1980களில் தமிழ்க் குழந்தை இலக்கியம் சில பதிவுகள்.

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

கட்டுரை முன் குறிப்பு: 1980களில் நடந்த குழந்தை இலக்கிய மாநாட்டில் குழந்தை இலக்கிய கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்கள் “வளர்ந்து வரும்‌ குழந்தை இலக்கியம்‌” என்ற தலைப்பில் உரையாடியது புத்தகமாக வெளியானது. அதன் பகுதிகள் நமது பஞ்சு மிட்டாய் இணையத்தில் தொடர்ந்து வெளியிட திட்டமிட்டுள்ளோம். வரலாற்று ரீதியாக தமிழ் குழந்தை இலக்கியம் வளர்ச்சியை பற்றி தெரிந்துக்கொள்வதற்காக இங்கு பதிவு செய்கிறோம். முதல் பதிவாக புத்தகத்தின் முன்னுரையை பகிர்கிறோம். 

1950-ஆம்‌ ஆண்டில்‌ சென்னை நகரில்‌, ஓர்‌ உயர்நிலைப்‌ பள்ளியில்‌, குழந்தை எழுத்தாளர்‌ சங்கம்‌ ஒரு குழந்தைப்‌ புத்தகக்‌ காட்சியை நடத்தியது. தமிழ்‌ நாட்டில்‌ முதல்‌ முதலாக நடந்த குழந்தைப்‌ புத்தகக்‌ காட்சி அதுதான்‌!

புத்தகங்கள்‌ காட்சியாக வைக்கப்பெற்றிருந்தன. ஆயினும்‌, அவையாவுமே தமிழ்ப்‌ புத்தகங்கள்‌ அல்ல. தமிழிலை வெளிவந்திருந்த குழந்தைப்‌ புத்தகங்களால்‌, ஓர்‌ அறையில்‌ பாதியைக்கூடச்‌ சரிவற நிரப்ப முடியவில்லை அவ்வாறு பாதி அறையை நிரப்பிய புத்தகங்‌களிலும்‌ பெரும்பாலானவை மிகச்சிறிய அளவில்‌. மலிவான தாளில்‌, படங்களே இன்றி அச்சிடப்பெற்றிருந்தன. அந்த அறையின்‌ மறுபாதியில்‌, குழந்தைகளுக்காக அக்காலத்தில்‌ வெளிவந்த மாத, வார இதழ்களும்‌, மாணவர்கள்‌ தயாரித்த பல கையெழுத்து ஏடுகளும்‌ இடம்‌ பெற்றிருந்தன. மற்ற ஐந்து அறைகளிலும்‌ இங்கிலாந்து, அமெரிக்கா ரஷ்யா, ஃபிரான்ஸ்‌ ஜெர்மன்‌, ஐப்பான்‌ முதலிய வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பெற்ற குழந்தைப்‌ புத்தகங்களையும்‌ கருத்தையும்‌ கவரும்‌ வகையில்‌ காட்சியளித்துக்கொண்டிருந்‌தன.

அப்புத்தகக்‌ காட்சியைக்‌ காண நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன்‌, எழுத்தாளர்களும்‌, ஓவியர்களும்‌, பதிப்பாளர்களும்‌, பள்ளிஆசிரியர்களும்‌, பெற்றோர்களும்‌ வந்திருந்தனர்‌. அவர்களில்‌ பலர்‌, வெளிநாட்டுப்‌ புத்தகங்களுடன்‌ நம்‌ தமிழ்‌ மொழிப்‌ புத்தகங்களை ஒப்பிட்டுப்‌ பார்த்து, “எந்தக்‌ காலத்தில்‌ இத்தகைய புத்தகங்களையெல்லாம் வெளியிடப் போகிறோமோ” என்ற ஏக்கத்தை வெளியிட்டனர்‌. தமிழிலும்‌ குழந்தை நூல்கள்‌ அச்சு அமைப்பில்‌ சிறந்து விளங்க வேண்டும்‌. பல துறைகளிலும்‌ வெளிவர வேண்டும் என அவர்கள் ஆசைப்பட்டனர்‌, அவர்களின்‌ ஆசை படிப்படியாக நிறைவேறி வருகிறது. அப்போது பாதி அறையைச்கூட நிரப்ப முடியாமல்‌ இருந்த குழந்தைப்‌ புத்தகங்கள்‌, இன்று(1980 களில் நடந்த நிகழ்வு) அந்த ஆறு அறைகளையும்‌ நிரப்பக்‌ கூடிய அளவில்‌ பெருகியுள்ளன. ஆம்‌, இன்று தமிழில்‌ 1709 க்கு மேற்பட்ட குழந்தைப்‌ புத்தகங்கள்‌ வெளிவந்துள்ளன! கவிதை, சிறுகதை, புதினம்,‌ நாடகம்‌, வாழ்க்கை வரலாறு, விஞ்ஞானம்‌ எனப்‌ பல துறைகளிலும்‌ வெளிவந்துள்ளன. உள்ளடக்கம்‌, அச்சு அமைப்பு ஆயைவற்றிலும்‌ நல்ல முன்னேற்றம்‌ காணப்படுகிறது. இவ்வாறு வளர்ந்து வரும்‌ குழந்தை இலக்கியம்‌ குறித்து, சென்னைப்‌ பல்கலைக்‌ கழகத்தில்‌ மூன்று நாட்கள்‌, ஒவ்வொரு நாளும்‌ ஒரு மணி நேரம்‌ உரை நிகழ்த்தும்‌ நல்வாய்ப்பு எனக்குக்‌ கிடைத்தது.

