http://www.panjumiittai.com இணைய தளம் தமிழ் சிறார் உலகத்தில் நிலவுகின்றன விடயங்களை ஒரே இடத்தில் கொண்டு வரும் நோக்கத்துடனே செயல்படுகிறது. இங்கு இடம்பெறும் பதிவுகள் அனைத்தும் அப்பதிவுகளின் படைப்பாளிகளின் சொந்தக் கருத்துக்களே. இணைய தளமோ அல்லது ஆசிரியக் குழுவோ எந்தச் சூழ்நிலையிலும் எந்த வகையிலும் அவற்றுக்குப் பொறுப்பேற்க இயலாது.
எந்தக் கருத்துக்கள் சிறந்தது, தவறானது என்பதனை முடிவெடுக்கும் நோக்கில் இல்லாமல் அனைத்தையும் பற்றிய விவாதங்களுக்கு இடம் தரும் மேடையாக இந்தத் தளத்தினை அமைத்திடவே ஆசைப்படுகிறோம். கல்வி, குழந்தை வளர்ப்பு, உணவு, மருத்துவம், சிறார் இதழ்கள், இலக்கியம் என வெவ்வேறு தலைப்புகளில் உள்ள எந்த ஒரு பதிவும் பகிரும் நோக்கத்துடனே அமையும். அதன் சார்ந்து முடிவெடுக்கும் கடமை வாசகருடையதே. வாசகரின் முடிவிற்கு இந்தத் தளம் எந்த வகையிலும் பொறுப்பெடுக்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதேப் போல் எந்தவித வியாபார நோக்கத்தில் இயங்கவும் நாங்கள் விரும்பவில்லை. நிகழ்வுகள், செயற்பாட்டாளர்கள், இதழ் , இலக்கியம் , பதிப்பகங்கள், புத்தக கடைகள் சார்ந்த அறிமுகங்கள் அனைத்துமே தகவல்கள் அனைவருக்கும் சேர வேண்டுமென்ற நோக்கத்திலே பகிரப்படுகிறது. இதழ் சந்தாக்கள் , நிகழ்வு கட்டணங்கள் மற்றும் விற்பனைகள் அனைத்தும் வாசகர்களின் சொந்த முடிவே. பஞ்சு மிட்டாய் இதழ்,நிகழ்வுகள்,புத்தகங்கள் தவிர மற்ற எந்தவித குழு/இதழ்/பதிப்பகங்கள்/நிகழ்வுகள்/விற்பனையங்களுக்கு பஞ்சு மிட்டாய் இணையதளமோ அல்லது பஞ்சு மிட்டாய் நண்பர்களோ பொறுப்பேற்க இயலாது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
‘பஞ்சுமிட்டாய்’ ஆசிரியக் குழுவினரின் அறிவுக்கு எட்டிய வரையில் சரியானவை என உறுதிப்படுத்தப்பட்ட பிறகே அவை வெளியிடப்படுகின்றன. அதையும் மீறி அவற்றில் ஏதேனும் பிழையோ விடுபாடோ ஏற்பட்டால் அதற்கு தளமோ ஆசிரியக் குழுவினரோ பொறுப்பில்லை. எந்த நேரத்திலும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றித் தளத்திலும் அதன் உள்ளடக்கங்களிலும் எதையும் நீக்கவும் சேர்க்கவும் மாற்றவும் திருத்தவும் நிறுத்தவும் ஆசிரியக் குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு.
இணைய தளத்தில் கருத்துரைப் பகுதியில் இடம்பெறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர் சொந்தக் கருத்துக்களே. எங்களால் வெளியிடப்பெறும் கருத்துக்கள் தவிர மற்ற கருத்துக்களுக்கு எந்த விதத்திலும் இணைய தளமோ ஆசிரியக் குழுவோ பொறுப்பாகாது.
இணைய தளத்தில் இடம்பெறும் வெளியிணைப்புகள் தகவல் அடிப்படையிலும் மேற்கோள் காட்டுதல், நன்றி நவிலுதல் போன்ற காரணங்களுக்காகவும் சட்டப்படி/முறைப்படி காட்சிப்படுத்த வேண்டிய முறைமைக்காகவும் மட்டுமே எடுத்தாளப்படுகின்றன. அவ்விணைப்புகளுக்குரிய இணையத்தளங்களுக்கும் தளத்திற்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை. அவ்விணைப்புகள் தொடர்ந்து இயங்குவதற்கும், அத்தளங்கள், அவற்றின் உள்ளடக்கங்கள் தொடர்பாகவும் இணைய தளமோ அதன் ஆசிரியக் குழுவோ எந்த வகையிலும் பொறுப்பாக இயலாது.
நன்றி,
பஞ்சு மிட்டாய் ஆசிரியர் குழு