குழந்தைகள் உலகம்: விளையாட்டும் கலைகளும் – இனியன்

வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

முதலில் இரண்டு விங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

குழந்தைகளிடம் பழகும் போது நாங்கள் கேட்கக்கூடிய கேள்வி : ” கதைகள் எங்கெல்லாம் இருக்கின்? ”

இந்தக் கேள்விக்குப் பதிலாக “எல்லா இடங்களிலும் கதைகள் இருக்கின். எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கின். காதுகள் எங்கெல்லாம் இருக்கின்னவோ அங்கெல்லாம் கதைகள் இருக்கின்ன”. என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தேன்.

ஒருமுறை, எட்டாம் வகுப்புப் படிக்கும் குழந்தை சொன்ன பதிலைக் கேட்ட பிறகு, இன்றைக்கு வரை நான் அந்தக் குழந்தை சொன்ன பதிலையே வெளியே சொல்லி வருகிறேன்.

அந்தக் குழந்தை சொன்ன பதில், “காற்று எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் கதைகளும் இருக்கும் “. காற்று இல்லை என்றால் மனிதர்களால் இருக்கமுடியாது. அதேபோல் கதை இல்லை என்றாலும் இருக்க முடியாது.. இது மிக முக்கியமான பதில்.

ஒருமுறை நாடக ஆசிரியர் அண்ணன் விஜயகுமார் குழந்தைகளுக்கான நாடக ஒருங்கிணைப்பு குறித்து பேசும்போது நாடகத்தை ஏன் ஆங்கிலத்தில் ப்ளே (Play) எனச் சொல்கிறோம் என்று கூறினார். நாடகத்திற்கு அடிப்படை விளையாட்டுகள்தாம். நாடகத்திற்குப் பயிற்சி கொடுக்கும் போது, முதலில் விளையாட்டில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். விளையாட்டுகளே குழந்தைகளையும், நாடகத்திற்கு வர வேண்டும் என்று நினைக்கிற மற்ற கலைஞர்களையும் கூட ஈர்த்துவிடும் என்றார்.

உலகில் பிறக்கக்கூடிய ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கலை அவசியம் என்பதை திடமாக நம்பக் கூடிய அளவிற்கு வாழ்வியல் அம்சங்களை நாம் கொண்டிருக்கிறோம். அந்தக் கலை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், வாசித்தலும் கூட ஒரு கலை தான். கலைகளை ஒருங்கிணைப்பதற்கு விளையாட்டுகள் மிகவும் முக்கியமானதாக இருக்கின் என்பதை நான் திடமாக நம்புகிறேன்.

இந்தச் சம்பவம் நடந்து ஆறு வருடத்திற்கு மேல் ஆகின்றது. பொள்ளாச்சி நிகழ்வு அது. கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் நிறைந்த அரங்கில் 60 குழந்தைகளை மட்டும் தனியாக மைதானத்தில் விளையாட வைத்தோம்.

என்னளவில் வீட்டையும், வகுப்பறையையும் விட்டு வெளியே வந்த பிறகு மைதானத்தில் இருந்து தான் விளையாட்டைத் தொடங்க வேண்டும் என்பதை திடமாக நம்புகிறேன். இதை மனதில் வைத்து பாலினப் பாகுபாடின்றி அனைத்துக் குழந்தைகளையும் மிகவும் எளிமையான விளையாட்டாகொலை கொலையா முந்திரிக்காபோன்ற விளையாட்டுகளை விளையாட வைத்தோம்.

இதுவரைக்கும் அந்த விளையாட்டை நாம் அப்படி அணுகியிருக்கிறோமா?

ஏன், அந்த விளையாட்டை உருவாக்கியவர்கள் கூட அப்படி அணுகி இருப்பார்களா என்னும் ஆச்சர்யத்தைதான் அந்தக் குழந்தைகள் கொடுத்தார்கள். அவ்வளவு அழகாகவும் விளையாடினார்கள்.

விளையாடி முடித்த பிறகு குழந்தைகளுடன் உரையாடல் நடத்தினோம். இந்த விளையாட்டு புரிந்ததா? யாரெல்லாம் இந்த விளையாட்டை ஏற்கனவே விளையாடி இருக்கிறீர்கள்? புதிதாக விளையாடியவர்கள் யார்? என்று கேட்டதற்கு, அறுபதில் இரண்டு குழந்தைகள் மட்டுமே இந்த விளையாட்டை ஏற்கனவே விளையாடியதாகவும், மீதி உள்ள 58 பேரும் இந்த விளையாட்டு அறிமுகமே இல்லை, முதல் முறையாக விளையாடுகிறோம் என்றும் கூறினார்கள்.