தமிழ்‌ இலக்கிய உலகுக்கு ஏற்றம்‌ அளித்தவரும்‌, எண்ணற்ற வாசகர்களை உருவாக்கி அவர்களது இதயத்தில்‌ நீங்காமல்‌ நிற்பவரும்‌, எழுத்தாலும்‌ பேச்சாலும்‌ செயலாலும்‌ பொதுநலத்‌ தொண்டுகள் பல புரிந்தவருமாகிய கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின்‌ நினைவாக அமைக்கப்பெற்ற அறக்கட்டளையின்‌ ஆதரவில்‌, “வளர்ந்து வரும்‌ குழந்தை இலக்கியம்‌” என்ற தலைப்பில்‌ உரையாற்றும்‌ அரியதொரு வாய்ப்பினை எனக்களித்ததற்கும்‌, அந்த உரையை நூல்‌ வடிவில்‌ வெளியிட அனுமதி வழங்கியதற்கும்‌ சென்னைப்‌ பல்கலைக்‌ கழகத்திற்தம்‌, அதன்‌ துணைவேந்தர்‌ உயர்திரு. ஜி.தாமோதரன்‌ அவர்‌களுக்கும்‌, சொற்பொழிவு நடந்த மூன்று நாட்களும்‌ தலைமை தாங்கிச்‌ சிறப்பித்த சென்னைப்‌ பல்கலைக்‌ கழகத்‌ தமிழ்த்துறைத்‌ தலைவா் டாக்டர்‌ சி.பாலசுப்பிரமணியன்‌ அவர்களுக்கும்‌ தொடர்ந்து மூன்று நாட்களும்‌ வருகை தந்து சொற்பொழிவினைக்‌ கேட்டு எனக்கு உற்சாகமூட்டிய இலக்க அன்பர்களுக்கும்‌ என்‌ மனங்கனிந்த நன்றியைத்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறேன்‌.

சிறந்த பல குழந்தை நூல்களை இயற்றிக்‌ குழந்தை இலக்கியத்‌ திற்கு ஆக்கமளித்து வருபவரும்‌, தலைமைப்‌ பதிப்பாசிரியராயிருந்து குழந்தைகள்‌ கலைக்களஞ்சியத்தைப்‌ பலரும்‌ பாராட்டும்‌ வகையில்‌ மிகச்சிறந்த முறையில்‌ உருவாக்கியவரும்‌, “கல்கி” அவர்களின்‌ நெருங்கிய நண்பருமாகிய பத்ம பூஷண்‌ விருதுபெற்ற செந்தமிழ்ச்‌செல்வர்‌ உயர்திரு ம.ப.பெரியசாமித்தூரன்‌ அவர்கள்‌, தமது உடல்‌ நிலையையும்‌ பொருட்படுத்தாமல்‌ இந்நாலுக்கு அன்புடன்‌ அணிந்துரை வழங்கயிருக்கறார்கள்‌. அவருக்கு நான்‌ பெரிதும்‌ கடமைப்பட்டுள்ளேன்.

இச்சொற்பொழிவுக்கான கையெழுத்துப்‌ படிகளை உருவாக்க எனக்குத்‌ தேவையான நூற்றுக்கணக்கான குழந்தை நூல்களையும் இந்நூலின்‌ இறுதியில்‌ இடம்‌ பெற்றுள்ள பரிசு பெற்ற நூல்களின்‌ பட்டியலையும்‌ தந்து தவினார்‌, என் குழந்தை இலக்கிய முயற்சிகளுக்கு என்றும் துணை நிற்கும் இனிய நண்பர் திரு.ரத்னம் அவர்கள். இந்நூல் நல்ல முறையில் உருவாகப் பெரிதும் உதவியபுலவர் திரு.சண்முகம்பிள்ளை அவர்களுக்கும் திரு.பெ.நடராசன் அவர்களுக்கும், ஜீவன் அச்சகத்தாருக்கும் என் நன்றி உரித்தாகும்.

அழ. வள்ளியப்பா (காரைக்குடி, 10/12/1980).

Leave a comment