கல்வி சார்ந்த நூல்கள் – ஒரு கண்ணோட்டம்

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்

புதிய கல்விக்கொள்கை -2020 வெளியான பிறகு இந்தியக் கல்வியின் செல்நெறி, கொள்கை, ஆசிரியத்துவம், பள்ளிகள் -உயர்கல்வி நிலையங்களின் இன்றைய நிலை, அவற்றின் போதாமைகள், தர நிர்ணயங்கள் குறித்த விவாதம் மேலெழுந்துள்ளது. விடுதலைக்கு முன்பு காலனி ஆதிக்கக் கண்ணோட்டத்தில் கல்வி வழங்கப்பட்டு வந்ததை அறிவோம். விடுதலை பெற்ற பின் 73 ஆண்டு காலத்தில் கல்வி வரலாற்றின் செல்நெறி எதை நோக்கியதாக உள்ளது?  விடுதலைப் போரின் கனவுகள், விழுமியங்கள், இந்திய மக்களின் பன்முகத் தன்மைகள் – ஆகிய இவை எல்லாம் கல்வியில் பிரதி பலித்துள்ளனவா?  இன்று ஆரவாரத்துடன் முன்வைக்கப் பட்டுள்ள ‘புதிய’ கல்விக்கொள்கை உண்மையிலேயே புதிய  கொள்கைதானா? வரப்போகும் ஆண்டுகளில் , இந்தியக் குழந்தைகளுக்கு இக்கொள்கை வழங்கப் போவது எதை? இன்று பெரிதும் கொட்டி முழக்கப்படும் ‘தரம்’ என்பதுதான் என்ன? யாருக்கான கல்வி இப்போது புதிய கொள்கையில் முன் மொழியப் படுகிறது?  இவ்வாறான பல கேள்விகள் முன்னுக்கு வந்துள்ளன. கல்வி தொடர்பாக வெளியாகிக் கொண்டிருக்கும் நூல்களின் துணையோடு இவற்றுக்கான விடைகளை நாம் தேட வேண்டியுள்ளது. அதற்கான ஒரு முன்னோட்ட முயற்சியாக கல்வி நூல்கள் குறித்து ஓர் உரையாடலை பஞ்சு மிட்டாய் தொடங்குகிறது. வாருங்கள், நண்பர்களே, மனம் திறந்து உரையாடுவோம்…

நன்றி,
கமலாலயன்

Leave a comment