இந்த விளையாட்டை எப்படி உணர்ந்து கொண்டீர்கள்? என்று கேட்கும்போது, ஏழாம் வகுப்புக் குழந்தை ஒருவன் சொல்கிறான் : “நான்கு விஷயங்களை நான் இந்த விளையாட்டில் இருந்து தெரிந்து கொண்டேன். ஆரோக்கியம்(Health), இரண்டாவது ஒற்றுமை (Unity), மூன்றாவது கவனத்தை ஒருமுகப்படுத்தல் (Concentration), நான்காவது தன்னம்பிக்கை (Self Confidence) போன்ற விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்” என்றான்.

இதையெல்லாம் எப்படி நீ இந்த விளையாட்டில் உணர்ந்தாய்?”

ஒவ்வொன்றுக்கும் ஓர் உதாரணத்தைச் சொன்னான்.ஓடிக்கொண்டே இருக்கிறோமா, ஓடும் போது நம்முடைய ஹெல்த் நன்றாக இருக்கும். அதே மாதிரி ஒரு பந்து கொடுத்தீங்களே அதை யார் மேலே தூக்கிப் போடுவது என்று சிந்தித்துக் கொண்டே ஓடி உடனே அதைத் தூக்கியும் போடணும், ஒரே நேரத்துல இரண்டு வேலைகள் செய்யும்போது Concentration ஆக மாறுகிறது. இவ்வளவு பேர் மத்தியில் நான் தொடாமல், அவுட் ஆகாமல் போய் உட்கார வேண்டும்.அதைத் தன்னம்பிக்கை இருந்தால்தான் செய்ய முடியும் . எல்லாரும் ஒன்றாக விளையாடுவதே ஒற்றுமைதானே.

இது நாள் வரைக்கும் அந்தவொரு விளையாட்டை இந்தப் பார்வையில் நாம் யாராவது பார்த்திருப்போமா என்றால், நிச்சயம் யாருமில்லை. அப்படிப் பார்க்கக் கூடிய சிந்தனைதான் குழந்தைகளுடைய சிந்தனைகள். ந்தப் புள்ளியிலிருந்து பார்த்தோமென்றால் குழந்தைகள் மத்தியில் விளையாட்டானது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அதுவும் அறிமுகமாகாத, புதியதான ஒரு விளையாட்டை அறிமுகப்படுத்திய பிறகு, எப்படிச் சிந்திக்கிறார்கள் குழந்தைகள் என்கிற ஒரு புள்ளி ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. இப்படியான பல ஆச்சரியங்களைக் குழந்தைகள் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

அடுத்தது, ஆசிரியர்கள் கதை சொல்லிகளாக மாற வேண்டும் என்பதே.

என்னுடைய ஓர் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். நிறைய கதை சொல்லக்கூடிய ஆசிரியர்தான். ஆனால் ”மாணவர்களுள் நான்கு பிள்ளைகள் என்னிடம் ஒன்றவே இல்லை; கொஞ்சம் கவனியுங்கள்” என்கிற குறைபாட்டை என்னிடம் சொன்னார்.

அவர்களுடன் விளையாட ஆரம்பித்தேன். ”நான் உங்க கூட விளையாடுகிறேன், நம்ம கூட உங்க ஆசிரியரும் விளையாட வேண்டும்;ஆசிரியரைப் பிடித்துக் கொண்டு வாங்க” என்றேன். பிள்ளைகள் அவரை குண்டுக்கட்டாகத் தூக்கி வந்து விட்ட பிறகு, அவரும் எங்களுடன் சேர்ந்து விளையாடியே ஆகவேண்டும் என்கிற நிலைப்பாட்டைக் கொண்டு வந்தேன்.

