உலகச் சிறார் இலக்கியம் தொடர் – அறிவிப்பு

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
இலண்டன் பயணக் கட்டுரைகள் எழுத்தாளர்களுக்கு எப்போதும் பிடித்தமானது. ஏனென்றால் வரலாற்றை லண்டன் தன்னில் எப்போதும் தக்கவைத்துக்கொண்டேயிருக்கிறது. அதன் புறத்தோற்றமாகட்டும், அதன் வரலாற்று ஆவணங்களாகட்டும் தேடல் உள்ள எல்லோருக்கும் கிடைக்கும் விதத்தில் இருக்கும். நூலகங்கள் இலண்டனில் உயிர் என்று சொல்லும் அளவில் இயங்குகின்றன. சிறு வயது குழந்தைகள் முதல் பதின் வயது மாணவர்கள் வரை – நூலகங்களில் இங்கும் அங்குமாய் ஓடுவதைச் சாதரணமாகப் பார்க்கலாம்.

உலகச் சிறார் இலக்கியத்தின் வேர் இங்கிலாதிலும் உள்ளது என்று சொல்லலாம். அப்படிப்பட்ட புத்தகங்களில் சிலவற்றை, நான் கவனித்த புத்தகங்களைப் பற்றி சிறியதாக அறிமுகப்படுத்த முயற்சிக்க இருக்கிறேன். இந்தப் பட்டியல் மிக நீண்டது என்றாலும் சிறு முயற்சியாக இங்கே தொடங்க இருக்கிறேன். பள்ளிகள், நூலகங்கள், புத்தகக் கடைகள், நாடகங்கள் என சிறார் இலக்கியம் சார்ந்து எனது இலண்டன் அனுபவங்களை விரைவில் பஞ்சு மிட்டாய் இணையதளம் வழியே உங்களுடன் பகிர இருக்கிறேன்.
நன்றி,
பஞ்சு மிட்டாய் பிரபு.

Leave a comment