ஓங்கில் கூட்டம் – வெளியீட்டு விழா(ஏப். 04 2023) சென்னை

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக, ஓங்கில் கூட்டம் – இளையோருக்கான வெளியீடுகள் சார்ந்து பணிப்புரிந்து வருகிறது. கிண்டில் தளத்திலும், அச்சிலும் புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அச்சில் ஏற்கனவே 11 புத்தகங்கள் வெளியாகி உள்ளன. தற்போது அடுத்தக் கட்டமாக 10 புத்தகங்களை ஒன்றாக வெளியிடுகிறோம்.
இளையோர்களின் மன ஓட்டத்தைச் சார்ந்து – மறக்கப்பட்ட ஆளுமைகளின் வரலாறு, சாகசங்கள், அறிவியல், புனைவு, சிறுகதை, நாவல், கட்டுரை என பல்வேறு தலைப்புகளிலும் பல்வேறு பிரிவுகளிலும் தொடர்ந்து புத்தகங்களைக் கொண்டுவருகிறோம்.

நண்பர்களின் தொடர் ஆதரவகள் மட்டுமே தொடர்ந்து இயங்க வைக்கிறது. இதோ ஒரு புத்தக வெளியீட்டு விழாவை ஒருங்கிணைக்கிறோம். நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்புற நடைப்பெறச் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம், பாரதி புத்தகாலயம், அரும்பு சிறார் நூலகம் மற்றும் ஓங்கில் கூட்டம் இணைந்து ஒருங்கிணைக்கும்…..
ஓங்கில் கூட்டம் 10 புத்தகங்கள் வெளியீட்டு விழா
—————————————————
01. தோபா தேக் சிங் – மண்டோ, தமிழில்: உதயசங்கர்
02. ஆழ் கடல் – நாராயணி சுப்ரமணியன்
03. சுல்தானாவின் கனவு – ரொக்கேயா பேகம், தமிழில்: திவ்யா பிரபு
04. பல்வங்கர் பலூ – இ.பா. சிந்தன்
05. சாவித்திரியின் பள்ளி – ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு,
மகர்கள் மற்றும் மாங்கர்களின் துயரங்கள் – முக்தா சால்வே, தமிழில்: திவ்யா பிரபு
06. ஒலாடா – ஒரு சுதந்திர அடிமையின் போர்க் குரல் – ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு,
07. சாக்லேட்டி (இளையோருக்கான கவிதைகள்) – ராஜேஸ் கனகராஜன்
08. Last Bench (English) – Poems for teens – Periyasamy, English: Malarvizhi
09. The Birdman of India – Salim ALi – Adhi Valliyapan, English: Ilamparithi
10. Humboldt (A Scientist’s encounter with nature) – Hemaprabha, English: Ilamparithi
நண்பர்களுக்கு வணக்கம்,
ஓங்கில் கூட்டத்தின் பத்துப் புத்தகங்கள் தற்போது அச்சில் வெளியாக உள்ளன. ஏற்கனவே 11 புத்தகங்கள் சென்ற ஆண்டு வெளியாகி நல் வரவேற்பைப் பெற்றன. உங்களின் மேலான ஆதரவு இப்போதும் தொடரும் என்று நம்புகிறேன். இந்தப் புத்தகங்கள், இபுத்தகமாக அமேசான் கிண்டிலில் வெளியாகி பரவலாக வாசிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அச்சில் வெளியாகி மாணவர்களை நேரடியாகச் சென்றடைய உள்ளன.
சென்னையில், ஏப்ரல் 04(செவ்வாய்) மாலை 06 மணிக்கு ஓங்கில் கூட்டத்தின் 10 புத்தகங்கள் (இளையோருக்கான) வெளியிடப்பட உள்ளன.
நண்பர்கள் அனைவரையும் வருக வருக என்று அன்புடன் அழைக்கிறோம்.
இடம்: 7, இளங்கோ சாலை, அரும்பு சிறார் நூலகம், தேனாம்பேட்டை, சென்னை
நன்றி,
‘பஞ்சு மிட்டாய்’ பிரபு

Leave a comment