ஒன்றாகச் சேர்ந்து மைதானத்தில் விளையாடிய பிறகு அடுத்தடுத்த நாட்களில் நெருக்கமாகி விட்டார்கள். நான்கு பேரில் மூன்று குழந்தைகள் பழக ஆரம்பித்துவிட்டதாகச் சொன்னார் அந்த ஆசிரியர் . அந்த நெருக்கம் குழந்தைகளோடு சேர்ந்து குட்டிக்கரணம் அடித்துக் கீழே விழும் பொழுது சிரிப்பதாகவும், அதே சமயம் நமக்காகத் தான் ஆசிரியர் விளையாடுகிறார் என்கிற நிலைப்பாடாகவும் குழந்தை உணர்ந்து விடுகிறது. ஆனால், விளையாடிய பிறகும் னால்வரில் ஒரு குழந்தை அப்படியேதான் இருப்பதாகக் கூறினார்.

இந்த மாதிரியான தனித்துவம் மிக்க குழந்தைகளைப் பார்க்கும் போது, நாம் தொடர்ந்து அவர்களிடம் பேச வேண்டும். அந்த குழந்தைக்கு என்ன சிக்கல் இருக்கிறது என்று பேசிப் பாருங்கள்” என்றேன்.

ஆசிரியர் குழந்தையிடம் பேசிய பிறகு, குடும்பச் சிக்கல் காரணமாக குழந்தை அப்படி இருக்கிறது என கண்டறிந்தார். அவற்றைக் களைவதற்கு என்ன உதவி செய்யலாம்,அதற்கு என்ன தேவைகள், அவற்றை எப்படி நிறைவு செய்யலாம் என்கிறவற்றை அறிந்து செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது அந்தக் குழந்தை நாளடைவில் சரியாகிவிடும். இது ஒரு செயல்முறை (Process). இந்தச் செயல்முறைக்கான தொடக்கப்புள்ளியே விளையாட்டுதான்.

அதேநேரம் இங்கே இருக்கக்கூடிய ஒரு சிக்கலை, தொடர்ந்து பல கிராமங்களில் பார்த்துக் கொண்டே வருகிறேன். குறிப்பாக மாநில எல்லையோரப் பகுதிகளில், குழந்தைகள் மத்தியில் இருக்கிற சமூகச் சிக்கல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

குழந்தைகளுக்கான கலை இலக்கியக் கொண்டாட்டம், நிகழ்வுகளை நடத்த வேண்டுமென்றால முன்னமே அந்த ஊரில் 30-40 நாள் தங்கிவிடுவேன். அங்கிருக்கும் மக்களோடு பேசிப் பழகுவேன். குழந்தைகளை ஒருங்கிணைக்க விளையாட்டை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்வேன்.

ஒவ்வோர் ஊரிலும் போய்த் தங்கும் போது முதல் ஐந்து நாள்கள் மிகப் பெரிய போராட்டமாக இருக்கும். அந்தப் போராட்டமானது எதைக் குறித்ததென்றால் ‘அந்தத் தெருப் பசங்க இந்தத் தெருவுக்குள் வரக் கூடாது. அந்த ஊர்ப் பசங்க இந்த ஊருக்கு வரக் கூடாது. நாங்கள் பொதுவாக ஓரே இடத்தில் உட்கார மாட்டோம். இந்தத் தெருவில் முதலில் விளையாடுங்க, இதை முடித்து விட்டு அடுத்த தெருவுக்குப் போய் விளையாட்டுகள் கற்றுக்கொடுங்க.’ இப்படியான உரையாடல்கள் அந்த ஊர்ப் பெரியவர்களிடமிருந்து தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

குழந்தைகளை ஒருங்கிணைக்கும் போது அவர்களுக்குள்ளே உள்ள இத்தகைய பாகுபாடுகளை விளையாட்டுகள் மூலமாகக் களையப் பெரும் முயற்சி செய்யவேண்டும். “உங்களுக்கு எதையும் கற்றுத் தர வரவில்லை. உங்களுக்கு அறிவுரை சொல்லவும் வரவில்லை; உங்களோடு விளையாட மட்டும்தான் வந்திருக்கிறோம் என்று குழந்தைகளை ஒன்றாக அழைத்து, பாகுபாட்டின் பிம்பத்தை உடைத்து இரண்டு பகுதிக் குழந்தைகளையும் ஒன்றாக விளையாட வைப்பதற்கு ஒருவாரத்துக்கு மேல் நேரம் எடுக்கும்.

இப்படியாக ஒருங்கிணைத்த பிறகு,அவர்களுக்குப் புத்தங்களைக் கொடுப்பது, அவற்றை வாசிப்பது, கலை வெளிப்பாட்டுத் திறமைகளுக்குத் தயார்படுத்தி, அவர்களின் திறமைகளுக்கான மேடையை அமைத்துத் தருவதுஇப்படி அனைவரையும் ஒருங்கிணைப்பதற்கான ஒரு கருவியாக இருப்பது விளையாட்டுதான்.

