தஞ்சையில் குழந்தைகளுக்கானத் திருவிழா

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பஞ்சு மிட்டாய் சிறார் இதழ் மற்றும் உதிரி நாடக நிலம் குழுவினர் இணைந்து நடத்தும் “குழந்தைகளுக்கானத் திருவிழா” .

ஓரிகாமி, ஓலைக் கலை, பறையாட்டம் , நாட்டுப்புற இசை, கோமாளியுடன் சந்திப்பு, கதை சொல்லல், மரபு விளையாட்டுகள், ஓவியம் , சிறார்களுக்கான நாடகம், ஆடல் பாடல், சிறார் இதழ் & புத்தக அறிமுகங்கள், புத்தக வெளியீடு என நிகழ்வு முழுக்க முழுக்க சிறார்களுக்கான நிகழ்வாக இருக்கும்.

அவசியம் உங்கள் சுட்டிகளுடன் வாருங்கள்..ஒரு நாளை குதூகலமாய் கொண்டாடி மகிழ்வோம்.

நாள் : நவம்பர் 18 (ஞாயிறு)
நேரம் : காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம் : பெசன்ட் அரங்கள் , தஞ்சை (ஜூபிட்டர் திரையரங்கள் எதிரில் – பழைய பேருந்து நிலையம்)

நிகழ்வில் பங்குபெறும் விருந்தினர்கள் :

கோமாளியாக ‘கதை சொல்லி’ சதீஸ்
ஓரிகாமி (தாள் மடிப்புக் கலை) – தியாக சேகர்
ஓலைக் கலை – சவடமுத்து (நுண்பாட்டுக் கலைஞர்)
ஓவியப் பயிற்சி – ஓவியர் குமரேசன்
சிறார் நாடகம், பறை ஆட்டம் , நாட்டுப்புற இசை – உதிரி நாடக நிலம்
கதை சொல்லல், பாடல் & விளையாட்டு – பஞ்சு மிட்டாய் சிறார் குழு (பெங்களூரு)

பங்களிப்பு : ரூ.100/-

முன்பதிவு அவசியம் : பிரபு – 09731736363 , விஜயகுமார் – 9751372248

குறிப்பு :

மதிய உணவை வீட்டிலிருந்து உங்களுக்கும் குழந்தைகளுக்கும் எடுத்து வாருங்கள். ஒன்றாக அமர்ந்து கூட்டாஞ்சோறு உண்ணலாம். அப்படி இல்லையெனில் அருகில் வாங்கிக் கொள்ளலாம்.

கத்தரிக்கோல், வரை பொருட்கள் , வைத்து வரைய அட்டை போன்றவை எடுத்து வரவும்.

நிகழ்வில் பஞ்சு மிட்டாய் சிறார் இதழ் சார்பாக “கதைப் பெட்டி” வைக்கப்படும். சிறார்கள் தங்களது படைப்புகளை (கதை, ஓவியம், பாடல்கள், புதிர்கள், விடுகதை, கட்டுரை என அனைத்துவிதமாக படைப்புகளையும்) வீட்டிலே தயார் செய்து கொண்டு வந்து பெட்டியில் போடலாம். இந்தப் படைப்புகள் பஞ்சு மிட்டாய் & குட்டி ஆகாயம் சிறார் இதழுக்கு பரிந்துரைக்கப்படும். (படைப்புகள் சிறார்களது சொந்தப் படைப்புகளாக இருத்தல் வேண்டும்)

பங்களிப்பு : ரூ.100/- முன்பதிவு அவசியம் : பிரபு – 09731736363 , விஜயகுமார் – 9751372248

Leave a comment