நான் இன்னொரு பாட்டு பாடவா? – ப்ரியதர்ஷனி யுவராஜ்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பஞ்சுமிட்டாயின் சமீபத்திய இதழ் கிடைக்கப்பெற்றது. அதனுடன் ‘குட்டித் தோசை’ பாட்டு புத்தகமும் வந்து சேர்ந்தது கூடுதல் சந்தோஷம். 5 வயதாகிய என் மகள் அதிகமாக பாட்டுகள் பாடுவதில்லை. நிறைய கதைகளையே விரும்புவாள். ஆனால் ‘குட்டித் தோசை’ புத்தகத்தில் உள்ள பாடல்களை நான் எனது ஆசைக்காக வாசிக்க ஆரம்பித்தவுடன் உடன் சேர்ந்துக்கொண்டு பாட (வாசிக்க) ஆரம்பித்தாள்.

முதலில் சிறிய சுலபமான பாடல்களே வேண்டும் என்று கேட்டு அதை கற்றுக்கொண்டு வீட்டில் உள்ள பெரியவர்களிடம் பாடி காண்பித்து உற்சாகமடைந்தாள். அதன் பின்னர் அப்புத்தகத்தில் உள்ள படங்களைக் கொண்டு அடுத்து பாட வேண்டிய பாடலை அவளே தேர்வு செய்து எங்களை பாடச்சொல்லி பாடினாள். இது சில நிமிடங்கள் தொடர்ந்தவுடன் திடீரென தானே ஒரு பாடல் உருவாக்கியுள்ளதாகக் கூறி அதைப் பாடவும் செய்தாள். அதை நாங்கள் வெகுவாக பாராட்டியவுடன் அவளின் சிந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் ‘நான் இன்னொரு பாட்டு பாடவா?’ என கேட்ட வண்ணமே இருந்தாள். ‘போதும் பாப்பா, மீதி பாட்ட நாளைக்குப் பாடலாம்’ என்று சொன்னதும் கவலையாக புத்தகத்தை எடுத்து வைத்தாள். மறு நாளும் பாட்டு விளையாட்டுத் தொடர்ந்தது. என் மகளின் அங்கன்வாடிக்கு அப்புத்தகத்தைக் கொண்டு போய் தன் நண்பர்களுடன் பாட வேண்டும் என்று ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளோம்.

இப்புத்தகத்தில் ஒரு பெற்றோராக என்னைக் கவர்ந்த சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

(1) குழந்தைகளுக்கு ஏற்ற இலகுவான மொழி

(2) எடுத்துக் கொள்ளப்பட்ட அனைத்துத் தலைப்புகளும் குழந்தைகள் சுலபமாக தங்களைத் தொடர்புப்படுத்திக் கொள்ளும் விதமாக அமைந்துள்ளது. இயற்கை, பறவைகள், விலங்குகள், பள்ளி, நண்பர்கள், விடுமுறை, சொந்தங்கள் என குழந்தைகள் உலகத்தில் உள்ள அனைத்தும் இடம்பெற்றுள்ளது அருமை.

(3) ஓவியங்கள் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

(4) எல்லா வயதினரும் விரும்பிப் படிக்கும் விதத்தில் உள்ளது. (5 வயதாகிய படிக்கத்தெரியாத என் மகளுக்குப் பிடித்துள்ள இப்புத்தகம், எனக்கும் பிடித்துள்ளதைக் காட்டிலும், எங்கள் வீட்டிலுள்ள பாட்டிக்கும் பிடித்துள்ளது.)

(5) நாட்டுக்கு வந்த காட்டு மிருகம், அம்மாவின் புடவையும் ஜீன்ஸும், குட்டித் தோசை போன்றவை தற்காலத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டது அருமை. இனி எழுதப்படும் பாடல்கள் இவ்வாறாக அமைதல் சமுதாயத்திற்கே ஒரு ஏற்றமாக அமையும் என்பது உறுதி.

இவ்வாறான முயற்சிகளில் நிறைய தடைகளும், சிரமங்களும் இருந்திருக்கும் என்பது உறுதி. அவற்றையெல்லாம் மீறி இந்த படைப்பை குழந்தைகளின் கைகளில் தவழவிட்டதற்கு நன்றிகள் பல!

We recently received the latest issue of ‘Panchumittai’, children’s magazine. To our surprise, it brought along a book ‘Kutti Thosai’ with a handful of wonderful songs for children. My 5-year-old daughter is more fascinated with stories than songs/poems. Yet, when I opened and read it for myself, she willingly joined on her own to sing (read) with me. Initially, she was particular about reading only tiny ones from the book and reproducing the same to all elders at home with enthusiasm. Slowly, seeing those pictures in the book, she decided which one to sing next. As this continued for a few minutes, she exclaimed that she had composed a tiny song on her own and started singing. As we poured in our appreciation, she was excited and asked if she could sing more on her own. When we said its time and it could be continued the next day, she reluctantly kept the book aside. This activity continued the next day. We all agreed to take that book to my daughter’s Anganwadi where she could enjoy the same with her peer group.

As a parent, I would like to share a few things about the book.

(1) It has an easy flow of language

(2) The topics chosen such as nature, birds, animals, friends, relatives, the school are all so relatable to kids and finely portray children’s world

(3) The sketches are so apt for every song

(4) It uniformly attracts readers of all ages (starting from my 5-year-old kid to me to grandparents)

(5) There are a few topics that are written keeping contemporary changes in mind. There is no doubt that such attempts would easily create a difference in future and in society at large.

It is very certain that there would have been a lot of challenges and difficulties in the process of bringing this book to circulation. Our heartfelt thanks to you and the team for having brought this book to all our hands, despite every hardship. Kudos to you! And we wish you the best!

நன்றி,

ப்ரியதர்ஷனி யுவராஜ்

Leave a comment