இந்த மாதிரியான சமூக சிக்கல்களைக் களைவதற்கும் விளையாட்டுதான் கருவி என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன். விளையாட்டுகள் பொதுவாக என்னவாகக் கட்டமைக்கப்படுகின் என்று ஆராய்ந்தால், கடந்த 200 ஆண்டு காலமாக விளையாட்டுப் போட்டிகளின் உச்சம், பரஸ்பரம் எதிரிகளைச் சந்திப்பது போன்ற பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டே இருக்கின். நாமும் அதில் பங்காளர்களாகத் தாம் இருக்கிறோம். அதைக் கலைத்துஆரோக்கியமான ஒரு சமூகத்துக்கான விஷயமாக விளையாட்டு பார்க்கப்பட வேண்டிய சூழல் இருக்கிறது.

இதையெல்லாம் ஒருங்கிணைத்து விளையாடி முடித்த பிறகு, அடுத்தது என்ன என்கிற ஆவல் குழந்தைகளிடத்தில் தோன்றும்.

அதில் கதைகள் மிகப்பெரிய கதாபாத்திரத்தை எடுத்துக் கொள்கின். நமக்குத் தெரிந்த கதைகளைச் சொல்லி விட்டு,அவர்களிடமிருந்தும் உங்களுக்குத் தெரிந்த கதைகளைச் சொல்லுங்கள் எனச் சொல்லி, கேட்கலாம், இதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டு சென்று கலைகளுக்கு உள்ளே போகலாம். எல்லாமே சங்கிலித்தொடர் போன்று ஒவ்வொன்றும் பின்னிப் பிணைந்தவை.

இவை அனைத்தையும் குழந்தைகளிடம் எடுத்துச் செல்ல ஒரு கொண்டாட்ட மனநிலை தேவைப்படுகிறது. ஒவ்வொரு காலத்திலும் அந்தந்தக் காலத்திற்கு ஏற்றாற்போல் சுய கொண்டாட்டங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்.

குடும்பங்களுக்குள்ளே, நகரங்களுக்குள்ளே, கிராமங்களுக்குள்ளே கொண்டாட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின். அவையனைத்தும் குழந்தைகளுக்கு ஏற்றாற்போல் இருக்கின்வா ? என்று கேட்டால், இது மிகப் பெரிய கேள்வியாக இருக்கும்.

அந்த இடத்தில்தான் பொதுவான கொண்டாட்டமுறை தேவைப்படுகிறது. ”இது உங்களுக்கான மேடைதான், இதில் நீங்கள் இல்லையென்றால் வேறு யாரும் கிடையாது. உருவத்தில் பெரியவர்களாக இருக்கக்கூடிய நாங்கள் அத்தனை பேரும் உங்களிடம் விளையாடி, பேசி, கலைகளை அறிமுகப்படுத்தத் தான் வந்திருக்கிறோம். எந்தவிதமான தடைகளும் உங்களுக்கு இங்கே கிடையாது, எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நினைக்கிறீர்களோ அவ்வளவு கொண்டாட்டங்களைச் செய்யுங்கள். நீங்களே அவற்றை எடுத்துக்கொள்ளுங்கள், உருவாக்கிக் கொள்ளுங்கள்” என்கிற புரிதலை ஏற்படுத்தி விட்டாலே போதுமானது. அதிலிருந்து வேறு ஒரு பரிமாணத்தைக் குழந்தைகள் அடைந்ததாக இருக்கும். இதற்கெல்லாம் அடிப்படையாக விளையாட்டை எடுக்க வேண்டியுள்ளது.

அடுத்ததாக, பல நண்பர்கள் தொடர்ந்து சிறார் இலக்கியத்தில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள், விளையாட்டுகள் சுருங்கிப் போய் தேக்க நிலையை அடைந்திருக்கிற இந்தக் காலக்கட்டத்தில், அவர்கள் எழுதக்கூடிய கதைகளிலும், புத்தகங்களிலும் குழந்தைகளுக்குத் தெரியாத விளையாட்டுகள் அல்லது தெரிந்த ஏதாவதொரு விளையாட்டை மையப்படுத்தியோ, அறிமுகப்படுத்தியோ அல்லது அதை விளையாடும் முறை, அதை எப்படிச் செய்ய வேண்டும், அதற்கான காரணம் என்ன என்பதை எழுதவேண்டும்.

