ஓங்கில் கூட்டம் வெளியீடுகள்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

சிறார் இலக்கியத்தில் வயதுக்கேற்ப படைப்புகள் வெளியாக வேண்டும் என்கிற வலியுறுத்தல் நீண்ட நாள்களாகவே உள்ளது. அதற்கான முயற்சிகள் அவ்வப்போது நடந்தும் வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே ‘ஓங்கில் கூட்டம்’ இயங்கிவருகிறது. நண்பர்களுடன் இணைந்து, கூட்டுழைப்பின் வழியாக பதின்பருவத்தினருக்கான புத்தகங்களை ஓங்கில் கூட்டம் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.  வாசிப்புப் பழக்கம் நோக்கி சிறாரை நகர்த்த அறிவியல், சமூகம், சூழலியல், ஆளுமைகளின் வாழ்க்கைச் சித்திரம் என வெவ்வேறு தலைப்புகளில் சிறுசிறு புத்தகங்களாக ஓங்கில் கூட்டம் வெளியிட்டுவருகிறது. இப்படி தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில், எளிமையான மொழிநடையில், அழகிய ஓவியங்களுடன் புத்தகங்களை வெளியிடுவது வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு ஒருங்கிணைக்க எழுத்தாளர்கள், ஓவியர்கள், வடிவமைப்பாளர்கள் எனப் பலரது துணையோடு ஓங்கில் கூட்டம் இயங்கிவருகிறது.

ஓங்கில் கூட்டம் இ-புத்தகங்களை அமேசான் கிண்டில் தளத்தில் வெளியிட்டு வருகிறது. அச்சு வடிவிலும் பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து வெளியிட்டு வருகிறது.

2023 ஜூன் வரை வெளியாகியுள்ள 21 புத்தகங்கள் அச்சிலும் கிண்டில் தளத்தில் வெளியாகியுள்ளன. அதன் பட்டியல் கீழே.

Set:1 (11 புத்தகங்கள்)
———————-
1. கயிறு | விஷ்ணுபுரம் சரவணன், English: Ilamparithi (Tamil & English in same book)
2. ஹம்போல்ட்- அவர் நேசித்த இயற்கை | ஹேமபிரபா
3. வாசிக்காத புத்தகத்தின் வாசனை | கொ.மா.கோ.இளங்கோ
4. தண்ணீர் என்றோர் அமுதம் | சி.வி.ராமன் – தமிழில்: கமலாலயன்
5. சோசோவின் விசித்திர வாழ்க்கை | உதயசங்கர்
6. சார்லஸ் டார்வின் – கடல் பயணங்களால் உருவெடுத்த மேதை | அன்பு வாகினி
7. கடைசி பெஞ்ச் – (இளையோருக்கான கவிதைகள்) | பெரியசாமி
8. ஓரிகாமி- காகித மடிப்புக் கலையின் கதை | தியாக சேகர்
9. ஜானகி அம்மாள் – இந்தியாவின் கரும்புப் பெண்மணி | இ.பா. சிந்தன்
10. உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி | ஆதி வள்ளியப்பன்
11. பகத் சிங் ஏன் நாத்திகர் ஆனார் | சிவ சுப்ரமணியம்

புத்தகங்களைப் பெற:  https://thamizhbooks.com/product/elaiyore-elakkiyam-set/

Set:2 (10 புத்தகங்கள்)
———————-
1. HUMBOLDT (English) | Hemaprabha Translator: Ilamparithi
2. Last Bench Poems for Teens(English) | N.Periyasamy Translated in English By Malarvizhi
3. பல்வங்கர் பலூ |இ.பா. சிந்தன்
4. Salim Ali The Birdman of India(English) | Adhi Valliappan Translator: Ilamparithi
5. சாவித்திரியின் பள்ளி & மகர்கள் மற்றும் மாங்கர்களின் துயரங்கள் | பஞ்சு மிட்டாய்’ பிரபு
6. சாக்லெட்டி இளையோருக்கான கவிதைகள் | ராஜேஸ் கனகராஜன்
7. தோபா தேக் சிங் | தமிழில்: உதயசங்கர்
8. ஆழ்கடல் சூழலும் வாழிடங்களும் | நாராயணி சுப்ரமணியன்
9. சுல்தானாவின் கனவு | தமிழில்: திவ்யா பிரபு
10. ஒலாடா | பஞ்சு மிட்டாய்’ பிரபு

புத்தகங்களைப் பெற:  https://thamizhbooks.com/product/ongil-kootam-combo/

———————-

கிண்டில் தளத்தில் பெற: https://amzn.to/3vfOvqX


புத்தகங்கள் குறித்து உரையாட: editor.oongilkootam@gmail.com , பிரபு: +91-9731736363

நன்றி.

Leave a comment