக்குகளின் சாம்பல்களை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தியவர் . மாச்சோ அவர்கள் ஒரிகாமி காகித கொக்குகளை எரித்து அதன் சாம்பல் தூள்களை தான் அவர் கைவினை கலைப் பொருள்கள் வடிவமைக்க முக்கியமான மூலப்பொருளாக கருதுகிறார். அந்த மூலப் பொருளை கொண்டு அவர் சாயம் ஆகவும் மற்றும் படிந்து உறையும் நிலையில் தனது கைவினைப் பொருட்களுக்கு ஒரு மூலப் பொருளாகவும் அதை மதிப்பு கூட்டுகிறார். அது மட்டுமல்லாது அவர் அதை காய்கறி உரமாகவும், soapஆகவும் மாற்றுகிறார். மாச்சோ அவர்களின் பெரும்பாலான கலை உருவாக்கங்கள் இந்த ஒரிகாமி பேப்பர் கரித்தூள்களையும் வண்ண சாயங்கள் கலந்ததாகவே இருக்கும்.

நாகசாகியில் உள்ள அணு குண்டு அருங்காட்சியகத்திற்கு வரும் எண்ணிக்கையில் அடங்கா . காகித போக்குகளின் அதிக அளவு எண்ணிக்கையினால் செய்வதறியாமல் அருங்காட்சியம் நிர்வாகம் போராடிக் கொண்டிருக்கிறது என்ற செய்தி மாச்சோ அவர்களின் காதுகளை எட்டியது.

சாம்பல் என்பது மறுபிறப்புக்கும் மீட்சிக்கு மானதாகும் என்று குறிப்பிட்ட மாச்சோ அவர்கள் நான் இந்த காகித கொக்குகளை செய்தவர்களின் உணர்வுகளை பாதுகாக்கும் வண்ணம் அதன் சாம்பல்கள் மூலம் புது உருவங்களை கொடுத்து அவர்கள் உணர்வுக்கும் சாம்பல் களினால் ஆகும் புது உருவத்திற்கும் ஒரு பாலம் அமைத்து தர போகிறேன் என்று உணர்ச்சிபூர்வமாக கூறினார்.

இதை முன்னெடுத்துச் செல்லும் வண்ணமாக அவர் ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவில் அவரின் நண்பர்களையும் இடம் பெற செய்தார். அவர்கள் நாகசாகி அணுகுண்டு அருங்காட்சியகத்தை தொடர்புகொண்டு இதை நடைமுறைக்கு சாத்தியமாக்கினார்கள். அருங்காட்சியகத்தில் தகவலின்படி ஒவ்வொரு ஆண்டும் 700 கிலோ காகித கொக்குகள் வந்து சேர்கிறது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அவைகளை காட்சியகத்தில் வைத்துவிட்டு பின்னர் அவர்கள் அடித்தளத்தில் உள்ள கிடங்கில் காகிதமாக மறுசுழற்சி செய்ய வைத்துவிடுவார்கள். நாகசாகிக்கு வந்தடையும் எண்ணற்ற காகித கொக்குகள் நமது உள்ளூர் குழுக்களின் மூலம் மீட்சியும் மறுபிறப்பும் எடுக்கிறது என்பதற்காகவே இந்த முறைக்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம் என்று அருங்காட்சியம் நிர்வாகத்தினர் தெரிவித்தனர் .

அருங்காட்சியகத்தில் இருந்து பெறப்பட்ட கொக்குகளை compra sha குழுவினர் எரியூட்டி அதன் மூலம் கிடைக்கும் சாம்பல் துகள்களை வாசனைத் திரவியங்களை சேர்த்தும் நறுமணம் வீசும் சோப்புகளை சேர்த்தும் ஊதுபத்திகளை கோடைகாலத்தில் உருவாக்கி முடித்தனர் .

அவர்கள் கிட்டத்தட்ட 3000 ஜோடிகளை தயாரித்து கிட்டத்தட்ட ஒவ்வொரு ஜோடிகளையும் பதிமூன்று டாலர்கள் என்ற வீதம் இணையத்தில் விற்றார்கள் அதுமட்டுமல்லாது சாம்பல்கள் மூலம் ஊதுபத்தி ஸ்டாண்ட் ஒன்றையும் இந்த சாம்பல் களை கொண்டு படிந்து உரையும் நிலையான திரவமாக மாற்றி ஊதுபத்தி ஸ்டாண்ட் உருவாக்கினார்கள். கம்ப் ராஷா குழுவினர்களுக்கு இதன் மூலம் மதிப்புக் கூட்டிய பொருள்களை உருவாக்கி தருமாறு தொடர்ந்து அவர்களுக்கு அழைப்புகள் வந்தபடியே இருந்தன. தனது வீட்டில் இருக்கும் மூதாட்டியான தனது பாட்டிக்கு அந்த உதவியைத் தொடர்ந்து உபயோகத்தினால் அணுக்கதிர் ஆக்கத்திலிருந்து அவரை நான் பாதுகாப்பதாக நினைக்கிறேன் என்று கூறினார்கள். மற்றவர்கள், இந்த சாம்பல்களின் மூலம் உருவாகும் ஊதுபத்திகள் வெளிக்கொணரும் வாசனைகள் காற்றில் கலந்து இந்த பூமி எங்கும் அன்பையும் அமைதியையும் நிலைநாட்டும் என்று தான் நம்புவதாக தெரிவித்தார்கள்.

துணிப்பை

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்து இயங்கும் நண்பர் தமிழ்காடு திரு.இரமேசு கருப்பையா அவர்களோடு இனைந்து நெகிழி பைக்கு மாற்றாக , துணிப்பைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பணியினை செய்து வருகிறோம். குறிப்பாக கடந்த மூன்று வருடங்களாக ஓரிகாமி கொக்கு மற்றும் சசாகியின் உருவம் அச்சிடப்பட்ட துணிப்பைகளை பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் கொண்டு சேர்க்கும் வேளையினை தொடர்ச்சியாக செய்துவருகிறோம் என்பதையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். மகிழ்ச்சி நண்பர்களே.

Leave a comment