ஆனால், கொரோனா காலம் எல்லாக் கட்டமைப்புகளையும் உடைத்திருக்கிறது, கைபேசியில் விளையாட்டுகள் அதிகரித்திருந்தாலும் கிராமங்களிலுள்ள குழந்தைகள் அதிக அளவில் திண்ணைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதுவரையில் முயற்சி செய்திராத விளையாட்டுகளை,புதுவித விளையாட்டுகளை தங்களுக்குள்ளாகவே உருவாக்கி விளையாடுகிறார்கள். குழந்தைகளின் நிலை மாற்றம் அடைந்திருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் பதின்பருவ பிள்ளைகள் செல்போனும் கையுமாக இருக்கிறார்கள். இதை உடைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இதை ஒரு தொடர் உரையாடலாகவே நானும் அண்ணன் விஷ்ணுபுரம் சரவணனும் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். அதாவது பதின்பருவ இளைஞர்களுக்கான படைப்புகளாக என்னென்ன பண்ணலாம், தமிழ் இலக்கியச் சூழலில் இப்போதுதான் வானம் மூலமாக இரண்டு புத்தகங்கள் வரப்போகின். அதை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

பதின்பருவத்துக் குழந்தைகளிடம் உள்ள சிக்கல்களும் அவர்களை விளையாட்டுகள் மூலமாக ஒன்றிணைப்பதும் பெரிய சவாலாகவே உள்ள என்பதுதான் எனது அனுபவம்.

இருபாலர் பயிலும் பள்ளிகளில் ‘வாருங்கள், விளையாடலாம்’ என்று அழைத்தால் குழு குழுவாகப் பிரிந்து விடுவார்கள். பதின்பருவத்துப் பெண் குழந்தைகள் ஒரு குழுவாக, ஆண் பிள்ளைகள் ஒரு குழுவாகப் பிரிந்து விடுவார்கள். எங்களுக்கு விளையாடப் பிடிக்கவில்லை என்று ஒதுங்கி விடுவார்கள், நாங்கள் விளையாட ஆரம்பித்த பிறகு சில பேர் வந்து இணைந்து கொள்வார்கள். இப்படி ஒதுங்கி நிற்கும் பதின்பருவத்துக் குழந்தைகளை உள்ளே கொண்டு வருவதற்கான செயல்வடிவம், திட்டமிடல் என்னவாக இருக்கும் என்பதையெல்லாம் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்.

பதின் பருவத்துக்கு உண்டான கூச்சம், தேக்கநிலை, ‘நான் அந்தப் பையனோடு விளையாட வேண்டுமா? தவறாக நினைப்பார்களா? என்பதில் தொடங்கி, விளையாட்டில் கைகளையோ, உடலையோ தொடுவது இயல்பாக இருக்கிற போது அவற்றைத் தவறான பார்வையால் அணுகும் சமூக மனநிலையை எப்போது உடைக்க போகிறோம்? இதற்கான கற்பித்தல்களை எப்படியெல்லாம் கொண்டு போகப் போகிறோம் என்கிற கேள்வி அனைவரிடத்திலும் இருக்கிறது.

இந்தக் கட்டமைப்புகளை உடைப்பதற்கான மாற்றங்களை எவ்வாறு செய்வதென்றால் பள்ளிகள், வகுப்பறைகள், ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் அரசாங்கம் என்ன மாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதில் இருந்து தொடங்குவது முக்கியம். அரசு அரசியல் ரீதியான உறுதியுடன் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். அவற்றை ஆய்வுக்கு உட்படுத்திக் கடைப்பிடிக்க வேண்டும்.

அரசாங்கத்தையும் அரசியல் கொள்கைகளையும் ஏன் கருத்தில் கொள்ள வேண்டும் என்றால், இன்று பல பள்ளிகளில் மைதானங்கள் இல்லாத நிலை இருக்கிறது. அப்படியே மைதானங்கள் இருந்தாலும் தேர்வின் பயத்தைக் காண்பித்து, குறிப்பாக பதின்பருவத்துக் குழந்தைகள் மைதானத்தில் விளையாட விடாமல் தடுக்கும் நிலை இருக்கிறது. காலக் கட்டாயம், காலத் தேவை என்கிற பயத்தில் முடக்கி வைத்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் சரி செய்ய அரசாங்கமும், அதைச் சார்ந்த துறைகளும்,அவற்றின் கொள்கை முடிவுகளுமே முன்வரவும், சரிசெய்யவும் வேண்டும். விளையாட்டிற்கான முக்கியத்துவத்தைக் கொடுத்து, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தினாலே விளையாட்டு, கதை, கலை, மானுடம், சகமனித அன்பு இவற்றை நோக்கிப் பயணமாகும். அப்போதுதான் குழந்தைகளிடம் இருந்து ஆரம்பித்து பதின்பருவத்துக்கு வந்து விட்டாலே சக உயிரின அன்பு அந்த நிலையில் பரிணாமம் அடையும். இச்செயல்பாடுகளும் ஒரு சங்கிலித்தொடர்தான். இவற்றைச் செய்வதற்கு அரசும் அரசியல் ரீதியான உறுதியான முடிவுகளும் தேவை.

பதின்பருவத்துக் குழந்தைகளுக்கு விளையாட்டுகள் மிகவும் முக்கியம். விளையாடிக் களைத்துப் போன பிறகு அவர்களுக்கான பாடத் திட்டத்தைக் கற்பிக்கலாம். உடலளவில் விளையாடிக் களைத்துப் போகாமல் மனதளவில் அழுத்தத்தை மட்டும் கொடுக்கிற தற்போதைய நிலையை மாற்ற வேண்டும். அடிப்படைத் தேவை பள்ளிகள் தோறும் மைதானங்கள் வேண்டும். மைதானத்தில் குழந்தைகளின் கால்கள் பட வேண்டும். சிராய்ப்பு, கீழே விழுவது, அடிபடுவது போன்ற அனுபவங்களை உணர்ந்து அவர்கள் அதிலிருந்து மீண்டு வர வேண்டும்.

பெரும்பாலான பெற்றோர்கள் பெரும்பாலும் என்னிடம் சொல்வது, ’என்னுடைய குழந்தைக்கு கதை சொல்ல, கதை கேட்க, சரியாக பேசத் தெரியவில்லை, அவர்களுடன் என்ன விளையாடுவது என எங்களுக்குப் புரிவதில்லை என்பதே. இவ்வாறு சொல்பவர்களிடம், நான் சொல்வது ‘ஏதாவது விளையாடுங்கள்’ என்பதே.

சரி, எப்படி விளையாட வேண்டும்?”

வீட்டுக்குள் போனதும் தினமும் 2 மணி நேரம் குழந்தைகளுக்காக ஒதுக்குங்கள். உங்களின் அலைபேசியை இரண்டு மணிநேரமாவது சுவிட்ச் ஆப் செய்து வையுங்கள். அந்த நேரத்தில் பெற்றோராக இல்லாமல் கோமாளிகளாக அவர்களோடு இருங்கள், அரிதாரம் பூசியவர்கள் மட்டும்தாம் கோமாளிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னெல்லாம் விளையாடலாம் என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் சிறுவயதில் விளையாடிய விளையாட்டுகளைச் சிந்தித்து அவர்களிடம் விளையாடுங்கள். பிறகு அவர்கள் உங்களுக்கு சில விளையாட்டுகளைச் சொல்லித் தருவார்கள். இந்தக் கட்டமைப்பை நாம்தான் உருவாக்க வேண்டும். பேசுவதற்கும், செயல்படுவதற்கும் உரிய விரிந்து பரந்தவெளி நம் கண் முன்னே தான் இருக்கிறது.

அனைவரும் கரங்களைக் கோர்த்து ஒன்றிணைந்த செயல் வடிவங்களில் செயல்படும்போது, குறைந்தபட்சம் நம் கண்முன்னே வருகிற குழந்தைகள் மாறுவதைக் கண்டு மகிழ்ச்சியை அனுபவிப்போமாக.

காணொலி பதிவு :

குறிப்பு:

சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் சார்பாக சிறார் கலை இலக்கியச் சந்திப்பு இணைய வழியே நடைப்பெற்றது. மொத்தம் 10 அமர்வுகள், 20க்கும் மேலான சிறப்புரைகள் என மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. நிகழ்வின் உரைகளை இங்கு பஞ்சுமிட்டாய் இனையத்தில் ஆவணப்படுத்துகிறோம்.

வீடியோ பதிவுகளாக காண: Click here.

கட்டுரைகளுக்கு : Click here.

Leave a comment